24 special

சிக்கிய டைரி..! ஒட்டுமொத்த கரூர் கும்பலுக்கும் வரப்போகும் முடிவு..!

Senthil balaji,enforcement
Senthil balaji,enforcement

கடந்த ஆட்சியில் போக்குவரத்து துறை அமைச்சராக பதவி வகித்த செந்தில் பாலாஜி செய்த முறைகேடுகளுக்காக அமலாக்கத்துறை அவரை கைது செய்தது, இதனால் வழக்கை சந்தித்து நீதிமன்ற காவலில் தற்போது செந்தில் பாலாஜி இருந்து வருகிறார்.  மேலும் அவரிடம் விசாரணை மேற்கொள்வதற்காக பல கட்ட வழக்கு விசாரணைகளை நீதிமன்றத்தில் சந்தித்து செந்தில் பாலாஜியை விசாரணையில் எடுப்பதற்கான முயற்சிகளில் அமலாக்கத்துறை மும்முரம் காட்டி வருகிறது. முன்னதாக டாஸ்மார்க் துறையில் நடந்த ஊழல் முறைகேட்டிற்கு வைரலான வீடியோவிற்காக வருமானவரித்துறை செந்தில் பாலாஜி தொடர்புடைய இடங்களில் சோதனைகளை கடந்த மே மாதத்தில் நடத்தியது. 


அந்த சோதனையில் செந்தில் பாலாஜிக்கு அரசியல் ரீதியாகவும் ஊழலிலும் பின்புலமாக இருந்த புகாரில் அவரது சகோதரர் அசோக் குமார் வீட்டில் ஆய்வு செய்வதற்காக அதிகாரிகள் சென்ற போது செந்தில் பாலாஜி ஆதரவாளர்கள் ஐடி அதிகாரிகளை வீட்டிற்குள் நுழைய விடாமல் அவர்கள் வந்த காரிலும் கல் எரிந்து ஐடி அதிகாரிகளை தாக்கியது கரூர் பகுதி முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. கூடியிருந்த திமுக ஆதரவாளர்கள் பெண் அதிகாரியான கயாத்திரியிடம் தகாத முறையில் நடந்து கொண்டு அவரை தாக்கியது வருமானவரித்துறையை அதிக கோபப்படுத்தியது. இதனால் எங்களுக்கு பாதுகாப்பு வேண்டுமென்று வருமானவரித்துறை அதிகாரிகள் எஸ்பி அலுவலகத்தில் குவிந்து கோரிக்கை விடுத்தனர்

பிறகு, துணை ராணுவ படை வீரர்களின் பாதுகாப்பில் மற்ற இடங்களுக்கு சென்று சோதனையில் ஈடுபட்டனர். இந்த சம்பவத்தால் அதிகாரிகளில் சிலர் மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெறும் நிலையும் ஏற்பட்டது. முன்னதாக பொள்ளாச்சியில் உள்ள செந்தில் பாலாஜி உறவினர் வீட்டிலும் அவரது போதை மீட்பு சிகிச்சை மையத்திலும் வருமானவரி துறையினர் சோதனை நடத்தியதாக தகவல்கள் வெளியானது.  வருமானவரி துறையின் இந்த முதல் சோதனை நடவடிக்கை எட்டு நாட்களாக நீடித்தது. இந்த ரைடில் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமான ஒருவரையும் விட்டு வைக்காமல் அனைவரையும் அலுவலகம் சார்ந்த மற்றும் உறவு சார்ந்த அனைவரிடத்திலும் ஐடி சோதனை நடத்தியது. 

திமுகவின் முக்கிய நிர்வாகியின் கணக்காளருமான மைதிலி வீட்டில் சோதனை நடத்தி பிறகு அவரை விசாரணை விசாரணை செய்ததில் இதில் பல திடுக்கிடும் தகவல்களை அவர் கூறியதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. 

 அமலாக்க துறையால் செந்தில் பாலாஜி கைதான பிறகும் வருமான வரி துறை திடீர் சோதனையில் ஈடுபட்டு அறிவாலய தரப்பிற்கு பெரும் அதிர்ச்சி கொடுத்தது, முன்பு நடைபெற்ற சோதனையின் பொழுது சீல் வைத்து சென்ற இடங்கள் அனைத்திற்கும் மறு சோதனைகள் ஈடுபட்டது செய்திகளில் வெளியாகி பெரும் பரபரப்பானது. இப்படி கடந்த ஒரு மாதத்தில் தொடர்ச்சியாக மூன்றாவது முறையாக வருமானவரித்துறை ரெய்டு நடந்ததில் முக்கிய டைரி ஒன்று வருமானவரித்துறையினர் கையில் சிக்கியதாகவும் அந்த டைரியில் யார் யாருக்கு பணம் கொடுத்தார்கள் யாரிடம் இருந்து எல்லாம் பணம் வாங்கினார்கள் என்ற தகவல்கள் இடம்பெற்றுள்ளதாக அரசியல் விமர்சகர் சவுக்கு சங்கர் பகீர் தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார். 

கரூரில் வருமான வரி அதிகாரிகள் பத்திற்கு மேற்பட்ட இடங்களில் நடத்திய சோதனையில் டாஸ்மாக்கில் கரூர் கேங் கடந்த இரண்டு ஆண்டுகளாக நடத்திய வசூல் விபரங்கள் அடங்கிய டைரி சிக்கி உள்ளது என்று தகவல் செந்தில் பாலாஜி தரப்பினரையும் ஒட்டுமொத்த கரூர் கும்பலையும் பேரதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. டைரியில் சிக்கிய இந்த தகவலை வைத்தே ஒட்டு மொத்த கரூர் கேங்கிற்கும் முடிவு கட்ட வருமானவரித்துறை தற்போது களம் இறங்கியுள்ளதாக கூறப்படுகிறது.