அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கில் பல்வேறு சட்ட சிக்கல்கள் எழுந்து இருப்பதாகவும் குறிப்பாக செந்தில் பாலாஜியை தமிழகத்தில் ஆட்சியில் இருக்கும் திமுக அரசு காப்பாற்ற முயலுவதாகவும் அமலாக்க துறை நேரடியாக வாதங்களை வரும் நாட்களில் வைக்க இருக்கிறதாம்.
தமிழகத்தில் ஆய்வில் ஈடுபட்ட வருமான வரித்துறை அதிகாரிகள் தாக்கப்பட்ட சம்பவமே அதற்கு சான்று என்றும், அமைச்சராக தொடரக்கூடிய ஒரு நபர் மீது விசாரணை எவ்வாறு நேர்மையாக நடக்கும் என தற்போது அமலாக்க துறை தரப்பில் முடிவு செய்யப்பட்டு இருப்பதால் அடுத்தடுத்து மிக பெரிய மாற்றங்கள் அரங்கேரும் என்று தற்போது தகவல் வெளியாகி இருக்கிறது.
இதையடுத்து செந்தில் பாலாஜி வழக்கை வேறு மாநிலத்திற்கு மாற்ற இருப்பதாக சொல்லப்படுகிறது. ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கு, தமிழகத்திலிருந்து கர்நாடகாவிற்கு மாற்றப்பட்டது; காரணம், அப்போது ஜெயலலிதாதமிழக முதல்வராக இருந்தார். இதனால் சரியான முறையில் வழக்கு நடைபெறாது என திமுகவை சேர்ந்த மறைந்த அன்பழகன் வழக்கு தொடர்ந்தார்,இதையடுத்து ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கு கர்நாடக மாநிலத்திற்கு மாற்றப்பட்டது.
அதே வழியை தற்போது செந்தில் பாலாஜிக்கு எதிராக பாஜக பின்பற்றலாம் என புதுடில்லி அரசியல் வட்டாரங்களில் பரபரப்பாக பேசப்படுகிறது. இந்த வழக்கு தமிழக நீதிமன்றத்தில் நடைபெற்றால், அதை தடுக்க தி.மு.க., அரசு மற்றும் அதிகாரிகள் தரப்பில் பல முயற்சிகள் மேற்கொள்ளப்படும் மேலும் திமுகவினர் சாட்சியங்களை கலைக்க உதவலாம்
இதனால் சட்டம் - ஒழுங்கு பிரச்னை ஏற்படும்; கரூரில் ரெய்டிற்கு சென்ற வருமான வரித்துறை அதிகாரிகளை தி.மு.க.,வினர் தாக்கினர்; இதை தமிழக காவல்துறை கண்டுகொள்ளவில்லை என பல காரணங்களை குறிப்பிட்டு உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ய அமலாக்க துறை தயாராகி வருகிறதாம்.
இதனால் தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு இரண்டு வாய்ப்புகள் மட்டுமே இருப்பதாகவும் ஒன்று தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜியை அமைச்சரவையில் இருந்து நீக்கி அவர் தற்போது அமைச்சராக இல்லை எனவே வழக்கை தமிழகத்திலேயே நடத்தலாம் என நீதிமன்றத்தில் வாதத்தை வைப்பது இரண்டாவது செந்தில் பாலாஜியை அமைச்சராக தொடர செய்து அவர் மீதான விசாரணையை ஒரு வேலை உச்சநீதிமன்றம் வேறு மாநிலத்திற்கு மாற்றினால் அதனை எதிர் கொள்வது மட்டுமே தற்போது முதல்வர் ஸ்டாலின் கையில் இருக்கும் வாய்ப்பாக பார்க்க படுகிறது.