24 special

விடியல் ஆட்சியின் லட்சணத்தை பாருங்கள்.... இறந்தவரின் உடலை டோலி கட்டி தூக்கி செல்லும் அவலம்....

MKSTALIN, KPY BALA
MKSTALIN, KPY BALA

திமுக பதவி ஏற்ற காலத்தில் இருந்து இப்போ வரைக்கும் பல நலத்திட்டங்கள் செயல்படுத்த பட்டுள்ளது என்று கூறுகிறது..என்ன செயல்படுத்தப்பட்டு என்ன பண்ண கஷ்டப்படுற மக்கள் கஷ்டப்பட்டுட்டுத்தான் இருக்கார்கள்..அப்டித்தாங்க இங்க இறந்தவரின் உடலை தூக்கி செல்ல கூட சாலை வசதி இல்லாமல் டோலி கட்டி தூக்கி செல்லும் அவலம் நிகழ்ந்துள்ளது..திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த ஆலங்காயம் அருகே  கடல் மட்டத்திலிருந்து 1500 அடி உயரத்தில் அமைந்துள்ள நெக்னாமலை கிராமத்தில்  172 குடும்பங்களை சேர்ந்த  750 பேர் வசித்து வருகின்றனர். ஆட்சி மாற்றத்திற்கு பின் விடியா திமுக அரசு சாலை அமைப்பதற்கான எந்த நடவடிக்கையும் எடுக்காததால் தொடர்ந்து அப்பகுதி மக்கள் டோலி கட்டி தூக்கி செல்லும் அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர் இதனை அறிந்த சின்னத்திரை நடிகர் பாலா நெக்னாமலை கிராமத்திற்கு நேரில் சென்று புதிய ஆம்புலன்ஸ் ஒன்றை  வழங்கினார்.


இதை தொடர்ந்து தற்போது அந்த சாலையில் கற்கள் பெயர்ந்து  ஆம்புலன்ஸ் செல்ல முடியாமல் உள்ளதால் அந்த  மலை கிராமத்தை சேர்ந்த முத்து   என்பவர் உடல்நிலை சரியில்லாமல் வேலூரில் உள்ள தனது மகள் வீட்டில் தங்கி சிகிச்சை பெற்று வந்தார்.இன்று அவர் திடீரென உயிரிழந்த நிலையில் உயிரிழந்த  முதியவரின் உடலை சொந்த ஊரான நெக்னாமலை கிராமத்திற்கு கொண்டு செல்ல சாலை வசதி இல்லாததால் மீண்டும்  சடலத்தை டோலி கட்டி தூக்கி செல்லும் அவலம் தொடர்கிறது.சுதந்திரம் அடைந்து 77 ஆண்டுகள் ஆகியும்  மலை கிராமத்தில் சாலைவசதி இல்லாமல் மீண்டும் டோலி கட்டி தூக்கி செல்லும் அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது மிகுந்த வேதனையாகத்தான் உள்ளது. அரசின் அலட்சியப்போக்காள் இந்த மக்கள் இன்னும் எத்தனை காலம் அவதிக்கு உள்ளாக போகிறார்கள் என்று தெரியவில்லை...