
தமிழக அரசியலில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் அரசியல் பாதை என்பது ஒரு குடும்பத்தை ஒத்த அரசியலாகவே இருந்து வந்துள்ளது அந்த வகையில் முதலில் கருணாநிதி அதன் தலைவராக இருந்தார் தற்பொழுது அவரது மகன் மு க ஸ்டாலின் தலைவராக உள்ளார் இதற்கு அடுத்து உதயநிதி ஸ்டாலின் தலைவராக வருவாரா அவர் தான் வருவார் என்ற பேச்சுகள் அரசியல் வட்டாரங்களில் உள்ள பொழுது நான் அரசியலுக்கு வரப்போவதில்லை சினிமாவில் தான் எனது கவனம் இருக்கிறது என்று கூறி சில திரைப்படங்களில் நடித்து குறிப்பிடத்தக்க ரசிகர் பட்டாளத்தை பெற்ற உதயநிதி ஸ்டாலின் சிறிது சிறிதாக அரசியலின் நுழைய ஆரம்பித்தார். அவ்வப்போது பிரச்சாரங்களில் துணை நின்ற உதயநிதி 2019ல் நேரடியாகவே களம் கண்டு சேப்பாக்கம் தொகுதியில் வேட்பாளராக நின்று வெற்றியும் பெற்றார். அரசியலில் இவரது மிக முக்கிய நண்பராக அறியப்படுபவர் அமைச்சர் அன்பின் மகேஷ் பொய்யாமொழி, ஆனால் இவர் உதயநிதிக்கு முன்பாகவே அரசியலுக்கு வந்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது இருப்பினும் இருவரும் தற்பொழுது நெருங்கிய நண்பர்களாக வலம் வருகின்றனர்.
பெரும்பாலான நிகழ்ச்சிகளில் இருவரும் இணைந்தே கலந்து கொள்கின்றனர் அது மட்டும் இன்றி உதயநிதியின் சினிமா நிகழ்ச்சிகள் அனைத்தையும் அன்பில் மகேஷ் பொய்யா மொழியே கவனித்து வருவதாகவும் கூறப்படுகிறது. மேலும் கடந்த வருடத்தில் அமைச்சர் உதயநிதியின் பிறந்தநாள் அன்று செய்தியாளர்கள் மத்தியில் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, இன்றைய இளைஞரணி செயலாளராக இருக்கும் அமைச்சர் அடுத்த பிறந்த நாளில் அமைச்சராக இருக்க வேண்டும் மேலும் விரைவில் கழக தலைவராகவும் ஆக வேண்டும் அதுவே எனது விருப்பம் என்று கூறினார். இவர் எதார்த்தமாக கூறினாரா அல்லது நடக்கும் என்ற விதத்தில் கூறினாரா என்று தெரியவில்லை தற்பொழுது உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமின்றி கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடைபெற்ற சினிமா நிகழ்ச்சிகள் கலந்து கொண்ட உதயநிதி மற்றும் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இருவரும் வார்த்தை விளையாட்டிலும் கலந்து கொண்டு தனது நட்பை வெளிப்படுத்தினர்.
மேலும் சமீப சில நாட்களாகவே அமைச்சரு உதயநிதி துணை முதல்வர், வருங்கால முதல்வர் என்ற ஒரு கருத்துக்களை அன்பில் மகேஷ் ஆங்காங்கே சில நிகழ்ச்சிகளில் குறிப்பிட்டு வருவதும் அரசியல் வட்டாரங்களில் பரபரப்பாக பேசப்படுகிறது, இப்படி உதயநிதியும் அன்பின் மகேஷ் உடன்பிறவா சகோதரர்கள் போன்று நட்பு பாராட்டி வருகின்றனர். இந்த நிலையில் திருச்சியில் சமீபத்தில் நடைபெற்ற அரசு நிகழ்சியில் கலந்து கொள்வதற்காக திருச்சி வந்தடைந்த முதல்வர் மு க ஸ்டாலினை வரவேற்கும் வகையில் முரசொலி பத்திரிக்கையில் அமைச்சர் அன்பின் மகேஷ் பொய்யாமொழி கொடுத்த விளம்பரத்தில் பெரியார், அண்ணா மற்றும் அன்பின் மகேஷ் பொய்யாமொழி யின் தாத்தா மற்றும் அப்பாவின் புகைப்படங்கள் இடம் பெற்றிருந்தது முதல்வர் மு க ஸ்டாலினின் புகைப்படம் அடுத்ததாக உதயநிதியின் புகைப்படம் இடம்பெற்றுள்ளது.
ஆனால் இதில் முன்னாள் முதல்வரும் திராவிட கழகத்தின் முன்னால் தலைவருமான கருணாநிதி அவர்களின் புகைப்படம் இடம்பெறவில்லை, கலைஞரின் நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டு வருகிற நிலையில் கருணாநிதி புகைப்படமே இடம்பெறவில்லை என்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. அதுமட்டுமின்றி உதயநிதியின் தாத்தாவான கருணாநிதியை புறக்கணித்துவிட்டு அமைச்சர் அன்பில் மகேஷ் விளம்பரம் கொடுத்தது குறித்து நண்பனின் தாத்தாவை இப்படி மறக்கலாமா என்ற கேள்விகளுக்கும் அரசியல் ரீதியில் எழுந்துள்ளது.