24 special

பிரதமர் மோடி அழுத்தி அழுத்தி குறிப்பிட்ட கருத்தால் அதிர்ச்சியடைந்த முக்கிய கட்சிகள்!

Modi
Modi

நாட்டின் 75 வது சுதந்திர தினவிழா கோலாகலமாக நாடு முழுவதும் கொண்டாப்பட்டு வருகிறது,சுதந்திர தின விழாவை ஒட்டி டெல்லி செங்கோட்டையில் தேசியக் கொடி ஏற்றி உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி விடுதலை வீரர்களை நினைவு கூர்ந்தார். குறிப்பாக விடுதலைப் போரில் பழங்குடியினத் தலைவர்களின் பங்களிப்பைப் பாராட்டிப் பேசினார்.


நாடு முழுவதும் சுதந்திர தினம் உற்சாகமாகக் கொண்டாடப்படும் வேளையில் பிரதமர் நரேந்திர டெல்லி செங்கோட்டையில் தேசியக் கொடி ஏற்றினார். பின்னர் பிரதமர் தனது சுதந்திரதின உரையை நிகழ்தினார் அப்போது பிரதமர் குடும்ப ஆட்சிக்கு எதிராக பேசியது பலரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

இந்தியா முழுவதும் உள்ள அனைத்து மொழிகள் குறித்தும் நாம் பெருமைப்பட வேண்டும் என தெரிவித்த பிரதமர்.பெண்களை அவமரியாதை செய்வதை இந்தியர்கள் நிறுத்திக் கொள்ள வேண்டும் என குறிப்பிட்டார்

அதன்பிறகு நாட்டின் வளர்ச்சிக்கு பாலின சமத்துவ அவசியம் எனவும் குறிப்பிட்டவர், பெண்கள் குறித்த மனநிலையை இந்தியர்கள் மாற்றிக் கொள்ள வேண்டும் என தெரிவித்தார் 

பெண்களை வார்த்தைகளாலும் செயல்களாலும் இழிவு படுத்துவதை முடிவுரை எழுத வேண்டும் என பிரதமர் மோதி சுதந்திர தின உரையில் பேசினார்.

அதன் பிறகுதான் பிரதமர் ஒரு முக்கியமான கருத்தை தெரிவித்தார் ஊழல் செய்தவர்கள் எத்தனை பெரிய நபர்களாக இருந்தாலும் அவர்கள் தப்பிக்க முடியாது என அழுத்தம் திருத்தமாக குறிப்பிட்டார் 

நாட்டை கொள்ளை அடித்தவர்கள் நிச்சயம் அதற்கான விலையை கொடுத்தே ஆக வேண்டும் எனவும் குடும்ப அரசியலை பற்றியும் விமர்சனம் செய்தார். பிரதமர் குடும்ப. அரசியல் என குறிப்பிட்டது, காங்கிரஸ், திமுக, அகிலேஷ், தேஜாஸ்வி சூர்யா இன்னும் பிற கட்சிகளை மையமாக கொண்டு பேசியதாக கூறப்படுகிறது.

ஏற்கனவே ராகுல் காந்தி, சோனியா காந்தி போன்றோர் அமலாக்கதுறை விசாரணையில் உள்ள நிலையில் பிரதமர் எவ்வளவு பெரிய நபர்களாக இருந்தாலும் நிச்சயம் தண்டனை கிடைக்கும் என குறிப்பிட்டு இருப்பது மிக பெரிய அதிர்ச்சியை அமலாக்கதுறை விசாரணையில் உள்ள நபர்களுக்கு கொடுத்துள்ளது.