இந்து முன்னணி நிகழ்ச்சி ஒன்றில் ஈவேரா சிலையை அகற்றவேண்டும் என ஸ்டண்ட் மாஸ்டர் கமல கண்ணன் பேசினார் அவரது பேச்சிற்கு ஆதரவு அதிகரித்த நிலையில், திடீர் என பெரியாரிஸ்ட் அமைப்புகள் போர் கொடி தூக்க கனல் கண்ணன் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தனர்.
இந்த சூழலில் கனல் கண்ணன் முன் ஜாமீன் கோரி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து இருந்தார், அவரது முன் ஜாமீன் மனுவை ரத்து செய்யவேண்டும் என தமிழக அரசு தரப்பில் வாதம் வைக்கப்பட்ட நிலையில் முன் ஜாமீன் ரத்து செய்யபட்டது, இந்த சூழலில் புதுச்சேரியில் இருந்த மாஸ்டர் கனல் கண்ணனை தமிழக காவல்துறை கைது செய்ததாக செய்திகள் வெளியானது.
இது பல்வேறு தரப்பை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது இந்த நிலையில் இந்து முன்னணி அமைப்பை சேர்ந்த குற்றாலநாதன் தமிழக அரசை நோக்கி கேள்வி எழுப்பி இருக்கிறார் அதில், சுதந்திர திருநாளில் கைது, தில்லை நடராஜரை கேவலமாக பேசிய யூடிப்பர் விஜய்யை கைது செய்ய துப்பில்லாத மு.க.ஸ்டாலின் அரசு.
இந்துக்களை ஒரு மணி நேரத்தில் கொல்வோம்னு பேசிய Sdpi கட்சி நெல்லை மாவட்ட மகளிரணி தலைவியை ஜன்னத்ஆலிமாவை கைது செய்ய துப்பில்லாத மு.க.ஸ்டாலின் அரசு , முஸ்லீம்கள் இந்திய நாட்டை 20% பிரித்து கேளுங்கள்னு பேசிய பாதிரி ஜெகத்கஸ்பரை கைது செய்ய துப்பில்லாத மு.க.ஸ்டாலின் அரசு.
கடவுள் நம்பிக்கையாளர்களை இழிபடுத்தும் ஈ.வே.ரா சிலையை அப்புறபடுத்தனும்னு சொன்னதுக்காக இந்துமுன்னணி நிர்வாகி கனல் கண்ணன் கைது அதுவும் சுதந்திர திருநாளில்.மகா கேவலமான செயல் என தனது ஆதங்கத்தை குற்றாலநாதன் எழுப்பி இருக்கிறார், இந்து முன்னணி சார்பில் வழக்கறிஞர் குற்றாலநாதன் எழுப்பிய கேள்வி பரபரப்பை உண்டாக்கி இருக்கிறது.