இரண்டாவது நாளாக கரூரில் தொடர்ந்த ரெய்டில் கிடைத்த அதிர்ச்சி தகவல்கள், பெரிய அளவில் சிக்கப்போகும் முதல்வர் குடும்பம்!
கரூர் கேங்கின் ஆட்டம் அதிகரித்துள்ளது என்ற தகவல்கள் வருமானவரித்துறை அதிகாரிகளுக்கு கிடைத்ததன் அடிப்படையில் கரூர் மாவட்டத்தில் அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். நேரம் செல்ல செல்ல பல முக்கிய ஆவணங்கள் இந்த ரெய்டில் பறிமுதல் செய்ததாகவும் கூறப்படுகிறது. மேலும் கடந்த முறை அதிகாரிகளுக்கு ஏற்பட்டது போன்று எந்த ஒரு பாதிப்பும் இந்த முறை ஏற்படக்கூடாது என்பதில் கவனமாக இருக்கும் மத்திய அரசு தற்போது நடைபெறும் ரெய்டிலும் அதிகாரிகளுக்கு பாதுகாப்பு அளிப்பதற்காக சி ஆர் பி எஃப் வீரர்களை பாதுகாப்பிற்கு அனுப்பி உள்ளது.
இதன் பின்னணியை விசாரணை செய்யும் பொழுது கடந்த முறை ரெய்டு நடைபெற்று சில நாட்கள் தான் ஆகின்றது, இதனால் அடுத்து ரெய்டு வருவதற்கு இன்னும் பல மாதங்களாகலாம் விரைவில் வரமாட்டார்கள் என நினைத்துக் கொண்டு சற்று அலட்சியமாக ஆவணங்களை கையாண்டுள்ளனர் கரூர் கும்பல் என்று வருமானவரித்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்ததால் தற்போது மீண்டும் எந்தெந்த ஆவணங்கள் கையாளப்பட்டுள்ளது என்பதை தெரிந்து கொள்வதற்காகவே வருமானவரித்துறை இந்த சோதனையில் இறங்கியதாக தெரிகிறது. இந்த ரெய்டில் செந்தில் பாலாஜிக்கு மிகவும் நெருக்கமானவர்களின் வீடுகளில் எங்கு எங்கு பணம் புழங்குகிறது, கரூர் கேங் எப்படி டாஸ்மாக்கில் இருந்து பணத்தை வசூலிக்கிறது? கரூர் கேங்கில் இருந்து பணம் எங்கு செல்கிறது? யார் யாருக்கு எவ்வளவு செல்கிறது? எவ்வளவு சதவிகிதம் செல்கிறது? என்பதை கண்டுபிடிப்பதற்காகவே இந்த ரெய்டு நடைபெற்றுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன.
தற்போது இரண்டு தினங்கள் கடந்தும் 3வது தினமாக சில இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனைகள் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த மாதம் நடைபெற்ற சோதனையில் சக்தி மெஸ் வீடு மற்றும் ஹோட்டல் உள்ளிட்ட பத்திற்கு மேற்பட்ட இடங்களில் ஆள் இல்லாத காரணத்தினால் சீல் வைத்து சென்றனர் ஐ டி அதிகாரிகள். தற்போது ஒரு சிறிய கால இடைவெளியிலே மறுபடியும் வருமான வரித்துறை அதிகாரிகள் ரைடில் இறங்கி திமுக ஒப்பந்ததாரர்கள் டாஸ்மார்க் ஒப்பந்ததாரர்கள் அரசு ஒப்பந்ததாரர்கள் மற்றும் மின்சார ஒப்பந்ததாரர்கள், வீடு மற்றும் அலுவலகங்கள் போன்ற இடங்களில் நேற்று முன்தினத்தில் இருந்தே சோதனை மேற்கொண்டனர். மேலும் சக்தி மெஸ் கார்த்தி வீடு மற்றும் அலுவலகங்களில் வருமானவரித்துறை அதிகாரிகள் சில ஆவணங்களை கைப்பற்றியுள்ளதாகவும் அதனை வைத்து பழனி முருகன் நகைக்கடையிலும் இந்த முறை ஐடி அதிகாரிகள் சோதனை மேற்கொண்டுள்ளனர் எனவும் தகவல்கள் தெரிவிகின்றன.
இதுகுறித்து தனியார் youtube சேனலுக்கு சவுக்கு சங்கர் அளித்த பேட்டியில் கூறியதாவது செந்தில் பாலாஜிக்கு போகும் ரெய்டு எல்லாம் செந்தில் பாலாஜியை குறி வைத்து அல்ல முதல்வர் ஸ்டாலினை குறிவைத்து தான் இத்தனை ரெய்டுகள் மேற்கொள்ளப்படுகிறது. செந்தில்பாலாஜிக்கு நெருக்கம் காட்டும் முதல்வரும் விரைவில் பெரிய விவகாரத்தில் சிக்கப்போகிறார் என்ற தகவலை தெரிவித்துள்ளார். மேலும் அவர் இது குறித்து குறிப்பிடும் போது டாஸ்மாக்கில் செல்லும் பங்கு என்பது சிறிய தொகை ஆனால் இவர்கள் செந்தில்பாலாஜிக்காக இப்படி அலறி அடித்து ஓடுவதற்கு பின்னணியில் பெரிய விவகாரம் ஒன்று உள்ளது அது விரைவில் வெளிவரும் என்றும் தெரிவித்துள்ளார்.
தேசிய அரசியலில் காலூன்றி விடலாம் என்று நினைத்து ஆசை வளர்த்துக் கொண்ட முதல்வர் எண்ணத்தில் இடி விழுந்தது மட்டுமின்றி தற்போது வருமானவரித்துறையும் கரூரில் அலசி ஆராய்வது வேறு முதல்வர் தரப்பிற்கு பேரதிர்ச்சியை அளித்துள்ளதாக அறிவாலய வட்டாரங்கள் தகவல்கள் தெரிவிக்கின்றன!