24 special

மசூதிக்குள் சிவலிங்கம்..!முதலமைச்சரின் பரபரப்பு அறிக்கை...!

shivalingam , mosque
shivalingam , mosque

உத்திரப்பிரதேசம் : கியான்வாபி மசூதி சர்ச்சை இந்தியாவெங்கும் சர்ச்சையை கிளப்பியது. இந்த வழக்கின்போக்கு எப்படி இருக்கும் என தேசமே எதிர்பார்த்துக்கொண்டிருந்தது. அதேநேரத்தில் தாஜ்மஹால் குறித்த வழக்கை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்திருந்த நிலையில் இந்த கியான் வாபி மசூதியில் ஆய்வுநடத்த அனுமதியளிக்க கூடாது என மசூதி நிர்வாக தரப்பில் மனு அளிக்கப்பட்டு அந்த மனுவும் நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டது.


வாரணாசி சிவில் நீதிமன்றத்தில் நடந்த இந்த வழக்கில் மசூதியை ஆய்வுசெய்ய இடையூறு விளைவிப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க மாவட்ட நிர்வாகத்திற்கும் காவல்துறைக்கும் நீதிபதி உத்தரவிட்டார். அதைத்தொடர்ந்து மொன்று நாட்களாக நடைபெற்ற ஆய்வில் தலைமை வழக்கறிஞர் குழு மற்றும் மனுதாரர் சோகன்லால் அடங்கிய குழு மசூதி வளாகத்திற்குள் சிவலிங்கம் இருப்பதை கண்டறிந்துள்ளது. 

மேலும் ஆய்வுக்கு அனுமதித்த நீதிபதிகள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு பலத்த போலீஸ் காவல் போடப்பட்டுள்ளது. இந்நிலையில் இதுகுறித்து பேசிய உத்திரபிரதேச துணைமுதல்வர் மவுரியா " எவ்வளவு மறைக்க முயன்றாலும் உண்மைகள் ஒருகட்டத்தில் வெளியே வரும். புத்தபூர்ணிமா நாளில் சிவலிங்கம் கண்டெடுக்கப்பட்டுள்ளது ஒரு பெரிய செய்தியை நமக்கு அளித்துள்ளது.அளித்துள்ளது.

புத்தபூர்ணிமாவின்போது ஞான சபையில் பாபா மஹாதேவ் தோன்றியிருப்பது இந்த நாட்டின் ஹிந்து பாரம்பரியத்திற்கு ஒரு புராண செய்தியை வழங்கியுள்ளது" என தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். மேலும் இந்த அரசு சர்வே கமிஷனின் அறிக்கையை முழுமையாக பின்பற்றும். நீதிமன்ற உத்தரவுகளை கடைபிடிக்கும்  என தெரிவித்துள்ளார்.

இதனிடையே ஆதாரங்கள் கிடைத்த பகுதியை சீல் வைக்க வாரணாசி நீதிமன்றம் உத்தரவிட்டதோடு கியான் வாபி வளாகத்திற்குள் மக்கள் செல்ல தடை விதிக்குமாறு மாவட்ட மாஜிஸ்திரேட்டுக்கு வாரணாசி நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. மசூதி வளாகத்திற்குள் நுழைய விதிக்கப்பட்ட தடை தொடருமா அல்லது விரைவில் விலக்கப்படுமா என்பதை விரைவில் நீதிமன்றம் தீர்மானிக்கும் என செய்திகள் தெரிவிக்கின்றன.இதைத்தொடர்ந்து துணைராணுவப்படை மசூதி வளாகத்தை சுற்றி பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டுள்ளது. மேலும் ஆய்வுக்கு அனுமதித்த நீதிபதிகள் மற்றும் அவரது