24 special

MY V3 Ads நிறுவனம் மோசடி..?

sakthi ananth, myv3ads
sakthi ananth, myv3ads

தமிழ் சினிமாவில் சதுரங்க வேட்டை படத்தில் எம்எல்எம் நிறுவனம் மீது பணம் செலுத்தினால் நீங்கள் செலுத்திய பணம் டபுளாக கிடைக்கும் என்று மக்களின் ஆசையை அதிகரித்து, கோடி கணக்கில் பணம் பெற்றதும் மக்களை ஏமாற்றும் விதமாக அந்த கும்பல் தலைமறைவாகிவிடும். அந்த படத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக எடுக்கப்பட்டது. அதன் பிறகு தமிழகத்தில் இது போன்ற சம்பவங்கள் அதிகரித்த வண்ணம் உள்ளன. அந்த வகையில் தற்போது பிரபல நிறுவனம் மீது குற்றச்சாட்டு வைத்துள்ளனர் பாதிக்கப்பட்ட மக்கள்.


தமிழகத்தில் குறிப்பிட்ட பகுதிகளை தேர்வு செய்து அதும் கிராமபுறங்களில் உள்ள மக்களிடம் பணத்தை இரண்டு மடங்காக உயர்த்தி தருவதாக கூறி மக்களிடம் ஏமாற்றி பண்ணத்தை சுருட்டி செல்கின்றனர். அப்படி தான் தபோது அவதாரம் எடுத்துள்ளது MY V3 Ads நிறுவனம். ஆண்ட்ராய்டு மொபைலில் விளம்பரம் பார்ப்பதன் மூலம் வருமானம் ஈட்டலாம் என்றும் இதனை வீட்டில் உள்ள பெண்களிடம் அதிகமாக ஊக்குவித்து ஏமாற்றும் வேலையில் ஈடுபடுவதாக கூறுகின்றனர் பாதிக்கப்பட்டவர்கள். இந்த நிறுவனத்தில் நாம் ஒருவரை சேர்க்க வேண்டும். அவர் ஒருவரை சேர்க்க வேண்டும். இப்படி சேர்ப்பதன் மூலம் பணம் வரும். ஆள் சேர சேர பணம் வரும் என்பதே இந்த மோசடியின் பின்னணி. இது இந்தியாவில் முழுக்க முழுக்க தடை செய்யப்பட்டது. இந்த மோசடியில் வேறு மாதிரி திட்டம் போட்டுள்ளனர்.

அந்த நிறுவனம் யூ டியூபில் விளம்பரம் கொடுப்பார்கள் அதனை தினமும் பார்ப்பதன் மூலம் இலவசமாக விளம்பரத்தை பார்த்தால் ஒரு குறிப்பிட்ட தொகை கிடைக்கும். அதுவே 3000 கட்டி பார்த்தால் 6000 கிடைக்கும். அதேபோல் ஒவ்வொரு தொகை அதிகமாக கட்டி பார்க்க பார்க்க அதிகமாக பணம் வரும். இதனை ஊக்கு விக்கும் விதமாக மாவட்டத்தில் ஓரிரு இடத்தில் இதற்கான அலுவலகம் தொடங்கப்பட்டுள்ளது. இதில் சேரும் மக்கள் குறைந்தது ஒரு குறிப்பிட்ட தொகையை கொடுத்து சேரவேண்டும் அப்படி சேரும்போது அவர்களுக்கு அந்த பணத்திற்கு பதிலாக பொருட்கள் கொடுக்கப்படும். அதாவது, அந்த பொருட்களில் ஆயுர்வேதிக் பொருட்கள் இருக்கும் அது மருத்துவர் ஆலோசனையில் வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது.

இந்தநிலையில், கோவை மாவட்டத்தில் அந்த நிறுவனம் மீது புகார் அளித்தனர். இதனால், கடந்த மாதம் மக்கள் ஒன்று திரண்டு அந்த நிறுவனத்திற்கு ஆதரவு கொடுத்தனர். ஸ்டாலின் என்பவர் இந்த நிறுவனத்தில் முதலீடு செய்து உள்ளார் சரியாக கொடுத்து வந்த பின்னர் பல கோடி ஏமாற்றிவிட்டதாக கூற அந்த நிறுவனம் கோவையில் மூடப்பட்டு விட்டதாக கூறியும் ஆட்சியரிடம் புகார் அளித்திருந்தார். அது தொடர்பாக அந்த நிறுவனத்தின் உரிமையாளர் நேரில் விசாரணைக்கு ஆஜராக சம்மன் கொடுக்கப்பட்டது. 

இந்த நிலையில் நேற்று சக்தி ஆனந்த் என்பவர் கோவை மாநகர குற்ற பிரிவு அலுவலகத்தில் விசாரணைக்காக நேரில் ஆஜரானார். சுமார் 4 மணி நேரத்திற்கு மேல் விசாரணை நடைபெற்றது.  விசாரணை முடிந்து வெளியில் வந்த My V3 Ads நிறுவனத்தின் உரிமையாளர் சக்தி ஆனந்த் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். இந்த நிறுவனம் ஊடக வெளிச்சம் பெற்ற பின்பு, இது குறித்து பேசினால் தாங்களும் பிரபலமாகலாம் என்ற எண்ணத்தில் அவர்கள் புகார் அளித்திருக்கலாம். விளம்பரத் துறையும் வியாபார துறையும்  எத்தனை நாட்கள் இருக்குமோ, அவ்வளவு நாட்கள் எனது நிறுவனமும் இயங்கும். 

கோவை நீலாம்பூர் பகுதியில் மக்களை நான் அழைக்கவில்லை தானாகவே வந்தனர். எதிர்மறை விமர்சனங்களால் எங்கள் நிறுவனமும் தற்போது மேலும் உயர்ந்துள்ளது. யாரேனும் அனுமதி பெற்று தந்தால் அன்றைய தினம் கூடிய கூட்டத்தைப் போல் ஒரு வாரத்தில் சுமார் 20 லட்சம் பேரை என்னால் கூட்ட முடியும். எங்கள் நிறுவனத்தில் யாரும் முதலீடு செய்யவில்லை. பொருட்களை மட்டுமே வாங்கி உள்ளனர் என் தெரிவித்தார். மக்கள் எந்த நம்பிக்கையில் இங்கு முதலீடு செய்து சம்பாதிக்கிறார் என்றும் இவர்கள் நிச்சயம் அரசியல் கட்சி சார்ந்தவர்கள் பின்புலத்தில் தான் இயங்கி வருகின்றனர் என நெட்டிசன்கள் கூறுகின்றனர். மேலும், இதில் பாதிக்கப்பட்டவர்கள் இன்னும் எதனை பேர் வெளியில் சொல்லாமல் இருக்கின்றனர் என நெட்டிசன்கள் புலம்பி வருகின்றனர்.