
கடந்த 2022 ஆம் ஆண்டு கோவையில் நடந்த கார் குண்டு வெடிப்பு சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது. ஆனால் ஆர்மபத்தில் இது சிலிண்டர் வெடிப்பு என ஊடகங்கள் மூலம் திசை திருப்பியது. இது தற்போது தமிழக அரசுக்கு பெரும் சிக்கலை உருவாக்கியுள்ளது. இதனடியே தான் முக ஸ்டாலின் தீவிர டெல்லி எதிர்ப்பை காட்டி வருகிறார். பதற்றத்தில் உளற ஆரம்பித்துள்ளார்.. கோவையில் கார் குண்டுவெடிப்பு தொடர்பாக , என்.ஐ.ஏ விசாரணை மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக இவ்வழக்கில் இதுவரை 17 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். ஏற்கனவே இவ்வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள 12 பேர் மீது என்.ஐ.ஏ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ள நிலையில், தற்போது கைது செய்யப்பட்டுள்ள மேலும் 5 பேர் மீது பூந்தமல்லி நீதிமன்றத்தில் என்.ஐ.ஏ குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்துள்ளது.
இதில் ஷேக் இதயத்துல்லா, உமர் பாரூக், பவாஸ் ரகுமான், சரண் மாரியப்பன் மற்றும் அபு ஹனிபா ஆகிய 5 பேர் மீது என்.ஐ.ஏ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. இவர்கள் 5 பேரிடம் என்.ஐ.ஏ நடத்திய விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. கடைசியாக குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட ஐந்து பேரும் தீவிரவாதத்திற்கு நிதி அளித்தது தெரியவந்துள்ளது. மேலும், தீவிரவாத தாக்குதல் மற்றும்கோவை சங்கமேஸ்வரர் கோயில் முன்பு நடந்த கார் குண்டு வெடிப்பு விவகாரத்தில் தொடர்பு இருப்பதும் விசாரணையில் உறுதியானது.
இந்த குற்றப் பத்திரிகையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த வழக்கில் சம்பந்தப்பட்டவர்கள் 2021, 2022 காலகட்டத்தில் போலியாக கோவிட் தடுப்பூசி சான்றிதழ் வழங்கிய விவகாரத்தில் மிகப்பெரிய மோசடியில் ஈடுபட்டதும், அந்த மோசடியின் மூலமாக சம்பாதிக்கப்பட்ட நிதியை பயன்படுத்தி கார் குண்டு வெடிப்புக்கு தேவையான வெடிபொருட்கள் உள்ளிட்டவற்றிற்கு நிதி அளித்ததும் தெரியவந்துள்ளது. கடந்த 2019 ஆம் ஆண்டு கோவை குண்டு வெடிப்பில் கைது செய்யப்பட்ட தீவிரவாத தலைவன் முகமது அசாருதீன் விவகாரத்தில் சிறையில் வைக்கப்பட்டதற்கு எதிராக செயல்பட்டதும் தெரியவந்துள்ளது.
இதற்கிடையே தான் இந்த விவகாரம் மேலும் தீவிரமடைந்துள்ளது. இந்த கார் குண்டுவெடிப்பை முதலில் யார் சிலிண்டர் வெடிப்பு என பரப்பியது அதை தொடர்ந்து சொல்ல வைத்தது யார் அவர்களுக்கும் இதற்கும் எதாவது தொடர்பு உள்ளதா. என்ற கோணத்தில் முடுக்கிவிட்டுள்ளார்கள். சிலிண்டர் வெடிப்பு என ஊடகங்களுக்கு தகவல் தெரிவித்த நபர் யார் என்ற விவரங்களும் சிக்கியுள்ளதாம். இந்த பல உயிர்களை பலி வாங்க செய்யப்பட்டு குண்டுவெடிப்பு நிகழ்வை மடைமாற்றம் செய்ய துடித்த ஊடகங்கள் மீது தற்போது என்.ஐ.ஏ விசாரணையை துவங்க உள்ளன என தகவல்கள் வெளியாகி உள்ளது.
இதற்கிடையே ஆளுநர் ஆர்.என் ரவி நீடித்தால், தி.மு.க.,வெற்றிக்கொடி நாட்டும்' என, தி.மு.க.,வினர் புலம்பி வருகிறார்கள் ஆனால் உள்ளே அல்லு இல்லை . 'புதுச்சேரியில் காங்கிரஸ் முதல்வராக இருந்த நாராயணசாமியை எப்படி அப்போதைய துணைநிலை கவர்னர் கிரண் பேடி ஓடவிட்டாரோ, அதேபோல தமிழகத்திலும் நடக்கும்' என்கிறது பா.ஜ.க ., மேலிடம்.தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு சரியில்லை' என, மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு பல புகார்கள் வந்துள்ளன. உள்துறை அமைச்சர் அமித் ஷா அடுத்த மாதம் தமிழகம் வருவதற்கான வாய்ப்புகள் உள்ளதாம். அப்போது, அவர் தமிழக தலைமை செயலர் மற்றும் டி.ஜி.பி,யை அழைத்து, அவர்களிடம் புகார்கள் குறித்து விவாதிப்பார் என, சொல்லப்படுகிறது; அப்போது கவர்னர் ரவியும் உடன் இருப்பாராம்குறிப்பாக கோவை குண்டு வெடிப்பு தொடர்பான பல ஆவணங்கள் டெல்லி அனுப்பியுள்ளார் ஆளுநர். அதை வைத்து தான் அடுத்த நகர்வுகள் இருக்கும் என்கிறார்கள் .