நாடாளுமன்றத் தேர்தல் பிரச்சாரம் மாநிலம் முழுவதும் அனல் பறக்க நடந்து வருகிறது. ஏப்ரல் 19ஆம் தேதி முதல்கட்டமாகவே தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளது. மதுரை தொகுதியில் பாஜக சார்பாக பேராசிரியர் ராம ஸ்ரீனிவாசன் போட்டியிடுகிறார். திமுக சார்பாக கூட்டணி வேட்பாளர் களம் இருங்குகிறார். அதிமுக சார்பாக டாக்டர் சரவணன் போட்டியிடுகிறார். இந்நிலையில் களத்தில் யார் முதலிடத்தில் இருக்கிறார் என்பது குறித்த முடிவுகள் வெளியாகி விட்டது.
தமிழக அரசியலில் நான்கு முனைப் போட்டி நிலவும் நிலையில், திமுக கூட்டணியில் இருக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எம்பியான வெங்கடேசனுக்கு இந்த முறை வெற்றி கனியை சூட்டுவாரா என்பது கேள்வி குறியாக மாறியுள்ளது. அதிமுக சார்பில் மருத்துவரும் அண்மையில் பாஜகவில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்த சரவணன் போட்டி இடுகிறார். பாஜக சார்பில் மாநில பொதுச் செயலாளர் ராம ஸ்ரீனிவாசன் போட்டியிட உள்ளார். நாம் தமிழர் கட்சி சார்பில் சத்யா தேவி என்னும் வேட்பாளர் களம் காண்கிறார். தீவிரமாக பிரச்சாரம் செய்து வரும் நிலையில், டெல்லியில் இருந்து தனியார் நிறுவனம் எடுத்தாஹ் சர்வே முடிவில் பாஜகவுக்கு சாதகமான முடிவுகள் வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் தேர்தலுக்கு முந்தைய கருத்து கணிப்பில் திமுக நாற்பதுக்கு நாற்பதும் வெற்றி பெரும் என்று கருத்து கணிப்புகள் வெளியானது. மேலும் அதில், பாஜக கட்சி இரண்டாவது இடத்திற்கு வரும் என்றும் அதிமுக முன்றாவது இடத்திலும், பாஜக இரட்டை இலக்கில் வாக்கு பெரும் என்று தகவல் வெளியானது. இப்போது களம் அப்படியே மாறி போக திமுக வெற்றி பெரும் தொகுதியின் எண்ணிக்கை குறைந்து வர பாஜக வெற்றி பெரும் என்ணிக்கை அதிகரித்துள்ளது.
அந்த வகையில் மதுரையில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் குறித்து மக்கள் தெரிவிப்பது அவர் நல்லது செய்திருக்கிறார். ஆனால், வருடத்திற்கு ஒரு கட்சி மாறுகிறார் அவர் வெற்றி பெறுவது கடினமான சூழ்நிலை என்றும் பாஜக கட்சியில் அவர் தொடர்ந்திருந்தால் வாய்ப்பு கிடைத்திருக்கும் என கூறுகின்றனர். அதேபோல் சிட்டிங் எம்பியான வெங்கடேசன் மீண்டும் போட்டியிடுவதால் வெற்றி பெறுவது கடினமான சூழ்நிலை என கூறப்படுகிறது. அவர் தொகுதி பக்கம் வராததால் மக்கள் பல்வேறு கருத்துக்களை கூறுகின்றனர். அந்த வகையில் மதுரை மக்கள் மாற்றத்தை எதிர்பார்பதால் தாமரைக்கு முன் வந்துள்ளதாக டெல்லியில் இருந்து தனியார் சேனல் நடத்திய கருத்து கணிப்பில் மக்கள் தாமரைக்கு ஆதரவு கொடுக்க முடிவெடுத்துள்ளார்களாம்.
பேராசிரியர் ராம ஸ்ரீனிவாசன் தொகுதியில் பல்வேறு களப்பணிகளி செய்துள்ளாராம். அதுபோல் கோவில்களை சீரமைத்து கொடுத்துள்ளாராம். மேலும், பாஜகவின் வளர்ச்சியானது தமிழகத்தில் புதிய அவதாரம் எடுத்துள்ளதால் வெற்றி வாய்ப்பு என்பது மக்களிடத்தில் அதிகரித்துள்ளது என கூறப்படுகிறது. அது மட்டுமில்லாமல் மதுரை பாஜக வேட்பாளர் ராம ஸ்ரீனிவாசன் களத்தில் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டும் சமூக ஊடகத்தில் டிஜிட்டல் வழிகளில் பிரச்சாரம் தொடங்கியுள்ளது அவருக்கு ஆதரவை அதிகரித்துள்ளதாம். இதனால் முத்திரையில் அதிமுக- பாஜக இடையே என்றும் இதில் பாஜக மலர்கிறது மற்றும் இரட்டை இலை வாடுகிறது என அரசியல் விமசங்கர்களால் கூறப்படுகிறது. ஏற்கனவே, பேராசிரியர் ராம ஸ்ரீனிவாசன் தேர்தலுக்கு பிறகு அதிமுக என்ற கட்சியே இருக்காது என கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.