
சென்னை நகருக்குள் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்துவதற்காக செங்கல்பட்டு மாவட்டம் கிளாம்பாக்கத்தில் புதிய பேருந்து நிலையம் அமைப்பதற்கான கட்டுமான பணிகள் கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில் தொடங்கப்பட்டது.. ஆனால் இந்த கட்டுமான பணிகள் அனைத்தும் முடிக்கப்பட்டு கடந்த டிசம்பர் 30ஆம் தேதி திமுக ஆட்சியில் முதல்வர் மு க ஸ்டாலினால் திறக்கப்பட்டது. என்று இந்த புதிய போக்குவரத்து நிலையும் திறக்கப்பட்டதோ அன்றிலிருந்தே பயணிகளுக்கு போதிய வசதிகள் முழுமையாக ஏற்படுத்தப்படவில்லை என்றும் கிளாம்பக்கம் செல்வதற்குள் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகின்றனர் என்ற விமர்சனங்களும் முன்வைக்கப்பட்டது. ஆம்னி பேருந்துகள் உள்ளிட்ட அனைத்து பேருந்துகளும் கிளம்பாக்கத்தில் இருந்து தான் இயக்கப்படும் என்று பிறப்பிக்கப்பட்ட அரசு உத்தரவுக்கு எதிராக ஆம்னி பேருந்துகள் போர் கொடி தூக்கினர் ஏனென்றால் ஆம்னி பேருந்துகள் நிறுத்துவதற்கு போதிய இட வசதிகள் இல்லை என்ற பெரும் சர்ச்சை வெடித்தது அதற்கு பிறகு சென்னை உயர்நீதிமன்றம் ஆம்னி பேருந்துகளை கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து இயக்கலாம் என்ற உத்தரவை பிறப்பித்தது.
இதனை அடுத்து கோயம்பேட்டை சுற்றி அமைந்திருந்த கடைகளில் உரிமையாளர்கள் அனைவரும் கிளாம்பாக்கத்தில் எங்களுக்கு ஒரு கடை கூட ஒதுக்கப்படவில்லை கேட்டால் பெரிய பெரிய மால்கள் பிராண்டட் கம்பெனிகள் பிராண்டட் கடைகள் வரப்போகிறதாக கூறுகிறார்கள் அப்போது எங்களது வாழ்வாதாரம் என்ன ஆவது என்ற குற்றச்சாட்டையும் முன் வைத்தனர். இந்த நிலையில் கடந்த வார இறுதியான வெள்ளிக்கிழமை அன்று மாலையிலிருந்து பெரும்பாலான சென்னை மக்கள் தங்கள் ஊருக்கு செல்வதற்கு கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தை அடைந்த பொழுது போதிய பேருந்துகள் இல்லாமல் கிட்டத்தட்ட இரவு முழுவதும் பேருந்து நிலையத்திலேயே ஆயிரக்கணக்கான மக்கள் பேருந்துக்காக காத்திருந்த செய்திகள் மற்றும் வீடியோக்கள் அனைத்தும் சமூக வலைதளங்களில் வைரலானது. பெரும்பாலான பேருந்துகளில் முன்பதிவுகள் செய்யப்பட்டதால் முன்பதிவு செய்யாதவர்களை ஏற்க மறுத்துவிட்டதாகவும் ஆனால் அதற்கு ஏற்ற வகையிலான மாற்று பேருந்து வசதிகள் கூட அங்கு இல்லை என்றும் பொதுமக்கள் குற்றம் சாட்டினர்.
நேரம் ஆக ஆக பேருந்து நிலையம் வெறுச்சோடி காணப்பட்டதால் மக்கள் ஆத்திரமடைந்து போக்குவரத்துக் கழக அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதோடு சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் அமர்ந்து விடிய விடிய மறியலில் ஈடுபட்டனர். இந்த திடீர் போராட்டத்தால் சுமார் இரண்டு கிலோமீட்டர் தூரம் வரை பேருந்துகள் நிறுத்தப்பட்டு போக்குவரத்து முடக்கம் ஏற்பட்டது. இதனால் அதிகாரிகள் பயணிகளை சமாதானப்படுத்தி கூடுதல் பேருந்துகள் இயக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்த பிறகும் பேருந்துகள் கிடைக்காமல் பல பெண்கள் குழந்தைகள் முதியோர்கள் பேருந்து நிலையத்தின் நடைமேடையில் உறங்கிக் கொண்டிருந்த அவலமும் ஏற்பட்டது. இந்த நிலை கடந்த இரண்டு நாட்களாக நீடித்து அதிக மக்கள் பயணிக்கின்ற வாழ்கின்ற ஒரு மாநகரில் போதிய பேருந்துகளை இல்லை என்றால் இந்த புதிய பேருந்து நிலையம் அமைத்ததற்கான காரணம் தான் என்ன? என்ற அதிருப்திகள் மக்களின் மனதில் நிறைந்திருந்த வேளையில் இதற்கான மாற்று நடவடிக்கைகள் மற்றும் உரிய நடவடிக்கைகளை எடுக்காமல் சென்னைக்கும் தனக்கும் எந்த சம்பந்தமும் இல்லாத வகையில் சென்னை மேயர் தனது செல்லப் பிராணி உடன் விளையாடியுள்ளார். அந்த வீடியோவே தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளது. இதற்கு முன்பாகவே சென்னை மழை வெள்ளத்தில் தத்தளித்த பொழுதும் மழை வெள்ளம் தேங்காதபடி வடிகால் நடவடிக்கைகள் எடுக்கப்பட்ட பொழுதும் சென்னை மேயர் போன்று பேசாமல் கடமைக்கேன்று அலட்சியமாக அவர் பேசியது அறிவாலயத்தையும் கோபப்படுத்தியது. இந்த நிலையில் மக்கள் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தால் பெரும் அதிருப்தியை சந்தித்துக் கொண்டிருக்கின்றனர் இந்த நிலையில் சென்னை மேயர் செல்லப்பிராணியுடன் விளையாடும் வீடியோ சென்னை மக்களை கடும் ஆத்திரம் அடைய வைத்துள்ளது.