இந்திய புகழ்பெற்ற திரைப்பட நடிகரும் அரசியல்வாதியுமாக தற்போது அறியப்படுபவர் கமலஹாசன்! தொடர்ச்சியாக 1962 ஆம் ஆண்டிலிருந்து 1981 ஆண்டு வரை மலையாளம் தெலுங்கு வங்காளம் கன்னடம் இந்தி போன்ற மொழிகளில் அறிமுகமாகி அனைத்து மொழிகளிலும் நடிக்கும் நடிகர் என்ற புகழைப் பெற்றார்.. இன்றளவும் நடிகர் கமலஹாசன் நடிப்பில் வெளியான பல படங்கள் மக்களின் விருப்பப்படமாகவும் சிறந்த நடிகராக வேண்டும் என்றால் இவரது படத்தை பார்க்கலாம் என்ற ஒரு வழிகாட்டுதலையும் பெற்று வருகின்றனர்.இப்படி படங்களில் ரஜினிக்கு நிகரான ரசிகர் பட்டாளத்தையும் புகழையும் கொண்டிருந்த கமலஹாசன் கலைமகளின் மகன் என்றும் அழைக்கப்பட்டுக் கொண்டிருந்தார் . இதனை அடுத்து சமூக வலைதள பக்கத்தில் அரசியலுக்கு வருவதற்கான நேரம் வந்துவிட்டது என்ற பதிவை இட்டு மதுரையில் 2018 மாபெரும் பொதுக்கூட்டத்தை ஏற்பாடு செய்து அதில் தனது கட்சி பெயரையும் கொடி மற்றும் சின்னத்தையும் அறிவித்தார்.
இது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பாக பேசப்பட்டது கட்சியை தொடங்கப்பட்ட ஆரம்ப காலத்தில் கமலஹாசன் திமுகவை தொடர்ச்சியாக எதிர்த்து வந்த நிலையில் தற்பொழுது நிலைமை சற்று மாரி திமுகவிற்கு ஆதரவான நிலைப்பாட்டில் இருந்த வருகிறார். இதற்கிடையில் அரசியலில் வந்தாலும் தனது திரைப்பயணத்தை விட்டு விடாமல் அது எனது தொழில் இது எனது சேவை என்ற வேறுபாடுகளை முன்வைத்து திரைப்பயணத்தையும் தொடர்ந்து வருகிறார் கமலஹாசன். இந்த நிலையில் கமலஹாசன் குறித்து பிரபல நடிகரும் இயக்குனருமான மணிவண்ணன் பேசிய வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளது. அதில் மணிவண்ணன் கூறும்போது, கமலஹாசன் எப்பவுமே ராஜ விசுவாசி! அதனால அவன் வீட்டை விற்றாலும் சரி பெல்டை கழற்றி விற்றாலும் சரி ஷூவை ஏலம் விட்டாலும் சரி அதை பற்றி கவலைப்பட கூடாது,, அதோடு எப்பொழுதுமே அமெரிக்காவிற்கு ஜால்ரா தட்டிக் கொண்டிருப்பார்.
எனக்கு நன்றாக ஞாபகம் இருக்கிறது டிரேட் சென்டரில் ஒரு விழா ஏற்பாடு செய்திருந்தான் அந்த விழாவில் பிரிட்டிஷ் மகாராணியை சிறப்பு விருந்தினராக அழைத்து வந்தான்! சினிமாவைச் சேர்ந்த அனைவரும் சென்றார்கள் ஆனால் நான் வரவில்லை என்று கூறிவிட்டேன், ஏன் என்று கேட்டார்கள்.நம்ம மூஞ்சியை மேடையில் காட்டினால் என்ன காட்டாட்டி என்ன? ஆங்கிலேயரிடமிருந்து விடுதலை வாங்கி விடுதலை வேண்டும் என்று அடித்து ஆங்கிலேயர்களை துரத்தி விட்டோம் ஆனால் அவங்கள மீண்டும் மகாராணி என்று அழைத்து அமர வைத்து அவர்களுக்கு பின்னால் நாம நிக்கிறதுல அசிங்கமா இல்லையாடா என்று நான் கேட்டேன்! அப்படியா என்று கேட்கிறார்கள் இப்படிப்பட்ட சூழ்ச்சி உள்ள கலைஞனுக்காக நாம் யாரும் அப்படி கண்ணீர் விடத் தேவையில்லை!
இதை நான் இந்தியா டுடே மற்றும் இரண்டு மூன்று தொலைக்காட்சியிலும் கூறினேன் ஆனால் அவர்கள் நேரத்தை கருத்தில் கொண்டு கமலஹாசனை பற்றி கூறியதை தூக்கி விட்டார்கள், தற்பொழுது இந்த வாய்ப்பை பயன்படுத்தி உங்களிடமாவது நான் கூறவில்லை என்றால் எனக்கு தூக்கம் வராது அதனால்தான் நான் கூறினேன்! உண்மையை பகிர்ந்து கொள்ளாமல் இருக்க முடியாது அல்லவா என்று கமலஹாசனை குறித்து மணிவண்ணன் பேசியதற்கு கமல் குறித்து அன்றே கனகச்சிதமாக புரிந்து வைத்திருக்கிறாரே மணிவண்ணன் என்ற விமர்சனங்களும் முன்வைக்கப்பட்டு அந்த வீடியோவும் இணையத்தில் வைரலாகிறது...தேர்தல் நெருங்கும் நேரத்தில் இப்படி கமல் பற்றி பழைய விமர்சனங்கள் அதிகம் உலாவருவது குறித்து அவரது ஆதரவாளர்கள் புலம்பி வருகின்றனர்.