
ஒருவருக்கு மனதிற்கு பிடித்த மனைவி மற்றும் அழகான குழந்தைகள் உறவினர்கள் என மகிழ்ச்சி சூழ்ந்திருந்தாலும் தனக்கு ஒரு சொந்தமாக கனவு இல்லம் என்று இருக்க வேண்டும் என்பது பல குடும்பத் தலைவர் மற்றும் தலைவிகளின் முக்கிய ஆசையாகவும் கனவாகவும் இருக்கும். அதுமட்டுமின்றி என்னுடைய வாழ்நாளில் எனது கனவு இல்லத்தை எப்படியாவது கட்டியாக வேண்டும் என்பதை முக்கிய குறிக்கோளாகவுமே வைத்து பணத்தை சேர்த்து வைப்பார்கள். சிலர் சேமிக்கும் பணம் நம்மிடம் நிற்கவில்லை என்று நினைக்கும் பொழுது அவர்களுக்கு வீட்டு கடன் கை கொடுக்கிறது. இருப்பினும் சேமிப்பையே பலர் விரும்புவார்கள் அப்படி தான் சிறுக சிறுக சேமிக்கும் பணத்தில் கனவு கண்ட வீட்டை கட்டும் முயற்சிகள் இறங்கும் பொழுது எந்த கட்டுமான பொருட்களை வாங்குவது எங்கு வாங்குவது அதை எப்படி தரம் பார்ப்பது எவரிடம் சென்று இதற்கான அறிவுரைகளை கேட்பது எந்த இன்ஜினியரிடம் நம் வீடு கட்டும் பொறுப்பை கொடுப்பது. என்று பல கேள்விகள் மண்டைக்குள் ஓடிக்கொண்டே இருக்கும். இவை அனைத்திற்கும் எளிதாக தீர்வும் காண முடியும்.
ஆனால் தற்போது கட்டுமான முறையில் பல புதிய பரிணாமங்களும் புதிய வளர்ச்சிகளும் புதிய முறைகளும் கொண்டுவரப்பட்டுள்ளது. எடுத்துக்காட்டாக ஆரம்பத்தில் செங்கல் சிமெண்ட் வருவதற்கு முன்பாகவே களிமண்ணில் வீடு கட்டி இருப்பார்கள், மேல் கூரையாக தென்னை இலையை பின்னி போட்டிருப்பார்கள். ஆனால் தற்போது அப்படியா கட்டப்படுகிறது இல்லை சுடுமண் செங்கலை பயன்படுத்தி சிமெண்ட் பயன்படுத்தப்பட்டு கட்டுப்படுகிறது. ஆனால் இந்த செங்கல் மற்றும் சிமெண்டிற்கு மாறாகவே பல கட்டுமான பொருட்கள் தற்போது உள்ளது அவற்றையும் பயன்படுத்தி பலர் தனக்கான தன் கனவு இல்லத்தையும் கட்டி கொள்கிறார்கள். அதாவது ஹாலோ பிரிக்ஸ் கல் செங்கலுக்கு பதிலாக பயன்படுத்தப்படுகிறது. அதோடு சிமெண்ட் மற்றும் சில கட்டுமான பொருட்களை பயன்படுத்திய ஒரு கட்டுமான பொருள் தயாரிக்கப்படுகிறது அதன் மூலமாகவும் செங்கலுக்கு மாறாக ஏஏசி எனப்படுகின்ற பிளாக்ஸ் பயன்படுத்தப்படுகிறது.
அதுமட்டுமின்றி குழந்தைகள் தனது பொம்மைகளை வைத்து வீடு கட்டுவதற்கு ஒரு கனெக்டிவிட்டி இருக்கின்ற விளையாட்டு பொம்மையை குழந்தைகள் விளையாடுவதையும் பார்த்திருப்போம். அதே போன்று கனெக்டிவிட்டி உள்ள பிரிக்ஸ்சும் தற்போது கட்டுமான பணிகளில் பயன்படுத்தப்படுகிறது. அதாவது இதற்கு பெயர் இன்டர்லாக் பிரிக்ஸ் என்றும் அழைக்கப்படுகிறது, இதனை ஒன்றுடன் ஒன்று இன்டர் லாக் செய்து தொடர்ச்சியாக வீடு கட்டுவதற்கு பயன்படுத்தப்படுகிறது. இதை வரிசையிலேயே போரோத்தம் பிளாக் என்பதும் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டு பயன்படுத்தப்படுகிறது. இப்படி கட்டுமான துறைகளில் கட்டுமான பொருட்கள் பல பரிமாணங்களையும் புதிய புதிய கண்டுபிடிப்புகளையும் அடைந்து வருகிறது.இந்த நிலையில் வீடு கட்டும் பணிகளில் அதிகமாக பயன்படுத்தப்படும் இரும்பிற்கு மாறாக தற்போது மற்றுமொரு பொருள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அதாவது, இந்த கட்டுமான பொருட்களில் இரும்பானதும் அதிக அளவில் பயன்படுத்தப்படுகிறது பேஸ்மெண்ட் முதல் சென்ட்ரிங் போடுவதற்கு வரை அதிகமாக இரும்பு பயன்படுத்தப்படும் அந்த இரும்பானது துருப்பிடிப்பதற்கான வாய்ப்பும் அதிக செலவையும் ஏற்படுத்துகிறது. எப்படி செங்களுக்கு மாறாக பல கட்டுமான பொருட்கள் வந்துள்ளதோ அதேபோன்று இரும்புக்கு மாறாக தற்போது ஃபைபர் கிளாஸ் காம்போசைட் என்கின்ற ஒரு கட்டுமான பொருள் வந்துள்ளது. இதனால் இரும்பிற்கு செலவிடப்படும் பணத்தில் 25 முதல் 45 வரை செலவு கட்டுப்படுத்தப்படுகிறது. மேலும் இது இரும்பை போன்று துருப்பிடிக்காதாம்! அதுமட்டுமின்றி இரும்பை விட எடையில் குறைவாக இருக்கிறது ஆனால் இரும்பைவிட அதிக பலத்தை தாங்க கூடிய தன்மையாக உள்ளது. மேலும் இந்த கட்டுமான பொருள் குறித்து மத்திய அமைச்சர் நிதின் கட்கரியும் பாராட்டி பேசி உள்ளார். இப்படி கட்டுமான பொருள்களில் ஒரு புதிய மற்றும் பயனுள்ள பொருள் அறிமுகமாகி இருப்பது குறித்த வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.