24 special

தன் நகைச்சுவை பாணியிலேயே இந்து சமய அறநிலையத்துறைக்கு சவுக்கடி கொடுத்த மதுரை முத்து!

madurai muthu
madurai muthu

தமிழகத்தில் உள்ள முக்கிய கோவில்கள் அனைத்தும் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கி வருகிறது. தமிழகத்தின் இந்து சமயத்திற்கு கோவில்களில் வளர்ச்சிக்காக கோவில்களை பாதுகாப்பது பராமரிப்பதற்கு என்று ஒரு தனித்துறை 1960 ஆம் ஆண்டு தமிழக அரசால் அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. இதற்கென்று தனி அமைச்சரும் இந்த துறையை எளிதாக கண்காணிப்பதற்கு மாநில அளவில் ஒரு செயலகம் தலைமை செயலகத்தில் உள்ளது. அதுமட்டுமின்றி இந்த துறைக்கு கீழ் கோவில் மட்டும் வருவதில்லை அந்த கோவிலை சார்ந்த வீடு, நிலம், கடை, காலியிடங்கள், வாடகை நிர்ணயம் செய்தல் திருக்கோவிலில் நிர்வாகம் கோவை மூலம் பெறப்படும் வருமானம் என அனைத்துமே இந்து சமய அறநிலையத்துறையில் சேரும். மேலும் கோவிலின் சொத்துகளாக கருதப்படுகின்றவற்றையும் கோவிலை பராமரிப்பதும் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு வேண்டிய வசதிகளை செய்து தருவதும் இந்த துறையின் கடமையாக கூறப்படுகிறது. 


அதோடு கோவில்களில் வழங்கப்படும் அன்னதானம் மற்றும் காணிக்கைகள் அனைத்துமே இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. மற்ற எந்த மாநிலங்களிலும் இல்லாத வகையிலான ஒரு துறை தமிழகத்தில் இருப்பது சிறப்பு என்று சிலர் கூறினாலும் பெரும்பாலானோர் இந்து சமய அறநிலையத்துறை கோவில்களின் நிலத்தை சுரண்டி கோவில் சொத்துக்கள் அனைத்தையும் தன்வசமாக்கி கொண்டிருக்கிறது என்ற குற்றச்சாட்டை முன்வைக்கின்றனர். தமிழகத்தில் உள்ள அனைத்து கோவில்கள் மீதும் அதிகாரம் கொண்டிருக்கும் இந்து சமய அறநிலையத்துறை பெரும்பாலான சிலைகள் திருட்டுகளுக்கு பின்னும் கோவிலுக்கு சொந்தமான நிலங்கள் திடீர் திடீரென்று காணாமல் போவதற்கு பின்பும் இருப்பதாகவும் முன்னாள் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐஜி பொன்மாணிக்கவேலும் குற்றம் சாடியிருந்தார். அதுமட்டுமின்றி கோவிலுக்குள் பக்தர்கள் காலம் காலமாக பின்பற்றி வரும் சில நடைமுறைகளையும் இனி பின்பற்றக் கூடாது என்று இந்து சமய அறநிலைத்துறை கூறுகிறது அதோடு பொது தரிசனம் சிறப்பு தரிசனம் ஸ்பெஷல் தரிசனம் என்ற பல கட்டங்களாக தரிசனங்களை பிரித்து அதற்கேற்றார் போல் விலையை நிர்ணயித்து அதிக பணத்தை வசூலிக்கிறது இதனால் பணம் கட்டாமல் பொது தரிசனத்தில் வரும் பெரும்பாலான மக்கள் நீண்ட நேரம் வரிசையில் காத்திருக்கும் படி ஆகிறது என்றும் கூறப்பட்டது. 

இப்படி ஒவ்வொரு தரப்பில் இருந்தும் இந்து சமய அறநிலையத்துறைக்கு எதிரான கருத்துகள் மற்றும் முழக்கங்கள் ஆவேசமாக முன்வைக்கப்பட்டு வரும் நிலையில் சின்னத்திரையில் பிரபல காமெடியனாக வலம் வந்து கொண்டிருக்கும் மதுரை முத்து தற்போது தனது பாணியிலேயே கோவிலை தரிசிக்க இந்து சமய அறநிலைத்துறை நிர்ணயித்துள்ள கட்டணங்களையும் தரிசன கட்டணங்களை குறித்தும் பேசியுள்ளார். அந்த நிகழ்ச்சியில் மதுரை முது பேசும்போது, 'அதாவது சிலர் ஆன்மீகத்தில் அழகாக வழிபட்டு செல்வார்கள், ஆனால் இப்போ எல்லா இடத்திலும் ஸ்பெஷல் அர்ச்சனை இருக்கிறது 50 ரூபாய் கொடுத்தால் கொஞ்சம் விபூதி மற்றும் குங்குமம் அதிகமாக கொடுப்பார்கள்! நூறு ரூபா கொடுத்தால் நம்மளை தனியாக அழைத்து இங்கிருந்து பாருங்கள் என்று கூப்பிடுவார்! ஒருவர் 200 கொடுத்தால் கருவறையின் கேட்டை திறந்து உள்ளே வந்து பாருங்கள் என்று கூறுவார்! 300 ரூபாய் கொடுத்தால் வாருங்கள் உள்ளே வாருங்கள் என்று கருவறைக்குள்ளே அழைத்துக் கொண்டு சென்று பெருமாலுடன் செல்பி எடுத்துக் கொள்ளுங்கள் என்று கூறுகிறார்கள்! ஒருவர் ஐநூறு ரூபாய் கொடுத்தால் பெருமாலிடமே கொடுங்கள் அவரே செல்பி எடுத்துக் கொடுப்பார் என்று கூறுகிறார்கள் மற்றொருவர் ஆயிரம் ரூபாய் கொடுத்தால் நீங்க எதுக்கு வர்றீங்க சொல்லியிருந்த நானே பெருமாலை தூக்கி கொண்டு வீட்டுக்கு வந்து இருப்பேன்' என்று கூறியதற்கு அந்த அரங்கமே சிரிப்பு மழையால் நிறைந்துள்ள வீடியோ தற்போதைய இணையத்தில் வைரலாகியுள்ளது. அறநிலையத்துறை கட்டண கொள்ளையை மதுரை முத்து அவர் பாணியில் கூறிவிட்டார் எனவும் விமர்சனங்கள் பறக்கிறது...