24 special

பிள்ளையார் சுழியே போட்டாச்சாமே? 2024 கேமை ஆரம்பித்த டெல்லி...!

Amutha,pmmodi
Amutha,pmmodi

பிரதமர் நரேந்திர மோடி கடந்த சில நாட்களாக, பாஜக ஆட்சியில் இல்லாத மாநிலங்களை குறிவைத்து அரசியல் ரீதியாக விமர்சித்து வருகிறார். குறிப்பாக ஆந்திரா, கர்நாடகா, கேரளா, தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரி ஆகிய ஐந்து மாநிலங்களை குறி வைத்து பாஜக தீவிரமாக களத்தில் இறங்கி உள்ளது.தமிழக பா.ஜ.கவினர் பிரதமர் நரேந்திர மோடி தமிழகத்தில் போட்டியிட்டாலும்  ஆச்சரியபடுவதற்கில்லை என்று கூறி வருகின்றனர்.மேலும் உள்துறை அமைச்சர் அமித்ஷா தமிழகம் வந்த போது ஒரு தமிழர் பிரதமரானால் அது பெருமைதான் மற்றும் பா.ஜக அதனை நிறைவேற்றும் என்று கூறியது வேறு குறிப்பிடத்தக்கது..


இப்படி தொடர்ந்து தென்னிந்தியாவை குறிவைத்து நகர்ந்து வரும் பா.ஜ.க தனது தேர்தல் வேலைகளை ஆரம்பித்த நிலையில் தற்போது பிரதமர் நரேந்திர மோடி தெலுங்கானாவில் முதன் முறையாக தன் உரையாடல் மூலம் அரசியல் காய் நகர்த்தலை துவக்கி வைத்துள்ளார்.. இதில் தென் மாநிலங்களை ஆட்சி செய்யும் கட்சிகளையும் தலைவர்களையும் கடுமையாக விமர்சித்து வருகிறார். தெலுங்கானா சட்டசபை தேர்தல் வருவதற்கு‌ இன்னும் குறைந்தபட்ச காலமே  இருக்கும் நிலையில் 6500 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைப்பதற்கும் தெலுங்கானாவில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கும் மேலும் அங்கு நடைபெற உள்ள பாஜக பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்வதற்காகவும் பிரதமர் நரேந்திர மோடி தெலுங்கானாவிற்கு சென்றிருந்தார். இந்த கூட்டத்தில் தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், மத்திய நெடுஞ்சாலை துறை அமைச்சர் நிதின் கட்கரி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றிய போது தெலுங்கானா மாநிலம் உருவானதை பற்றியும் தெலுங்கானா மாநிலம் ஆந்திரா மாநிலத்தில் இருந்து பிரிந்து பிறந்த புதிய மாநிலமாக இருந்தாலும் மக்களின் பங்களிப்பு சிறப்பாக உள்ளது என்றும் தேர்தலின் போது தெலுங்கானா அரசு மக்களுக்கு அறிவித்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்றும் தெலுங்கானா அரசின் மீது குற்றம் சாட்டியுள்ளார். மேலும் தெலுங்கானாவில் உள்ள கிராம பஞ்சாயத்துக்கள் பெரும் பொருளாதார சிக்கலில் உள்ளதால் அவற்றின் வளர்ச்சிக்காக 12,000 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்கிறேன் என்ற உறுதியும் தெரிவித்துள்ளார். மத்திய அரசின் திட்டங்கள் மற்றும் முயற்சிகள் தெலுங்கானாவிற்கு பயனளிக்கும் வகையில் இருப்பதாக பிரதமர் மோடி அந்த உரையில் குறிப்பிட்டிருந்தார்.

மேலும் தெலுங்கானாவில் கிராம பஞ்சாயத்துக்கள் வலுவடைந்த நிலையில் இருப்பதற்கும் முக்கிய காரணம் வாரிசு ஆட்சிதான். எனவே வாரிசு ஆட்சியை கவிழ்க்க கிராம பஞ்சாயத்துக்கள் முக்கிய முடிவு எடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. பிரதமர் இதனை எதிர்த்து அந்த பொதுக் கூட்டத்தில் பேசிய போது வாரிசு  கட்சிகளின் அடித்தளம் ஊழல்தான் அதற்கான முக்கிய உதாரணம் காங்கிரஸ் தான் என்ற பகீர் தகவலை வெளியிட்டுள்ளார். காங்கிரஸ் கட்சி செய்யாத ஊழல் நாட்டிலேயே இல்லை அது மக்கள் அனைவருக்கும் தெரியும் என்றும் அதேபோல் தெலுங்கானாவில் கேசிஆர் அரசு ஊழல் செய்யாத திட்டங்கள் இல்லை என்றும் வாரிசு கட்சிகளை கடுமையாக விமர்சித்திருக்கிறார் பிரதமர் நரேந்திர மோடி மேலும் தெலுங்கானா முதல்வர் கே சந்திரசேகர ராவ், பிரதமர் மோடி தெலுங்கானா வரும் போதெல்லாம் அவரை புறக்கணித்து உள்ளார்

தென் இந்தியாவை குறி வைத்து பாஜக இறங்கியதற்கு முதல் படியே மோடியின் இந்த பேச்சு தான் எனவும், இனி அடுத்தபடியாக பாஜக தலைவர்கள் மற்றும் டெல்லி மேலிடம் அடுத்த 10 மாத காலத்தை தென்னிந்தியாவில் தான் முக்கியமாக குறிவைத்து தன் வேலைகளை துவங்க உள்ளதாக கமலாலய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன...! ஏற்கனவே கலக்கத்தில் இருக்கும் எதிர்க்கட்சிகளுக்கு பிரதமரின் இந்த முதல் அடி இடியை இறக்கியது போல் இருப்பதாக அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.