24 special

பட்டமளிப்பு விழாவிற்கு சென்ற பேராசிரியர் சிக்கினார்... இதுல அம்மணி திமுகவாமே?

RADHIKA, RAJENDRAN
RADHIKA, RAJENDRAN

தற்போது அரசியல் வட்டாரம் எப்படி உள்ளது என்று பார்க்கும் பொழுது எங்கு பார்த்தாலும் ஒரே பரபரப்பாக தான் இருக்கிறது. ஏனென்றால் தற்போது நடக்கப் போவது லோக்சபா தேர்தல். தேர்தலுக்கான பரப்புறைகளை தமிழகம் முழுவதும் தமிழக கட்சிகள் செய்து வருகிறது. வெயிலை கூட பொருட்படுத்தாமல் அனைத்துக் கட்சிகளும் மிகவும் மும்மரமாக கட்சி வேலைகளை செய்வது  என்பதை எங்கு பார்த்தாலும் பார்க்க முடிகிறது. அதிலும் குறிப்பாக, முந்தைய தேர்தலை விட தற்போது பாஜக மிகவும் வளமான கட்சியாக தமிழகத்தில் தன்னை முன்னெடுத்து, தன் தலைமையிலான கூட்டணியில் பல கட்சிகளை இணைத்து தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறது. தமிழகத்தில் காலம் காலமாக திமுக மற்றும் அதிமுக இருந்து வந்ததை அடுத்து தற்போது  அவற்றிற்கு இணையாக உள்ள ஒரு கட்சியாக தற்போது பாஜக நின்று உள்ளதையும், முதலில் இருந்த இரண்டு கட்சிகளையும் திணற வைத்துள்ளது.


                                                                                                          

தற்போது தமிழகத்தில் அனைத்து இடங்களிலும் நடக்கும் பிரச்சாரங்களில் பாஜக நடத்தும் பிரச்சாரங்களில் மக்கள் அதிக அளவில் ஆர்வம் எடுத்து அவற்றில் கலந்து கொண்டு வருகின்றனர்.அதே சமயத்தில் திமுக நடத்தும் பிரச்சாரங்களில் அதிக அளவில் கூட்டங்கள் இருப்பதும் இல்லை. மேலும் திமுக எந்த ஒரு இடத்திற்கும் பிரச்சாரம் மேற்கொள்ளும் வகையில் சென்றாலும் அந்த இடத்தில் உள்ள மக்கள் அனைவரும் இதுவரை திமுக கொடுத்த வாக்குறுதிகள் எதுவும் நிறைவேற்றவில்லை என்று அந்த பிரச்சாரம் நடக்கும் பகுதிகளில் தங்களது எதிர்ப்பினை காட்டியும் வருகின்றனர். இந்த நிலையில் தேர்தலை எப்படி எதிர்கொள்ள போகிறோம் என்றும், நடக்கப் போகும் தேர்தலில் 40 தொகுதிகளையும் கைப்பற்ற வேண்டும் என்ற முனைப்பில் திமுகவின் தலைவர் மு.க. ஸ்டாலின் பல பகுதிகளுக்கு சென்று தேர்தல் பிரச்சாரங்களை நடத்தி வருகிறார். இந்த நிலையில் ஏற்கனவே திமுக விற்கு இருக்கும் பிரச்சனைகள் போதாது என்று தற்போது மீண்டும் ஒரு பிரச்சனை எழுந்துள்ளது.

                                                                                                             

மன்னார்குடி ம.இரா அரசு கலைக் கல்லூரியில் பட்டமளிப்பு விழாவில் கெளரவ விரிவுரையாளராகப் தஞ்சாவூர் மண்டல கல்லூரி கல்வி இணை இயக்குநர் முனைவர் தனராஜன் கலந்து கொண்டுள்ளார். அந்தக் கல்லூரியின் பேராசிரியராக இருக்கும் ராதிகாவிடம் ராஜேந்திரன் திமுக கட்சி கொடியுடன் கல்லூரிக்குள் வரலாமா?? என கேட்டதற்கு  ராதிகா தேர்தல் நடத்தை விதிமுறை அமலில் உள்ளதால் காரில் கொடி ஏதும் கட்டவில்லை என்று கூறியுள்ளார். இதைத்தொடர்ந்து இவர்கள் இருவருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அதில் ராஜேந்திரன் ராதிகாவை மிகவும் தரக்குறைவாக பேசியதாக கூறப்படுகிறது. இது மன்னார்குடி பகுதியில் மிகவும் பெரிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் உண்மையில் நடந்தது என்னவென்றால்!!! திமுக கட்சி கொடியினை கட்டி காரில் வந்து ராதிகா இறங்கியதாக ராஜேந்திரனின் உதவியாளர் கூறியதை தொடர்ந்து இந்தக் கல்லூரிக்குள் வரும் முக்கிய பிரமுகர்கள் முதல் கொண்டு கட்சிக்கொடி ஏதும் இல்லாமல் தான் வருகின்றனர்.

                                                                                             

அப்படி இருக்கையில் பேராசிரியராக இருக்கும் நீங்கள் இப்படி கட்சிக்கொடியுடன் கல்லூரிக்குள் வரலாமா?? என்று கேட்டதாக கூறப்படுகிறது.  மேலும் இதனைத் தொடர்ந்து ராதிகா ஏன் கட்சிக் கொடியுடன் வரக்கூடாதா??? என்று வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகவும் இதற்காக முதல்வர் மீது தேவையில்லாத குற்றத்தை சுமத்தி காவல்துறையில் புகாரை பேராசிரியர் ராதிகா அளித்துள்ளதாக அதே கல்லூரியை சேர்ந்த சிலர் தெரிவித்துள்ளனர். இப்படி தங்களுக்கு எதிரான கேள்விகளை யாரேனும் கேட்டால் அவர்களை பாஜகவினர் என்று கூறி அவர்கள் மீது போலியான குற்றச்சாட்டுகளை முன்வைத்து அவர்கள் மீது வழக்கு பதிவு செய்கின்றனர்.  தேர்தல் நேரத்தில் இது போன்று பல பிரச்சனைகளை திமுகவினர் ஏற்படுத்தி வருகின்றனர். இந்த விவகாரம் தற்போது திமுகவிற்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தும் என்றும் மேலும் அந்தப் பிரச்சனையை யாராவது தட்டிக் கேட்டால் நீங்கள் என்ன பாஜகவினரா?? என்று திமுக கேட்டு வருவது திமுகவிற்கு மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி வருவதாக கூறப்படுகிறது!!