24 special

சிக்கிய சர்மிளா, பின்னணியில் வெளிவரும் பெரிய சம்பவங்கள்....

kamalhassan, sharmila
kamalhassan, sharmila

கோவை மாநகரின் முதல் தனியார் பேருந்து பெண் ஓட்டுனர் என்ற பெருமையைப் பெற்றவர் ஷர்மிளா. இவர் கோவை காந்திபுரம் சோமனூர் இடையான தடத்தில் தனியார் பேருந்தை இயக்கி கொண்டிருந்தார். கோவை வடவள்ளியைச் சேர்ந்த இவர் மருந்தாளும் படிப்பில் டிப்ளமோ முடித்து ஆட்டோ ஓட்டுனராக தனது தந்தையைப் பார்த்து ஓட்டுனராக வேண்டும் என்று விருப்பத்தில் ஓட்டுநர் உரிமம் பெற்று சில காலத்திற்கு ஆட்டோ ஓட்டுனராகவும் கால் டாக்ஸி ஓட்டுநராகவும் இருந்து வந்தவர். அதற்குப் பிறகு கொரோனா தொற்று காலத்தில் தனது ஆட்டோ மூலம் பலரை மருத்துவமனைக்கு அழைத்து சென்று மக்கள் மத்தியில் சற்று பிரபலமானார்.இதுவரை ஆண்களை மட்டுமே பேருந்தில் ஓட்டுநராக பார்த்து வந்த சமுதாயம் முதல் பெண் ஓட்டுநரை பார்த்த பிறகு அவரிடம் பேச வேண்டும் என்ற ஆர்வமும் அவருடன் பேட்டி எடுத்து பல பார்வையாளர்களைப் பெற வேண்டும் என்ற ஆர்வத்தில் youtube சேனல்கள் அதிகம் இவரை நோக்கி குவிந்து பேட்டி எடுக்க ஆரம்பித்தனர். இதனால் பெருமளவில் பிரபலமாகும் வாய்ப்பை பெற்றார் ஷர்மிளா! 


இதனை அடுத்து திமுகவைச் சேர்ந்த தூத்துக்குடி எம்பி கனிமொழி சர்மிளா இயக்கிய பஸ்சில் காஞ்சிபுரத்திலிருந்து பீளமேடு வரை பயணம் செய்தது சமூக வலைதளம் முழுவதும் வைரலானது. மேலும் இந்த பயணத்தின் போது கனிமொழி எம்பி ஷர்மிளா உடன் பேசிக்கொண்ட வீடியோ புகைப்படங்கள் என அனைத்துமே டிரெண்டானது. அதே சமயத்தில் ஷர்மிளாவை பேருந்து ஓட்டுநர் பணியிலிருந்து நீக்கியதாக பரபரப்பான தகவல்கள் வெளியானது. ஏன் அவரை ஓட்டுனர் பணியிலிருந்து நீக்கினார் என்ற கேள்விகளும் கனிமொழி பயணித்த பிறகு இப்படி ஒரு நிலையாக சர்மிளாவிற்கு ஏற்பட்டது என்ற வகையிலான விமர்சனங்களும் முன்வைக்கப்பட்டு வந்தது. அதற்கு ஷர்மிளா ஓட்டிய பேருந்தில் கனிமொழி பயணித்த பொழுது நடத்துனர் ஒருவர் கனிமொழியிடம் டிக்கெட் வாங்க சென்றதாகவும் அதற்கு ஷர்மிளா வேண்டாம் என்று கூறியதாகவும் இந்த பிரச்சினை காரணமாக உரிமையாளர் கண்டித்ததாகவும் அதனால் கோபப்பட்டு சர்மிளா வேலையை விட்டேன் என்றதாகவும் கூறப்பட்டது அதே சமயத்தில் உரிமையாளர் தரப்பில் வேலை நேரத்தில் பேட்டியில் பேசி கொண்டிருக்கிறார் என்றும் கூறப்பட்டது. 

இதனை அடுத்து திமுக இந்த விவகாரத்தை தலையிட்டு ஷர்மிளாவிற்கு ஆதரவான குரலை எழுப்பியது மேலும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரான கமலஹாசன் ஷர்மிளாவிற்கு புது காரை வாங்கி பரிசளித்தார். இந்த நிலையில் ஷர்மிளா குறித்து காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அதாவது கடந்த இரண்டாம் தேதி சத்திரோடு சிக்னல் சந்திப்பில் போக்குவரத்து எஸ்ஐ ராஜேஸ்வரி பணியில் ஈடுபட்டிருந்தபொழுது போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் ஷர்மிளா நடந்து கொண்டதாகவும் அதனை எஸ்ஐ ராஜேஸ்வரி கேட்ட பொழுது ஷர்மிளா வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் தவறாக பதிவிட்டதாகவும் கூறப்படுகிறது. இதனால் பெண் ஓட்டுநரான சர்மிளா மீது சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இப்படி கோவை மாநகரின் முதல் பெண் ஓட்டுனர் என்ற பெருமையை பெற்றுக் கொண்டிருந்த ஷர்மிளா திடீரென்று கைது செய்யப்பட்டிருப்பது சமூக வலைதளம் முழுவதும் வைரலானது மேலும் திமுக மற்றும் கமல்ஹாசனின் ஆதரவுகளை பெற்ற ஷர்மிளாவிற்கு இப்படி ஒரு நிலைமையா என்ற விமர்சனங்களும் முன்வைக்கப்படுகிறது. மேலும் தேர்தல் வரும் நேரத்தில் கமல்ஹாசன் தன்னை பிரச்சாரத்திற்கு அழைக்க வேண்டும் என ஷர்மிளா கேட்டதாகவும், அதற்க்கு மக்கள் நீதி மய்யம் தரப்பில் இருந்து சரியான முறையில் பதில் இல்லாததால் இந்த விளம்பர வேலையை ஷர்மிளா செய்ததாகவும்  வேறு சில விமர்சனங்கள் முன்வைக்கப்படுகிறது.