
நடிகை சாய் பல்லவி மலையாளத்தில் பிரமேம் படம் மூலம் அறிமுகமாகி தமிழ், தெலுங்கு என முன்னணி நடிகையாக நடித்து வருகிறார். இன்று உலகமெங்கும் காதலர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்தநிலையில் நடிகை சாய் பல்லவி வெளியிட்ட வீடியோவில் நாக சைதன்யா உடன் சாய்பல்லவி எடுத்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
நடிகை சமந்தா மற்றும் நாக சைதன்யா காதலித்து திருமணம் செய்துக் கொண்ட நிலையில், கடந்த 2021ம் ஆண்டு இருவரும் ஒருவரை ஒருவர் பிரிவதாக அறிவித்தது ரசிகர்களை மட்டுமின்றி சினிமா உலகத்தினரையே அதிர்ச்சியில் ஆழ்த்தியது. நடிகை சமந்தாவும் நடிகர் நாக சைதன்யாவும் விண்னைதாண்டி வருவாயா படத்தில் நடித்திருப்பார்கள் அந்த படத்தின் மூலம் இருவருக்கும் காதல் நட்பு ஏற்பட்டு தெலுங்கில் அந்த படம் டப் செய்த போது அதில், சமந்தா மற்றும் நாக சைதன்யா இருவரும் நடிகராக நடித்திருப்பார். நட்பாக பழகி திருமணம் செய்து கொண்ட நிலையில் வாழ்க்கை நன்றாக சென்று கொண்டிருக்கும் போது, புஷ்பா படத்தில் நடிகை சமந்தா ஒரு பாடலுக்கு நடனம் ஆடியிருப்பர். அந்த நடனம் மூலம் பல்வேறு சர்ச்சை வந்ததால் உடனே விவாகரத்து பெற்றுதும் கரணம் சமந்தா நடனம் ஆடியது என்று தான் சினிமா வட்டாரத்தில் கூறப்பட்டது.
நாக சைதன்யா பொன்னியின் செல்வன் படத்தில் வானதியாக நடித்த நடிகை சோபிதா துலிபை காதலித்த வருவதாகவும் அவருடன் டேட்டிங் சென்றதாகவும் புகைப்படங்களை வெளியிட்டு பல கிசுகிசுக்கள் கிளம்பின. அதே போல நடிகை சமந்தா வேறு ஒருவரை திருமணம் செய்து கொள்ளத்தான் நாக சைதன்யாவை பிரிந்தார் என்றும் கூறப்பட்டது. மூன்று ஆண்டுகள் ஆகியும் இருவரும் இரண்டாம் திருமணமே செய்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் காதலர் தினத்தை முன்னிட்டு நடிகை சாய் பல்லவி நடிகர் நாக சைதன்யாவுடன் வெளியிட்ட வீடியோ ஒன்று இணையத்தில் ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. இருவரும் இணைந்து ஏற்கனவே சமந்தாவை நாக சைதன்யா பிரிந்த அதே 2021ல் வெளியான லவ் ஸ்டோரி படத்தில் நடித்திருந்தனர். இந்நிலையில், தண்டேல் (Thandel) எனும் படத்தில் நடித்து வரும் நிலையில், அந்த படத்திற்கான புரமோஷனாக இப்படியொரு வீடியோவை வெளியிட்டுள்ளனர். சாய் பல்லவியின் தங்கச்சிக்கு சமீபத்தில் நிச்சயதார்த்தம் நடந்தது. ஆனால், சாய்பல்லவி இன்னும் திருமணம் செய்துகொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த வீடியோ இணையத்தில் வைரலாக இருவரும் காதலிக்கின்றனர் என நெட்டிசன்கள் கமெண்டை பதிவிட்டு வருகின்றனர். ஒரு வேலை படத்தின் புரமோஷனா என கேள்வி எழுப்பி வருகின்றனர். தமிழில் சிவகார்த்திகேயனுடன் நடித்தும் வரும் படத்திற்காக எந்த வீடியோவும் வெளியிடாமல் தெலுங்கு நடிகருடன் மட்டும் ஏன் வீடியோ என்பது குறித்து எந்த் வித விளக்கமும் தெரிவிக்கவில்லை என்பது குய்ப்பிடத்தக்கது.