24 special

பிஜேபி எம்பி கிளப்பிய சர்ச்சை..! வெடிக்கும் உட்கட்சிப்பூசல்..?

congress and bjp
congress and bjp

மேற்குவங்கம் : பாரக்பூர் லோக்சபா எம்பியான அர்ஜுன்சிங் தன்னை சுதந்திரமாக செயல்படவோ பணியாற்றவோ மாநில தலைமை அனுமதிக்கவில்லை என நேற்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார். அதைத்தொடர்ந்து மாநில பிஜேபியில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.


கடந்த 2019 சிட்டிங் எம்.எல்.ஏவாக இருந்த அர்ஜுன் சிங் 2019 மார்ச் 14 அன்று பிஜேபியில் இணைந்தார். அதையடுத்து நடந்த பொதுத்தேர்தலில் லோக்சபாவிற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். மேலும் மாநில பிஜேபி துணைத்தலைவராக பணியாற்றிய அர்ஜுன் "மாநில பிரிவிற்கு தலைமை தாங்கும் தலைவர்கள் அடிமட்ட தொண்டர்கள் மாநிலத்தில் தங்களது அன்றாட நடவடிக்கைகளை மேற்கொள்ள இடையூறுகள் செய்கிறார்கள்" என செய்தியாளர்களிடம் கூறினார்.

மேலும் "தெளிவாக இருக்க வேண்டும். சமூக வலைத்தளங்களில் ட்விட்டரில் பதிவிடுவதன் மூலமாக மமதாவின் ஆட்சியை அகற்றிவிடமுடியாது. களத்தில் யதார்த்த உண்மைகளை புரிந்துகொள்ளவேண்டும். களத்தில் எந்த தொடர்பும் இல்லாதவர்கள் எப்படி கட்சியை அதன் நோக்கத்தை பூர்த்திசெய்ய வைப்பார்கள். முதலில் யதார்த்தத்தை வெகுஜன சந்திப்பின் மூலம் அறிந்துகொள்ளவேண்டும்" என அர்ஜுன் செய்தியாளர்களிடம் நேற்று தெரிவித்தார்.

இந்த குற்றச்சாட்டுக்கு பதிலளித்த பிஜேபி எம்.எல்.ஏ அக்னிமித்ரா பால் " அர்ஜுன் கூறுவது அபத்தமானது. அதில் துளியளவும் உண்மையில்லை. மாநில அமைப்பு எனக்கு போதுமான அதிகாரத்தை வழங்கியுள்ளது. அடுத்த தேர்தலுக்கு களத்தில் நேரடியாக பணியாற்றிவருகிறோம். உள்துறை அமைச்சர் அமித்ஸாவின் சமீபத்திய வருகை தொண்டர்களை மேலும் உற்சாகப்படுத்தியுள்ளது" என அக்னிமித்ரா செய்தியாளர்களிடம் கூறினார்.

மேற்குவங்கத்தில் கடந்த சட்டமன்ற தேர்தலுக்கு முன்னர் திரிணாமூல் காங்கிரசிலிருந்து பல முக்கிய புள்ளிகளான முகுல் ராய் சுவேந்து அதிகாரி அர்ஜுன் சிங் உள்ளிட்ட பலர் பிஜேபியில் இணைந்தனர். மீண்டும் மமதா வெற்றபெற்று முதலமைச்சரானதும் பிஜேபிக்கு சென்ற தலைவர்கள் முகுல் ராய் உட்பட அனைவரும் சுவேந்து அதிகாரியை தவிர்த்து மீண்டும் திரிணாமூல் காங்கிரசில் இணைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.