24 special

எல்லாத்தையும் அண்ணாமலை பக்கம் திருப்பி விட்ட மேகலா....!அடுத்தடுத்து என்ன நடக்க போகிறது... ?

Annamalai,senthil balaji wife
Annamalai,senthil balaji wife

ஊழல் வழக்கில் சிக்கியுள்ள செந்தில்பாலாஜிக்கு அறுவை சிகிச்சை முடிந்து உள்ளதால் தற்போது வரை, சிகிச்சையில் இருக்கும் அவரிடம் அமலாக்க துறையினரால் கிட்ட கூட நெருங்க முடியாமல் விசாரிக்கவும் முடியாமல் திணறி வராங்க ..அதே வேளையில் எவ்வளவு நாள் தான் இப்படியே இருப்பது.. எப்படியாவது விசாரணையில்  இருந்து செந்தில் பாலாஜியை காப்பாற்ற வேண்டும் என்ற முயற்சியில் சட்டபோராட்டம் செய்து வருகிறார் அவரது மனைவி மேகலா.


அமலாக்கு துறையினரால் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவால் உள்ள செந்தில் பாலாஜியை விடுவிக்க கோரி  அவரது மனைவி மேகலா சென்னை உயர்நீதி மன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்திருந்தார். இப்போது வரை அந்த மனு மீதான விசாரணை நிலுவையில் இருக்கிறது. இப்படியான நிலையில் தான்  அண்ணாமலைக்கு எதிராக மீண்டும் ஒரு மனுவை தாக்கல் செய்து உள்ளார் மேகலா.

அந்த மனுவில் மனுவில், கடந்த 2022 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் மத்திய அரசின் விசாரணை அமைப்புகள் என் கணவர் மீது நடவடிக்கை எதுக்கும்ன்னு சொல்லி வராரு .. அதே போல இப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு வருது . அரசியல் காழ்புணர்ச்சியால் தான் இதை எல்லாம் செய்கிறார் அண்ணாமலை என்ற பாணியில் மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. அதுமட்டுமல்லாமல்..  தன் கணவர் செந்தில் பாலாஜியை நீதிமன்ற காவலில் வைக்க எதிர்ப்பு தெரிவித்து தாக்கல் செய்யப்பட்ட மனு மீது பரிசீலனை  செய்யாமல் நீதி மாற்ற காவலில் வைத்து இருக்காங்க. இது சட்ட விரோதமானது. அதனால் அவரை விடுவிக்க வேண்டும் என கேட்டு உள்ளார் மேகலா. 

ஆனால் இதற்கு பதில் அளித்த அமலாக்கத்துறையோ .....  ஜூன் 14 ஆம் தேதி காலை செந்தில் பாலாஜியை கைது செய்வதற்கு முன் சட்ட விரோத காவலில் வைக்கவில்லை . சாட்சிகளை கலைத்து ஆதாரங்களை அழிக்க வாய்ப்பு இருந்ததால் தான்  அவரை கைது செய்தோம் ... இதுவரை திரட்டப்பட்ட ஆதாரங்கள் மூலம் சட்ட விரோத பணப்பரிமாற்றம் குற்றம் புரிந்துள்ளார் என நம்புவதற்கு போதுமான காரணங்கள் இருக்கு . அவருக்கு இப்போது அறுவை சிகிச்சை செய்யப்பட்டு உள்ளதால்  இதுவரை அமலாக்க துறை அவரை காவலில் எடுத்து விசாரிக்க வில்லை எனவே காவலில் எடுத்து விசாரிக்க வாய்ப்பு அளிக்க வேண்டும் என அமலாக்க துறை சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது..

ஒரு பக்கம் செந்தில் பாலாஜியை அமலாக்க துறை விசாரிக்க கூடாது அவரை விடுவிக்க வேண்டும் என அவரது மனைவி மனு போட்டு சட்ட போராட்டம் நடத்தும் அதே வேளையில்.. அதெல்லாம் முடியாது போதுமான ஆதாரங்கள் எங்களிடம் இருக்கு...  விசாரிக்க வாய்ப்பு அளிக்க வேண்டும் என அமலாக்கத்துறை  மறுபுறம் நேர் எதிராக நிற்கிறது .இதுல என்ன உற்றுநோக்க வேண்டி இருக்கிறது என்றால்.... ஒரு கட்சியின்  மாநில தலைவர் அண்ணாமலை.. அண்ணாமலை குற்றசாட்டு வைப்பதற்கும்.. அமலாக்க துறை வருவதற்கும்  என்ன சம்மந்தம் இருக்கு என்ற  கேள்வியை முன் வைக்குறாங்க மக்கள்...

இதுல அடுத்தகட்டமாக சென்று... அண்ணாமலை அரசியல் அனுபம் இல்லாதவர்.... நாங்க எல்லாம் எத்தனையோ பேர் பார்த்துட்டோம்..  என்றெல்லாம் தொடர்ந்து ஆளுங்கட்சி  அரசியல் புள்ளிகள் பலமுறை அண்ணாமையை விமர்சனம்  செய்து இருக்கு.... அதே போல  அண்ணாமலையும் ஆளுங்கட்சியை நேருக்கு நேராக எதிர்க்கவும் செய்யுறாரு.  ஆளுங்கட்சி தரப்பில் இருந்து அண்ணாமலையை  பெரிதாக நினைக்கவில்லை என்றவாறு சொல்லி வந்தாலும்.... அதே ஆளுங்கட்சியின் மிக மிக முக்கியத்துவம் வாய்ந்தவராக கருதப்படும் செந்தில் பாலாஜி மனைவி  தரப்பு சொல்வதோ..இவர் தாங்க அப்பத்துல இருந்தே... மத்திய  விசாரணை அமைப்புகள் கண்டிப்பாக வரும்..   விசாரணை செய்வாங்கன்னு சொல்லிகிட்டே இருந்தாருனு சொல்லி இருக்காங்க.

நெருங்கி வரும் நாடாளுமன்ற தேர்தல் ஒருபக்கம்  இருக்க... மறுபக்கம் இப்போதே அனல் பறக்கும் அரசியல்  வேட்டைகள் நடந்துகொண்டு தான் இருக்கு. மக்களும் நடக்கும் விஷயங்களை பார்த்து, அடுத்து என்ன நடக்க உள்ளது என்பதை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.