24 special

சிவகார்த்திகேயனுக்கு அயலான் படத்தில் வந்த சிக்கல்...! இப்படி மாட்டிக்கிட்டியே பங்கு! நெட்டிசன்கள் கிளப்பிய பூகம்பம்!

Sivakarthikeyan
Sivakarthikeyan

சினிமாவில் வாழ்ந்து வரும் நடிகர்களில் ஒருவரான நடிகர் சிவகார்த்திகேயன் சின்னத்திரையில் நிகழ்ச்சி தொகுப்பாளர்க தொடங்கிய சினிமா பயணம் அதன் பிறகு தனுஷுடன் இணைந்து 3 படத்தின் மூலமே வெள்ளித்திரையில் காலடி எடுத்து வைத்தார். பிறகு நடிகராக அவதாரம் எடுத்த சிவகார்திகேயன் காமடி கலந்த சில நகைச்சுவை படத்தில் நடித்தார் அது மக்களிடம் வரவேற்பு பெற்ற நிலையில் ஹீரோவாக தன்னை மாற்றி கொண்டார். கடைசியாக நடித்த மாவீரன் படம் வெற்றியை தொடர்ந்து கமல்ஹாசன் தயாரிப்பில் ஒரு படத்தில் நடித்து வருகிறார்.  


ஆர்.ரவிக்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் ஏ.ஆர். ரகுமான் இசையிலும் ராகுல் பிரீத்தி சிங் மற்றும் யோகிபாபு உள்ளிட்ட பலர் நடித்த படம் அயலான். சுமார் 4 வருடங்களுக்கு முன்பு எடுத்த இந்த படம் கிராபிக்ஸ் பணிகளுக்காக வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. அதிலும், இந்த படத்தில் இதுவரை இந்திய சினிமாவில் இல்லாத அளவிற்கு ஏலியனை கொண்டு உருவாகியுள்ள படம் பொங்கலுக்கு வெளியாகவுள்ளது. பொங்கலுக்கு முன்னணி ஹீரோக்களின் 4 படங்கள் இருப்பதால் எந்த படம் வெற்றி வாகை ஓடும் என தெரியவில்லை. நேற்று இந்த படத்தின் ட்ரைலர் வெளியான நிலையில் மக்களிடத்தில் வரவேற்பு பெற்று வருகிறது.

ட்ரைலர் வெளியானதும் நெட்டிசன்கள் அந்த படத்தின் கதைக்களத்தை ஆராய்ந்து இது எது இல்ல என்ற ரேஞ்சிக்கு டெம்ப்ளட் போட்டு வருகின்றனர். அயலான் பட டிரைலரும் ஹாலிவுட்டில் 2011ம் ஆண்டு வெளியான பால் திரைப்படம் தான் இது என கூறுகின்றனர். " வழி தவறி நம்ம பூமிக்கு வந்த ஏலியன, ஆராய்ச்சி பண்ணனும்னு நினைக்கிற ஒரு கூட்டத்துக்கிட்ட இருந்து காப்பாத்தி, திரும்ப அவங்க கிரகத்துக்கே  அனுப்ப  இரண்டு  நண்பர்கள் அந்த ஏலியனோட சேர்ந்து அடிக்கிற  லூட்டி தான்  இந்தத் திரைப்படம்  . ஹாலிவுட்  ஏலியன் திரைப்படங்களை நையாண்டி அடித்து எடுக்கப்பட்ட ஒரு நல்ல பொழுதுபோக்கு காமெடி படம்" இதை எதற்கு நான்கு வருடமாக குக்கிங் பண்ணாரு இயக்குனர் என கலாய்த்து வருகின்றனர். அதிலும், சிவகார்த்திகேயன் நடித்து வெளியான படங்களிலேயே அதிகப்படியான நாடுகள் மற்றும் திரைகளில் வெளியாகவுள்ள திரைப்படம் அயலான் இந்த நேரத்தில் இப்படி பண்ணலாமா என சிவகார்த்திகேயன் ரசிங்கர்கள் கமெண்டுகளை பதிவிட்டு வருகின்றனர்.

ஏற்கனவே, சிவகார்த்திகேயன் இசையமைப்பாளர் இமானின் மனைவி விவகாரத்தில் முக்கிய பங்கு சிவகார்த்திகேயனுக்கு இருப்பதாக குற்றம் சாட்டப்பட்ட நிலையில், வெளியில் வராமல் இருந்த சிவகார்த்திகேயன் இப்போது இந்த விவகாரத்திற்கு என்ன பண்ண போகிறார் என ஒருதரப்பும். மேடையில் நிச்சயம் தனது வாழ்கை குறித்து சிவா அழுகை போகிறார் பட ப்ரோமோஷன் கண்டிப்பாக பண்ண வேண்டும் என ஒரு தரப்பும் மாறி மாறி காமெண்டுகளை பதிவிட்டு வருகின்றனர்.