
திரிணாமுல் காங்கிரசைச் சேர்ந்த மேற்கு வங்க மாநிலம் கிருஷ்ணா நகர் தொகுதி எம்பி ஆக உள்ளவர் மஹுவா மொய்த்ரா, நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கும் இவர் நாடாளுமன்றத்தில் பாஜகவிற்கு எதிரான கருத்துக்களையும் விமர்சனங்களையும் முன்வைத்து வருபவர். இதனை அடுத்து கடந்த சில நாட்களுக்கு முன்பு நாடாளுமன்றத்தில் பிரதமர் நரேந்திர மோடி குறித்தும் தொழில் அதிபர் அதானி குறித்தும் ஒரு கேள்வி எழுப்பியிருந்தார் அது பெரும் சர்ச்சையானது. மேலும் நாடாளுமன்றத்தில் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் தொழிலதிபர் அதானி குறித்து கேள்வி எழுப்புவதற்கு மஹிவா மொய்த்ரா பணம் உள்ளிட்ட பல பரிசுப் பொருட்களை தொழிலதிபர்த் தர்ஷன் ஹிரா நந்தானிடம் லஞ்சமாக பெற்றுள்ளதாக பாஜக எம் பி நிஷாந்த் துபே குற்றச்சாட்டை முன் வைத்தார்.
இத்தனை அடித்து நாடாளுமன்றத்தில் லஞ்சம் பெற்று கேள்வி எழுப்பிய குற்றச்சாட்டை பாஜக எம் பி வினோத்குமார் சோன்கர் தலைமையிலான மக்களவை நெறிமுறை குழு விசாரணை நடத்தியது. அந்த விசாரணையில் மஹுவா தொழிலதிபர் தர்ஷன் ஹீரா நந்தானிடம் பணம் பெற்றது நிரூபணம் ஆனது. அதாவது நாடாளுமன்ற அவையில் உறுப்பினர்கள் கேள்வி எழுப்புவதற்கு அதற்கென்று தனி இணையதளம் ஒன்று கொடுக்கப்பட்டிருக்கும் அந்த இணையதளத்தில் ஒவ்வொரு எம்பிக்கும் உரிய தனித்தனி பாஸ்வேர்டுகள் கொடுக்கப்பட்ட இருக்குமாம், அந்த பாஸ்வேர்டுகளை பயன்படுத்தியே எம்பிகள் நாடாளுமன்றத்தில் கேள்விகளை முன் வைப்பார்கள் ஆனால் எம்பி மஹுவா இந்த பாஸ்வேர்டை தொழிலதிபர் தர்ஷனிடம் கொடுத்துள்ளதாகவும் மேலும் தர்ஷன் இதனை பயன்படுத்தி எம்பி காண கேள்வியை இவர் கேட்டதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதனை அடுத்து திரிணமுல் காங்கிரஸ் எம்பி மஹுவா மொய்த்ராவின் பதவி பறிக்கப்பட்டது. இதுகுறித்து மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா, மக்களவை நெறிமுறைக் குழு பரிந்துரை குழுவின் அறிக்கை ஏற்கப்படுகிறது, மஹுவா மொய்த்ராவின் நடவடிக்கை அநாகரிகமானது அறமற்றது, அவையின் மாண்பை சிதைக்கும் வகையில் மஹுவா செயல்பட்டுள்ளார் அதனால் அவரால் இனி மக்களவை உறுப்பினராக தொடரை இயலாது என்று கூறினார். ஆனால் மஹுவா நெறிமுறை குழுவின் அறிக்கையை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து மனு தாக்கல் செய்திருக்கிறார். அந்த மனுவும் தற்போது நிலுவையில் உள்ளது. அதுமட்டுமின்றி சி பி ஐ இதற்கான விசாரணையையும் கையில் எடுத்து மேற்கொண்டு வருகிறது இந்த நிலையில் வெளிநாட்டு பண பரிவர்த்தனை மோசடியில் மஹுவா ஈடுபட்டு உள்ளதாகவும் அது குறித்த வழக்கு அமலாக்கத்துறை பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறது. அதோடு இதுகுறித்து விசாரணை மேற்கொள்வதற்கு மஹுவாவிடம் விசாரணை மேற்கொள்ளவும் அமலாக்கத்துறை அதிகாரிகள் திட்டமிட்டு வருகின்ற பிப்ரவரி 19ஆம் தேதி அன்று அமலாக்க துறையின் அலுவலகத்தில் நேரில் ஆஜராகும்படி மஹுவா மொய்த்ராவிற்கு அமலாக்கத் துறை அதிகாரிகள் சம்மன் அனுப்பியுள்ளனர்.
ஏற்கனவே மக்களவையில் மஹுவா எம்பியாக இருக்கும் பொழுது கேட்கப்பட்ட பெரும்பான்மையான கேள்விகளில் அதானி குறித்த கேள்வியை கேட்டு அதற்காக தொழிலதிபர் தர்ஷன் ஹீராவிடம் இரண்டு கோடி வரை லஞ்சம் பெற்று அதனால் தன் பதவியை இழந்து அதற்கான விசாரணையை சி பி ஐ ஒரு பக்கம் தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில் மறுபக்கம் வெளிநாட்டு பண பரிவர்த்தனை மோசடியில் மஹுவா சம்பந்தபட்டிருப்பதை கண்டறிந்து விசாரணைக்காக அவரை நேரில் ஆஜராகும் படி அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி உள்ளதும் திரிணாமுல் காங்கிரஸ் தரப்பை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இதனால் வழக்கமாக பெரும் வாக்குகளை விட வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் குறைவான வாக்குகளை பெற்று மீண்டும் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான ஆட்சியே அமையும் என அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.