24 special

வடநாட்டில் விஜய் சேதுபதி செய்த காரியம் அதிர்ச்சியில் திராவிட ஸ்டாக்குகள்...

kanimozhi, vijaysethupathi
kanimozhi, vijaysethupathi

கடந்த 2020 ஆம் ஆண்டில் தற்போதைய தூத்துக்குடி எம்பி கனிமொழி சென்னை விமான நிலையத்தில் இந்தி தெரியாத காரணத்தினால் மத்திய பாதுகாப்பு  படையினரால் தகராறில் ஈடுபட்டார். அதாவது ஹிந்தி தெரியாது என்று கூறிய கனிமொழிக்கு நீங்கள் இந்தியர்தானா என்றும் அந்த பாதுகாப்பு படை வீரர் கேள்வி எழுப்பியது பெரும் பரபரப்பானது. இதுகுறித்து கனிமொழி எம்பி தனது சமூக வலைதளத்திலும் பதிவிட்டு தமிழகம் முழுவதும் இச்செய்தியை கொந்தளிக்க வைத்தார். இவரை அடுத்து இந்தி தெரியாததால் அவ மதிக்கப்பட்ட மற்ற சிலரும் தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டு இந்த விஷயத்தை பெரிதாக்கி சார்ச்சையாகினர். அதுமட்டுமின்றி ஹிந்தி தெரியாது போடா என்ற வார்த்தைகள் அந்த சமயத்தில் சமூக வலைதளங்களில் ரெண்டானது இதனை அடுத்து ஹிந்தி தெரியாது போடா என்ற வார்த்தைகள் பொறிக்கப்பட்ட டி-ஷர்ட்களும் டிரெண்டானது.


திமுக பிரமுகர்களும் திரை உலக பிரபலங்கள் பிரபலரும் ஹிந்தி தெரியாது போடா என்ற டீசர்டை அணிந்து சமூக வலைதளங்களில் புகைப்படத்தை பதிவிட்டு இந்த முழக்கத்தை காட்டு தீ போல் பரப்பினர். இந்த சம்பவத்திற்கு முன்பாகவே இயக்குனர் வெற்றிமாறன் தனக்கு இந்தி தெரியாததால் டெல்லி விமான நிலையத்தில் அவமானப்படுத்தப்பட்டதாக பேட்டி ஒன்றில் தெரிவித்தார். இதனை அடுத்து அவரது ரசிகர்கள் வெற்றிமாறன் அவமதிக்கப்பட்டதை குறித்து அதிர்ச்சியும் கோபமும் அடைந்து நம் நாட்டின் தாய்மொழியாக இந்தி எப்படி இருக்கலாம் என்ற பல கேள்விகளை எழுப்பியதோடு ஹிந்தி தெரியாது போடா என்ற ஹேர் ஸ்டைக்கையும் ட்ரெண்ட் ஆக்கினர். இந்த இரு சம்பவங்களிலும் சினிமா துறையைச் சேர்ந்த பல முன்னணி ஹீரோ ஹீரோயின்கள் ஹிந்தி தெரியாது போடா என்ற வார்த்தைகள் ட்ரெண்டாக்கியதோடு அவ்வாக்கியங்கள் கொண்ட டி-ஷர்டையும் வாங்கி அணிந்து கொண்டு தங்களது சமூக வலைதளங்களில் பதிவிட்டது வைரலானது.

அதுமட்டுமின்றி கடந்த சில மாதங்களுக்கு முன்பு கூட கோவா விமான நிலையத்தில் தமிழ் பெண் ஒருவர் ஹிந்தி தெரியாத காரணத்தினால் மத்திய பாதுகாப்பு படையினரால் மிரட்டப்பட்ட சம்பவமும் ஹிந்தி தெரியாது போடா என்ற தீயை மீண்டும் பற்ற வைத்தது. இந்த சம்பவம் குறித்து தமிழக முதல்வர் மு க ஸ்டாலினும் கண்டனம் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ஹிந்தி தெரியாததால் திரை உலகை சேர்ந்த ஒருவரும் சாதாரண பெண்மணியும் அரசியல் பிரபலமும் அவமதிக்கப்பட்ட காரணத்திற்காக தமிழக முழுவதும் தமிழகத்தில் ஏன் இந்தி பேச வேண்டும்!  தமிழ் மொழி தெரியவில்லை என்றால் தான் வருத்தப்பட வேண்டும்! என்ற பதிவுகளுக்கு அடித்தளம் போட்டதோடு ஹிந்தி தெரியாது போடா என்ற டீசர்ட்டுகள் அதிக அளவில் விற்பனையாவதற்கு காரணமாக அமைந்தது. இந்த சம்பவத்தில் தமிழ் திரை உலகை சேர்ந்தவர்கள் தீவிரமாக இறங்கி சமூக வலைதளங்களில் இவ்விவகாரத்தை வைரலாக்கினர். 

ஆனால் தற்போது நிலைமை மாறிவிட்டதாக விமர்சனங்கள் எழுந்துள்ளது. அதாவது நடிகர் விஜய் சேதுபதி ஹிந்தியில் தொடர்ச்சியாக பல படங்களில் நடித்த வருகிறார் அதுமட்டுமின்றி சமீபத்தில் கூட நடிகை கத்ரீனா கைப்ப்புடன் இணைந்து மேரி கிறிஸ்மஸ் என்ற படத்திலும் நடித்த விஜய் சேதுபதி அங்கு நடைபெற்ற பத்திரிகையாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டு பேசியுள்ளார் அதுவும் ஹிந்தியில் சரளமாக பேசி உள்ளார். இதனால் ஹிந்தி தெரியாது போடா என்று தமிழ் திரை உலகின் போராளிகள் அனைவரும் கூறியது எல்லாம் பொய்யா? வடஇந்தியா சென்றால் இந்தி பேசுவீர்கள் என்று விமர்சனங்கள் முன்வைக்கப்படுவது குறிப்பிடத்தக்கது. மேலும் விஜய் சேதுபதி தரப்பில் இனி திராவிட ஸ்டாக்குகள் பேச்சை கேட்டால் நம்ம கதி அவ்ளோதான் என முடிவெடுத்ததாக தெரிகிறது.