
தமிழ் சினிமாவில் அஜித், சூர்யாவுக்கு பிறகு டாப் 5 இடத்தில் உள்ளவர் நடிகர் சிவகார்த்திகேயன். தற்போது அயலான் படத்தின் மூலம் சிறு குழந்தைகள் இடத்திலும் நீங்காத இடம் பிடித்தவர். சினிமாவிற்கு பிறகு நிகழ்ச்சிகளில் மற்ற நடிகர்களை போல மிமிக்ரி செய்து வந்த சிவகார்த்திகேயன் கல்லூரி நிகழ்ச்சிகளில் சிறப்பு விருந்தினராக பங்கேற்று வந்தவர். இன்று அவரது பிறந்தநாளை முன்னிட்டு சினிமா நட்சத்திரங்கள் அவரது ரசிகர்கள் வாழ்த்து கூறிவருகின்றனர். இந்நிலையில் பிரபல திரைவிமர்சகர் ப்ளு சட்டை மாறன் ஒரே வார்த்தையில் சிவாவை தாக்கியுள்ளார்.
தனியார் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக இருந்து வந்த சிவகார்த்திகேயன் சினிமாவில் சின்ன சின்ன ரோலில் அறிமுகமானார். அதன் பிறகு நடிகர் தனுஷ் மூன்று படம் மூலமாக சிவகார்த்திகேயனை அறிமுகப்படுத்தினார். அப்படியே அடுத்தடுத்த படங்களில் வாய்ப்பு கிடைத்து வந்தது, தொடர்ந்து காமெடி கலந்த காதல் படத்தில் நடித்து வந்த சிவகார்த்திகேயன் தொடர் வெற்றி படங்களிலும் கொடுத்து வந்தார். இவர் நடிப்பில் வெளியான மாவீரன் படம் மற்றும் அயலான் படம் ஹிட் அடித்தது. இந்நிலையில் சினிமாவிற்கு சிவகார்த்திகேயன் வந்து 12 ஆண்டுகள் கடந்து பயணத்தை தொடர்ந்து வருகிறார். இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வரும் சிவாவிற்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். பிறந்தநாளை முன்னிட்டு நேற்று சிவகார்த்திகேயன் நடித்து வரும் அமரன் படத்தின் டைட்டில் வீடியோ வெளியானது.
இந்த டீசருக்கு மக்கள் இடத்தில் வரவேற்பு கிடைத்து வருகிறது. தற்போது வரக்கூடிய படத்தில் கொலை, கஞ்சா போன்று இளைஞர்களை தவறான பாதைக்கு கொண்டு செல்லும் இந்த காலத்தில் நாட்டின் மீது பற்று தொடர்பாக ராணுவத்தை மையமாக கொண்டு கதையை உருவாக்கியதற்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். முன்னதாக விஜய் சினிமாவில் இருந்து அரசியலுக்கு போவதால் அந்த இடத்தை நிரப்ப சிவகார்த்திகேயன் சரியான நபர் என அவரது ரசிகர்கள் இணையத்தில் கொண்டாடி வந்தனர். குறிப்பாக சிவாவிடம் அவரது நண்பர்களே கூறியதாக கூட சில தகவல் வந்தன.
இந்த நிலையில் இணையத்தில் சிவகார்த்திகேயனுக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறி வரும் நிலையில், பிரபல செய்து நிறுவனம் ஒன்று குட்டி தளபதிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவிக்க, அதே போல் சிவகார்திகேயன் 12 வருடத்தில் அசுர வளர்ச்சி என்பது போலும் புகழாரம் சூட்டி ஒரு புகைப்படம் வெளியிட்டது. இது அவரது ரசிகர்களுக்கும் நெகிழ்ச்சியாக இருந்து வருகிறது. இதனை திரை விமர்சகர் ப்ளு சட்டை மாறன் குட்டி தளபதி என்ற கேப்ஷனை போட்டு ஒரே வார்த்தையில் பங்கம் செய்துள்ளார். இவர் எப்போதும் மூத்த நடிகர் புது நடிக என யார் படத்தையும் பாராட்டாமல் கலாய்த்து வருவதே தொடர்கதையாக வைத்துள்ளார்.
12 ஆண்டுகளில் அசுர வளர்ச்சி... குட்டி தளபதி சிவகார்த்திகேயன் பிறந்தநாள் இன்று என்ற போஸ்டர் ஒன்றை இணைய பக்கத்தில் ஷேர் செய்துள்ள ப்ளூ சட்டை மாறன், 'குட்டி தளபதியா..?' என நக்கலாக கேள்வி எழுப்பியுள்ளார். இதற்கு நெட்டிசன்கள் கங்கா.. தன்னை உண்மையான சந்திரமுகியாக நினைத்து கொண்டாள் என விஜய் நடித்த பீஸ்ட் படத்தின் புகைப்படமும், சிவகார்த்திகேயன் நடித்து வரும் அமரன் படத்தின் புகைப்படமும் ஷேர் செய்து அவர்களும் கலாய்த்து வருகிறார்கள். மேலும், வடிவேலு பாணியில் பெரிய பகவதி, குட்டி பகவதி என பங்கம் செய்து வருகின்றனர். சிவகார்த்திகேயனை கிரிஞ்ச் ஹீரோ என அடிக்கடி ட்ரோல் செய்து வருகிறார் ப்ளூ சட்டை மாறன். தற்போது சிவகார்த்திகேயன் விஜய் பக்கம் செல்வதால் விடாமல் சிவகார்த்திகேயனை கலாய்த்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.