2021 ஆம் ஆண்டு திமுக ஆட்சிப் பொறுப்பை ஏற்றுக் கொள்வது திமுகவின் மூத்த தலைவர்கள் அதிகம் இருப்பினும் வேறு கட்சியிலிருந்து வந்த அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு இரண்டு பொறுப்புகள் வழங்கப்பட்டது ஒன்று மின்சாரம் மற்றும் மதுவிலக்கு. இந்த இரண்டுமே பெரும் வருமானத்தை ஈட்டித் தரக்கூடிய பதவிகள் அந்த நிலையில் அமைச்சர் செந்தில் பாலாஜி குறித்து சர்ச்சைகள் சமூக வலைதளத்தில் வளம் வந்ததற்கு பிறகு அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்புடைய வீடு மற்றும் அலுவலகங்கள் அவருடைய வீடு மற்றும் அலுவலகத்திலும் அமலாக்கத்துறை சோதனை மேற்கொண்டது ஆனால் இந்த சோதனையானது கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் போக்குவரத்து துறை அமைச்சராக செந்தில் பாலாஜி இருந்த பொழுது பொதுமக்கள் சிலரிடம் வேலை வாங்கி தருவதாக பணம் வசூலித்து மோசடிகள் ஈடுபட்டது குறித்து நடைபெற்றது. இதனை அடுத்து சோதனையில் சில முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதால் அது குறித்து விசாரணை செய்வதற்கு செந்தில் பாலாஜி கைது செய்ய அமலாக்கத்துறை அதிகாரிகள் முற்படும் பொழுது அவர் திடீரென்று நெஞ்சுவலி என கதறி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் அதற்கு பிறகு சிகிச்சைகள் அளிக்கப்பட்டு அறுவை சிகிச்சை முடிந்து புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.
அதற்குப் பிறகு அவரது ஜாமீன் மனு ஒவ்வொரு நீதிமன்றமாக ஏறி இறங்கியது ஆனால் எதிலும் அவருக்கு ஜாமின் கிடைத்ததாக இல்லை என்றாலும் செந்தில் பாலாஜி ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டு நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டும் வருகிறது. இதற்கு அடுத்த திமுக வின் மற்ற சில முக்கிய அமைச்சர்கள் தொடர்புடைய மற்றும் சம்பந்தப்பட்ட இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது. அப்பொழுது இந்நாள் மற்றும் முன்னாள் எம்பி எம்எல்ஏக்களின் வழக்கை விசாரித்து வரும் சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் அமைச்சர் பொன் மூடி 2015 இல் விடுதலையான ஒரு வழக்கை மீண்டும் கையில் எடுத்து அந்த வழக்கில் மோசடிகள் மற்றும் ஏமாற்று வேலைகள் நடந்திருப்பது தெள்ளத் தெளிவாக உள்ளது என கூறி அந்த வழக்கை மறுவிசாரணை செய்ய உத்தரவிட்டார். அதாவது 2006 - 2011 ஆண்டுகளில் திமுக ஆட்சி நடைபெற்ற பொழுது வருமானத்திற்கு அதிகமாக அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மனைவி சொத்து சேர்த்ததாக வழக்கு பதியப்பட்டது. இதனை அடுத்து நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் இந்த வழக்கு குறித்த விசாரணையை மேற்கொள்ள ஆரம்பித்தார்.
அதனை அடுத்து அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மனைவி மீதான வழக்கில் இருவரும் குற்றவாளிகளின் நிரூபிக்கப்பட்டு விழுப்புரம் நீதிமன்றம் பொன்முடி மற்றும் அவரது மனைவியை விடுதலை செய்த தீர்ப்பை சிறப்பு நீதிமன்றம் ரத்து செய்தது. மேலும் அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மனைவி இருவருக்கும் மூன்று ஆண்டு சிறை தண்டனையையும் தலா 50 லட்சம் ரூபாய் அபதாரத்தையும் விதித்தது.. இதனை அடுத்து நீதிமன்றத்தில் ஒருவர் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டதற்கு பிறகு அவரிடம் இருக்கும் பொறுப்புகள் அனைத்தும் பறிக்கப்படும் அதேபோன்று அமைச்சர் பொன்முடியின் பதவியும் பறிக்கப்பட்டு உள்ளது. நீதிமன்ற காவலுக்கு அவகாசம் கொடுக்கப்பட்டுள்ள நிலையில் எந்த நிறத்திலும் அவர் கைது செய்யப்படலாம் என்ற ஒரு சூழ்நிலை நிலவி வருவதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த நிலையில், அமைச்சர் பொன்முடியின் வழக்கை விசாரித்த அதே நீதிபதி வருகின்ற 13ஆம் தேதி வரை கேகே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, ஐ பெரியசாமி போன்ற அமைச்சர்கள் மீதான ஊழல் வழக்குகளை தினசரி விசாரணைக்கு எடுக்க உள்ளார். மேலும் சுப்ரீம் கோர்ட் அமைச்சர்களுக்கு எதிரான வழக்கை தனி நீதிபதி தாமாக முன்வந்து எடுப்பதில் என்ன தவறு என்ற கேள்வியையும் முன்வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது..