24 special

அப்படிப்போடு... சரித்திர தவறுகளை மாற்றுகிறது இந்தியா..! பிரதமர் அதிரடி!

Modi
Modi

பிரதமர் மோடி எந்தவோரு பொதுக்கூட்டங்களிளோ, அரசு விழாக்களிக்ளோ அல்லது உலகத்தின் எந்த மூலையில் சுற்றுப்பயணம் செய்தாலும் அங்கு நமது இந்திய கலாச்சாரத்தையும், நாட்டின் சுதந்திரத்திற்காக போராடிய வீரர்களைப் பற்றியும், இளைஞர்கள் அவர்களை பற்றி தெரிந்து கொள்ள வேண்டய அவசியம் பற்றி  குறிப்பிடத் தவறுவதில்லை.


முகலாய சாம்ராஜ்யத்தை தோற்கடித்து அசாம் மாநிலத்தில்  தடுத்து நிறுத்திய Ahom  பேரரசின் படைத் தளபதியாக இருந்த லச்சித் பபுர்கான் 400 வது பிறந்தநாள் நேற்று கொண்டாட்டங்கள் நடந்தத நிலையில், இந்த கொண்டாட்டத்தில் கலந்து கொண்டு பேசிய பிரதமர் மோடி, 

இந்திய வரலாறு என்பது அடிமைத்தனத்தின் வரலாறு என்று துரதஷ்டவசமாக எழுதப்பட்டுள்ளது. இந்திய வரலாறு வெறும் அடிமைத்தனத்தின் வரலாறு இல்லை, நமது போர் வீரர்களின் வீர வரலாறு, நமது சுதந்திரப் போராட்ட வீரர்களின் தியாகம் மற்றும் வெற்றியின் வரலாறு துரதஷ்டவசமாக அது மறைக்கப்பட்டு, ஆங்கிலேய பாடத்திட்டத்தின் ஒரு பகுதியாக எழுதப்பட்டு தொடர்ந்து காலம் காலமாக நம் மக்களிடையே இன்றுவரை கற்பிக்கப்பட்டு வருகிறது. அந்த வரலாற்றை நாம் இப்பொழுது கொஞ்சம் கொஞ்சமாக மாற்றி எழுதி வருகிறோம். நமது சரித்திரம் மற்றும் வீரர்களின்  நம் நாட்டு வீரர்களின் பெருமைகள் ஒவ்வொரு இளைஞர்களுக்கும் மாணவர்களுக்கும் தெரிய வேண்டிய அவசியம் உள்ளது.

நம் இந்திய நாடு முழுவதும் நம் நாட்டை ஆக்கிரமிப்பு நினைத்தவர்களுக்கு எதிராக நாட்டின் ஒவ்வொரு மூலையிலும் நமது வீர மகன்கள், வீர பெண்கள் போராடி உள்ளனர். ஆனால் அந்த வரலாற்றை வேண்டுமென்றே இதுவரை மறைத்து வந்துள்ளனர். 

இன்று நமது  புதிய இந்தியா அனைத்து தடைகளையும் உடைத்து , கடந்த கால சரித்திர தவறுகளை திருத்தி வருகிறது. அஹோம் சாம்ராஜ்யத்தின் லச்சித் பர்புகான் முகலாய பெரும்படயை தோற்கடித்த மாவீரன், தேசிய நலனுக்காக தண் நெருங்கிய உறவினர்களைக் கூட தண்டிக்க அவர் தயங்கியதில்லை. 

இப்படிப்பட்ட மாவீரர்களின் சரித்திரத்தையும் வீரத்தையும் நம் இளைஞர்களும் மாணவர்களும் தேடிப் படிக்க வேண்டும். எந்த உறவும் நம் நாட்டிற்கு முன் பெரிதில்லை என்று கூறிய பிரதமர் மோடி

இன்று  நம் இந்திய நாடு எல்லா தடைகளையும் உடைத்து உலக அளவில் நமது பாரம்பரியத்தையும் கலாச்சாரத்தையும், நமது மாவீரர்களின் வீரத்தையும் கொண்டு சென்று வருகிறோம் என்பதில் பெருமிதப்படுகிறேன் என்று கூறியுள்ளார்.

Gokulakrishnan S