24 special

திமுக எம்எல்ஏ வா இருந்துட்டு போகட்டும்' என சம்பவம் செய்த தமிழிசை...!

a rasa, tamilisai soundharrajen
a rasa, tamilisai soundharrajen

நாடு முழுவதும் சனாதனம் பற்றிய விஷயம் தான் தேசிய அளவில் பரபரப்பாக பேசப்பட்டு வரும் நிலையில் தற்போது தமிழிசை சௌந்தரராஜன் பேசியது அரசியல் வட்டாரங்களில் பெரிதும் ஈர்க்கப்பட்டு வருகிறது.   புதுச்சேரியில் உள்ள தாவரவியல் பூங்காவில் பாரத மாதாவின் சிலை மிகவும் சேதம் அடைந்துள்ளது என்பதால் புதுப்பிக்கும் பணிகள் நடைபெற்று வந்தன மாதா சிலையை புதுப்பிக்கும் பணிகள் நிறைவடைந்த உடன் புதுச்சேரி ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் சிலையை திறந்து வைக்க வந்திருந்தார் மேலும் புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி தலைமையில் ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் பாரதமாதா சிலையை திறந்து வைத்தார் மேலும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கு சிறப்பு விருந்தினர்களாக சபாநாயகர் செல்வம், அமைச்சர் ஜெயக்குமார், அனிபால் கென்னடி , தலைமைச்செயலர் ராஜீவ் வர்மா, வேளாண் செயலர் குமார், இயக்குநர் பாலகாந்தி ஆகியோர் பங்கேற்றனர். 


மேலும் இந்த பாரத மாதா சிலை தோட்டக்கலை பூங்காவில் இருந்ததாகவும் 2011 ஆம் ஆண்டு ஏற்பட்ட தானே புயலில் சேதமடைந்ததாகவும் தகவல் வெளிவந்த நிலையில் தற்போது புதுப்பிக்கப்பட்டு டெரகோட்டாவில் நிறுவப்பட்டுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளது. மேலும் பாரதமாதா சிலையை திறந்து வைத்த பிறகு செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்ட தமிழிசை சௌந்தரராஜன் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு சரமாரியான பதிலை கொடுத்தார் அதாவது செய்தியாளர்கள் தற்போது இந்தியாவில் வெடித்துள்ள சர்ச்சையான சனாதனப் பிரச்சனை குறித்து கேள்வி எழுப்பினர் அதற்கு தமிழிசை சௌந்தரராஜன் சனாதனத்தை பற்றி அனைவரும் அரசியல் செய்து வருவதாக கூறினார்மேலும் திமுக சட்ட உறுப்பினரான  அணிபால் கென்னடியை அருகில் வைத்துக் கொண்டே தமிழிசை சௌந்தரராஜன் திமுகவில் உள்ள முக்கிய அமைச்சர்களான முதலமைச்சர் மு க ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின் ஆராசா முதலியோரை கடுமையாக விமர்சித்து பேசினார், மேலும் சனாதனம் என்றால் என்ன என திமுகவிற்கு தெரியாது எனவும் கடுமையாக பேசினார். அந்த இடத்தில் திமுகவினரை கடுமையாக பேசும்போது திமுக சட்ட உறுப்பினரான  அணிபால் கென்னடியும் அருகில் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

மேலும் பாரதமாதா சிலைக்கு திமுக சட்டமன்ற உறுப்பினர் ஆன அணிபால் கென்னடியும் தமிழுசை சௌந்தரராஜனோடு சேர்ந்து மலர்தூவி நிகழ்ச்சியில் பங்கேற்றுக் கொண்டதும் தற்போது சர்ச்சையை கிளப்பியுள்ளது. மேலும் தமிழிசை சௌந்தரராஜன் தன் கட்சியில் உள்ள முக்கிய தலைவரை தான் கடிந்து பேசிக் கொண்டிருக்கிறார் என்பதை உணராமல் திமுக உறுப்பினர் அணிபால் கென்னடியும் இருந்தது திமுக வட்டாரங்களில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.ஏற்கனவே திமுகவிற்கும் பாஜகவிற்கும் சனாதன தர்மத்தில் பெரிய வாக்குவாத பிரச்சனை போய்க்கொண்டிருக்கும் நிலையில் தமிழிசை சௌந்தரராஜன் திமுக உறுப்பினரை அருகில் வைத்துக் கொண்டே திமுக மூத்த தலைவர்களை வெளுத்து வாங்கியது தற்போது அரசியல் வைரலாக போய்க்கொண்டிருக்கிறது.

உதயநிதி பேசிய சனாதன தர்மத்திற்கு எதிரான கருத்து தான் பரபரப்பாக அரசியல் வட்டாரங்களில் போய்க்கொண்டிருக்கும் நிலையில் தற்போது தமிழிசை சௌந்தரராஜன் பேசியது டிரெண்டாக இணையதளங்களில் உலா வந்து கொண்டிருக்கிறது, மேலும் தமிழிசை சௌந்தரராஜன் திமுகவை சேர்ந்தவர்களுக்கு தரமான பதில்  கொடுத்துள்ளார் என சில அரசியல் விமர்சனங்களும் எழுந்துள்ளன.ஏற்கனவே சனாதனத்தை பற்றி பேசிய ஆ.ராசாவை உங்களாலே திமுக தலைவர் ஆக முடியுமா என கேட்டு தமிழிசை சம்பவம் செய்தார், அதற்கே இந்த நிமிடம் வரை ஆ.ராசா பதில் பேசாமல் கப்சுப் என ஆகிவிட்டார். இந்த நிலையில் திமுக எம்.எல்.ஏ'வா இருந்துட்டு போகட்டும் என்பது போன்று தமிழிசை அலட்சியமாக டீல் செய்தது திமுகவினரை வாய் அடைக்க வைத்துவிட்டது என இப்பொழுதே கமெண்டுகள் பறக்கின்றன.