சில தினங்களுக்கு முன்பு தமிழ்நாடு முற்போக்கு சங்கம் சார்பில் நடைபெற்ற சனாதன ஒழிப்பு என்ற பெயரில் மாநாடு ஒன்று நடைபெற்றது அந்த மாநாட்டில் எதிர் கட்சிகளை சேர்ந்தவர்கள் கலந்து கொண்ட நிலையில் தமிழக விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் ஆகியோர் பங்கேற்றனர். அப்போது சனாதனத்தை பற்றி உதயநிதி ஸ்டாலின் கூறியது பாஜகவினர் மத்தியிலும் சனாதனத்தை ஆதரிப்பவர்கள் மத்தியிலும் கடும் எதிர்ப்பை ஏற்படுத்தி உள்ளது சனாதனம் என்பது சமூக நீதியை கெடுக்கும் வகையில் உள்ளது என்று கூறிய உதயநிதி ஸ்டாலின் சனாதன தர்மத்தை டெங்கு மலேரியா போன்ற கொடிய நோய்களோடு ஒப்பிட்டு தமிழ்நாட்டில் இருந்து விரட்டி ஒழிக்க வேண்டும் என்று பேசியது தற்போது சர்ச்சையை கிளப்பியுள்ளது.
இந்துத்துவத்தை அவமதித்து பேசிய உதயநிதி ஸ்டாலின் மீது இந்துக்கள் பலரும் கண்டனங்களை தெரிவித்து வரும் நிலையில் உள்துறை அமைச்சர் அமித்ஷா உதயநிதி ஸ்டாலின் இந்த பேச்சை கண்டித்து கடுமையாக விமர்சித்துள்ளார். இது மட்டும் இல்லாமல் சனாதன தர்மத்தை மதிக்கும் அனைவரும் உதயநிதியின் பேச்சுக்கு தங்களது எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர் அனைத்து மாநிலங்களிலும் கூட உதயநிதி பேசிய சனாதனம் தான் விவாதங்களாக ஒளிபரப்பாகி வருகிறது மேலும் அயோத்தியை சேர்ந்த பரகாம்ச ஆச்சாரியா என்ற சாமியார் உதயநிதியை எதிர்த்து அவரது தலையை சீவுவதற்கு 10 கோடி அறிவித்துள்ளார். இந்நிலையில் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து உதயநிதி ஸ்டாலின் என் தலையை சீவுவதற்கு பத்து ரூபாய் சீப்பு போதுமே பத்து கோடி எதற்கு என்று கிண்டலடித்து பேசியதும் குறிப்பிடத்தக்கது இவ்வாறு சனாதனம் குறித்து தவறான முறையில் பேசிய உதயநிதி ஸ்டாலின் மீது வழக்கு வழக்கு பதிவும் செய்யப்பட்டுள்ளது
பேசுவதையெல்லாம் பேசிவிட்டு உதயநிதி ஸ்டாலின் நான் பேசுவதில் உறுதியாக இருக்கிறேன் என்றும் இதனால் வரும் விளைவுகளை சட்டப்படி சந்திக்க தயாராக இருக்கிறேன் நான் எதற்கும் பயப்படவில்லை என்று கூறினார். ஆனால் தற்போது உதயநிதி பேசியதற்கு மக்கள் மத்தியில் இருந்து போராட்டங்கள் மற்றும் பல எதிர்ப்புகள் வந்து விடுமோ என்ற பயத்தில் தனது வீட்டிற்கு முன்பு முன்பைவிட அதிகமான போலீஸ் அதிகாரிகளை வைத்து காவல் போட்டு உள்ளார் என்ற செய்தியும் வெளியாகி உள்ளது. சென்னையில் உள்ள பசுமைவழிச் சாலையில் நீதிபதிகள் மற்றும் முக்கிய தலைவர்களின் இல்லங்கள் இருப்பதால் எப்பொழுதுமே காவல்துறை அதிகாரிகள் பாதுகாப்பு இருக்கும் இந்நிலையில் உதயநிதியின் சனாதனம் சர்ச்சை வெடித்த உடன் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு கூடுதல் அதிகாரிகள் பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
மேலும் உதயநிதி பேசியது தேசிய அளவில் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ள நிலையில் தன்னுடைய இல்லத்திற்கு பலத்த பாதுகாப்பு போட்டதன் பின்னணி என்ன என்பதை விசாரித்த போது உத்திர பிரதேச மாநிலத்தில் இருக்கும் சாமியார் உதயநிதியை மிரட்டியதோடு மட்டுமல்லாமல் தமிழகத்தில் உள்ள பாஜகவினர் ஏற்கனவே அமைச்சர் சேகர்பாபு இல்லத்தை முற்றுகையிட்டு போராட்டத்தை நடத்தப்போவதாக வேறு கூறி வருகின்றனர். இந்நிலையில் எங்கே உதயநிதி வீட்டிற்கும் சென்று பாஜகவினர் போராட்டத்தை நடத்தி விடுவார்களோ என்ற பயத்திலும், ஆளுங்கட்சியாக இருக்கும் சமயத்தில் நம் வீட்டில் போராட்டம் நடத்தினால் அசிங்கமாகி விடுமே என்பதை கருத்தில் கொண்டு தனது இல்லத்திற்கு தமிழ்நாடு காவல்துறையை வைத்து பலத்த பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்துள்ளார் என்ற செய்திகளும் வெளிவந்துள்ளது.'ஆமா அப்படித்தான் பேசினேன்' வெளியில் கர்வமாக பேசிவிட்டு வீட்டிற்கு பாதுகாப்பை அதிகரித்த உதயநிதியை பற்றி தான் அரசியல் வட்டாரங்களில் பரபரப்பான பேச்சு போய்க் கொண்டிருக்கிறது.