Cinema

மன்சூர் அலிகானின் புதிய கட்சி.... நான் நடிகரே இல்லை ஓபன் டாக்..!

Vijay, Mansoor alikhan
Vijay, Mansoor alikhan

சினிமாவில் இருக்கக்கூடிய நடிகர்கள் அரசியலுக்கு வரும் ஆசை அதிகரித்துள்ளது தற்போது உள்ள நடிகர்கள் அரசியலில் ஆர்வம் காட்ட தொடங்கிவிட்டனர். அந்த வகையில் நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதாக கூறினார் ஆனால் திடீரென்று தனது முடிவை மாற்றி கொண்டார். அந்த வகையில் கமல்ஹாசன் கட்சி தொடங்கியதும் மீண்டும் சினிமாவுக்கு சென்றார். தற்போது அரசியலும், சினிமாவிலும் கவனம் செலுத்தி வருகிறார். இந்த நிலையில் விஜய்யும் கட்சி தொடங்கியதும் நடிகர் விஷாலும் கட்சி தொடங்குவதாக கூறினார். அந்த வரிசையில் நடிகர் மன்சூர் அலிகான் கட்சியை தொடங்கி பேசியுள்ளது விஜய்க்கு போட்டியாக இறங்கியுள்ளார் என்ற வகையில் பரபரப்பாக பேசப்பட்டுவருகிறது.


நடிகர் விஜய் மக்கள் மனதில் இடம் பிடித்ததோடு இல்லாமல் மக்களுக்கும், மாணவர்களுக்கும் உதவி செய்து வந்தார். இந்நிலையில் தமிழக வெற்றி கழகம் என்ற கட்சியை தொடங்கினார். இது விஜய் மத்தியிலும் அரசியல் தலைவர்கள் மத்தியிலும் நல்ல ஆதரவு கிடைத்தது. இந்நிலையில், நடிகர் மன்சூர் அலிகான் இந்திய ஜனநாயக புலிகள் என்ற அரசியல் கட்சியை ஆரம்பித்து அந்த கட்சியை தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய மன்சூர் அலிகான், நடிகர்கள் கட்சி தொடங்குவதில் எனக்கு உடன்பாடு இல்லை, என்னை நான் நடிகனாகவே நான் நினைக்கவில்லை.

ஏன் என்றால் 97ம் ஆண்டு தான் என் முதல் படம் வெளியானது. ஆனால், நான் 86ம் ஆண்டு நடைபெற்ற மனித சங்கலி போராட்டத்தில் கலந்து கொண்டேன். அதன் பிறகு காவேரி போராட்டம், தமிழ் ஈழப்போராட்டம் என பல போராட்டங்களில் கலந்து கொண்டு இருக்கிறேன். நடிப்பு என்பதை நான் தொழிலாகத்தான் பார்க்கிறேன். இப்போது நாட்டில் என்ன நடக்கிறது என்று உங்களுக்கு நன்றாக தெரியும். நான் ஒரு முடிவோடு தான் இறங்கி இருக்கிறேன். இதுவரை கட்சியில் 15 ஆயிரம் பேர் சேர்ந்து விட்டார்கள் உறுப்பினர்கள் போட்டு அதற்கான வேலை நடந்து கொண்டு இருக்கிறது. எங்களின் இந்திய ஜனநாயக புலிகள் கட்சி இந்தியா முழுவதும் உரிமைக்காக போராடும் கட்சியாக இருக்கும் என கூறி, வரக்கூடிய மக்களவை தேர்தலில் நிச்சயம் போட்டியிடுவேன் என தெரிவித்துள்ளார். 

தனியாக கட்சி தொடங்குவதற்கான நோக்கம் என்ன என்று செய்தியாளர் கேட்ட கேள்விக்கு பதில் அளித்த மன்சூர் அலிகான், நடிகர் விஜய் அரசியலுக்கு வந்துள்ளார் என்பதற்காக அவருடன் உடனே சேர்ந்து பயணிக்க முடியாது. முதலில் கல்யாணம் நடக்கட்டும்.. அப்புறம் முதலிரவு பற்றி பேசலாம் என்று அந்த பேட்டியில் பேசி உள்ளார். இதில் எதற்காக விஜயை தாக்கி பேசியுள்ளார் என்பது புரியாத புதிராக உள்ளதாக கூறுகின்றனர். ஒருவேளை விஜய் சட்டமன்ற தேர்தலில் வெல்லட்டும் அதன் பிறகு பத்துக்கொள்ளலாம் என்பதை தான் மன்சூர் அலிகான் மறைமுகமாக பேசியுள்ளாரா என யோசிக்க வைக்கிறது. விஜய்க்கு பொடியாக மன்சூர் அளித்தான் கட்சியை பதிவு செய்துள்ளார் என கூறப்படுகிறது. முன்னதாக கடந்த மாதம் குடியரசு தின விழாவில் நடிகர் மன்சூர் அலிகான் தேசிய கொடியை தலைகீழாக ஏற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.