24 special

உதவியவர்களுக்கு துரோகம் செய்த விஜய்.... கேப்டன் மகன் பிரபாகரன் உண்மையை உடைத்தார்...

VIJAY, VIJAYAPRABHAKARAN
VIJAY, VIJAYAPRABHAKARAN

தமிழ் சினிமாவில் இப்படி ஒரு நடிகரை இதுவரை பார்த்திருக்கவே முடியாது அதாவது சினிமா வட்டாரம் என்றாலே போட்டி நிறைந்த வட்டாரம் மற்ற துறைகளைப் போன்று அதிக போட்டிகள் நிறைந்த ஒன்றுதான்! ஆனால் அப்படிப்பட்ட போட்டியான திரை உலகிலும் ஒரு முன்னணி நடிகராக உயர்ந்து தனக்கு இருந்த பாகுபாடு அனைத்தையும் உடைத்து எறிந்து மக்களின் மனதை வென்று திரை பிரபலங்கள் அனைவரது மனம் என எல்லார் மனதிலும் நல்லவராகவும் உதவுவதாகவும் கருணை உள்ளவராகவும் இருந்தவர் கேப்டன் விஜயகாந்த். திரை உலகில் யாரிடம் வேண்டுமானாலும் கேப்டனை குறித்து கேட்டால் அவர் எனக்கு இந்த உதவியை செய்தார், இதைக் கேட்டேன் உடனடியாக செய்து கொடுத்தார். அவர் அப்படி பார்த்துக் கொண்டார் என்னை, என அனைவருக்கும் உதவும் தன்மையை கொண்டிருந்தார் விஜயகாந்த் அது மட்டும் இன்றி இவரை குறித்து எந்த ஒரு திரை பிரபலமும் இதுவரை ஒரு குறையையும் முன் வைத்ததில்லை.


அதே சமயத்தில் தன்னுடைய படப்பிடிப்பு தளத்தில் வரும் மக்கள் அனைவருக்கும் விருந்தளித்து மகிழ்பவர்.  அதற்கேற்றார் போல் மக்களும் கேப்டனை தூக்கிக் கொண்டாட ஆரம்பித்தனர். இதனால் மக்களுக்கு வேண்டிய சேவைகளையும் நலன்களையும் வழங்குவதற்கு அரசியலையும் தொடங்கினார் கேப்டன், அரசியலில் தனித்து நிற்கும் பொழுது தொடர்ச்சியாக வெற்றியை சந்தித்து வந்த விஜயகாந்த் கூட்டணியில் இணைந்த பொழுது பலரின் போலித்தனமும் துரோகமும் அவரை தோல்விக்கு தள்ளியது. மேலும் படிப்படியாக அவரது உடல்நலமும் பாதிப்பிற்குள்ளாக கடந்த வருடம் உடல் நலக்குறைவால் மரணமும் அடைந்தார் அவரது மரணத்திற்கு எவ்வளவு மக்கள் கூடினார்கள் என்பது சொல்லி தெரிய வேண்டியது அல்ல! எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதாவின் மறைவிற்கு எவ்வளவு கூட்டம் கூடியதோ அந்த அளவிற்கான கூட்டம் விஜயகாந்தின் மறைவிற்கும் கூடியது..

அப்பொழுது விஜயகாந்தின் உடலை பார்ப்பதற்கு வந்த விஜய்க்கு பெரும் எதிர்ப்பு நிலவியது, இதற்கு காரணம்  விஜயின் ஆரம்பத்திலே வாழ்க்கையில் மிகவும் துவண்டு விமர்சனத்தால் மனம் உடைந்து போய் இருந்திருக்கிறார் விஜய் சந்திரசேகரின் இயக்கத்தில் பல படங்களில் நடித்து வெற்றி கண்டதால் அந்த நன்றி உணர்வை மறக்காத கேப்டன் விஜய்யின் இரண்டாவது படமான செந்தூரப் பாண்டியன் திரைப்படத்தில் ஒரு முன்னணி மற்றும் முக்கிய வேடத்தில் நடித்து விஜயை மக்களுக்கு அறிமுகப்படுத்தியதோடு நல்ல வரவேற்பையும் பெற்றுக் கொடுத்தார். ஆனால் விஜயம் அதற்குப் பிறகு விஜயகாந்த் கண்டு கிட்ட தாக தெரியவில்லை. ஏன் உடல்நிலை சரியில்லாத போது கூட விஜயகாந்தை அவர் சந்திக்கவில்லை என்று கூறப்படுகிறது.மேலும் விஜய்காந்த் ஒரு முறை தன் மகனுடன் சேர்ந்து நடிக்கும்படி விஜய்யிடம் கேட்ட பொழுதும் அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

அரசியலிலும் பெரும் பின்னடைவு உடலிலும் பலமிழந்து தன் மகன்களும் சினிமா மற்றும் அரசியலில் திண்டாடிக் கொண்டிருந்த சமயத்தில் கை கொடுக்கத் தவறிய விஜய் தற்போது அரசியலுக்கு வந்தும் 2024 தேர்தலில் தேமுதிகவிற்கு குறிப்பாக விஜயகாந்தின் மகனுக்கு ஆதரவாக நின்று இருக்கலாம் என்ற ஒரு பேச்சும் தற்போது உலா வருகிறது. இந்த சமயத்தில் சமூக வலைதளத்தில் வீடியோ ஒன்று வைரனாகி வருகிறது. அதில் கேப்டன் மகனான பிரபாகரன் ஒரு பேட்டியில், விஜய் அவர்களை நான் என் அப்பாவின் இறுதி சடங்கின்பொழுதுதான் பார்த்தேன் என் தோள் மீது கை வைத்து டேக் கேர் பிரதர் என்று மட்டும் கூறிவிட்டு சென்று விட்டார். அதற்கு முன்பாக அவரை சந்தித்ததும் இல்லை, அவரிடம் பேசியதும் இல்லை! என் அப்பாவிற்கும் அவருக்கும் உள்ள உறவு அவருடைய தந்தையோடு நின்று விட்டது. அதை விஜய் எடுத்துச் செல்லவில்லை என மனவேதனையில் பேசி இருக்கிறார். இதற்கு நெடிசன்கள் பலர் நன்றி கெட்டவனாய் இருந்திருக்கான் போலையே என பலவாறு விஜயை விமர்சித்து வருகின்றனர்.