24 special

ராமநாதபுரத்தில் பழமையான நிறைய அதிசயங்கள்... வெளிவராத மர்மம்....

shivan temple
shivan temple

 உத்திரகோசமங்கை கோவை ராமநாதபுரத்தில் இருந்து 18 கிலோமீட்டர் தொலைவில் இந்த ஊர் அமைந்துள்ளது. பார்ப்பதற்கே மிகவும் அழகான இயற்கை சூழலில் அமைந்திருக்கும் இந்த கோவில் மங்கள நாத சுவாமி கோவில், மங்கலீஸ்வரி அம்பாள் இருக்கும் இந்த கோவில் சிவபெருமானின் கோவில்களில் மிகவும் பழமையான முதன் முதலில் தோன்றிய கோவில் என்று சொல்லப்படுகிறது. பார்வதி அம்பாளுக்கு ‘ஓம்’ என்றும் பிரணவ மந்திர விளக்கத்தை சிவபெருமான் இங்கு வைத்து தான் கூறினாராம். இதனால்தான் இந்த கோவில் உத்திரகோசமங்கை என்ற பெயர் பெற்றது என்பர்.இந்தக் கோவிலில் அமைந்துள்ள சிவபெருமான் சுயபு மூர்த்தியாக உள்ளார். ராவணனுக்கு திருமணம் தாமதமாகிக் கொண்டே சென்றபோது, அவர் இந்த ஆலயத்திற்கு வந்து வழிபட்டு திருமணம் ஆனதின்றும், திருமணத்திற்கு பின் குழந்தை வரம் இல்லாமல் மண்டோதரி இத்தல இறைவனையும், இறைவியையும் வழிபட்டு புத்திரப் பேறு அடைந்தார் என்றும் வரலாறு கூறுகிறது. உலகத்தில் வேறு எங்கும் இல்லாதது போல இந்தக் கோவிலில் மட்டும் தான் தாழம் பூவை வைத்து சிவபெருமானுக்கு பூஜைகள் செய்யப்படுகிறது.


இந்த கோவிலுக்குள் மிகவும் அற்புதமான சிறப்பான ஓவியங்களை உங்களால் பார்க்க முடியும். இந்த கோவிலில் அமைந்திருக்கும் நடராஜர் கொஞ்சம் வித்தியாசமாக இருப்பார். இவர் இடுப்பை சுற்றி நாகங்கள் இருக்காது!! மேலும் கங்கை இருக்க மாட்டாள்!! இதை அனைத்தும் பார்க்கும் போதே தெரியும் இது எவ்வளவு பழமையான நடராஜர் சன்னதி என்று. இங்கு உள்ள லிங்கத்திற்குள் 999 முனிவர்கள் ஐக்கியமாகி உள்ளார்கள்.ஒரு முறை உத்திரகோசமங்கையில்  சிவபெருமான் குருவாக இருந்து அங்கு இருந்த ஆயிரம் முனிவர்கள் வேதங்களை கற்றுக்கொடுத்து உள்ளார். பொது சிவபெருமானை பார்க்க வேண்டும் என்று மண்டோதரி கடுமையான வழிபாட்டை செய்துவந்துள்ளார். உடனடியாக சிவபெருமான் மண்டோதரிக்கு காட்சியளிக்க போவதாகவும், ஒரு ஓலைச்சுவடியை பத்திரமாக பார்த்துக் கொள்ளவும் என்று அங்கிருந்து 1000 முனிவர்களிடம் ஒப்படைத்ததாகவும் கூறிவிட்டு சிவபெருமான் மண்டோதரிக்கு காட்சியளிக்க செல்கின்றார். மண்டோதரியும் முன் சிறு குழந்தையாக தோன்றும் சிவபெருமான், அங்கு வந்த ராவணன் குழந்தையை தன் கையால் தொட உத்திரகோசம மண்டபத்தில் உள்ள குளத்தில் தீப்பிழம்புகள் ஏற்பட்டு அதில் 999 முனிவர்களும் விழுந்து தனது உயிரை மாய்த்துக் கொள்கின்றனர். 

அப்போது அங்கு சிவபெருமான் தோன்றி மாண்ட முனிவர்களை உயிருடன் எழுப்பி 999 பேருடன் தானும் சேர்ந்து சகஸ்ர லிங்கமாக உருவெடுத்து அங்கு காட்சியளிக்கின்றார். வேதங்களை பாதுகாத்த ஒரு முனிவரை மாணிக்கவாசகராக மீண்டும் பிறக்க வைத்ததாக சிவபுராணத்தில் உள்ளது. சிவபெருமானுடைய அடி முடியை எப்படி அறிய முடியாதோ அப்படித்தான் இந்த கோவிலிம் பெருமையும்!!திருமணத்தடை உள்ளவர்கள் இந்த கோவிலுக்கு சென்று வழிபடுவதால் அவர்களுக்கு திருமணம் விரைவில் நடக்கும். மேலும் முன்னோர்களிடம் ஏதேனும் சாபம் பெற்று வாழ்வில் கஷ்டப்பட்டு வருபவர்களுக்கு இந்த கோவிலுக்கு செல்வதினால் அவர்களின் சாபங்கள் நீங்கும். திருமணம் ஆகியும் குழந்தை இல்லாமல் ஏங்குபவர்கள் இந்த கோவிலுக்கு சென்றால் அவர்களுக்கு குழந்தை வரம் கிடைக்கும். படிப்பில் ஆர்வம் இல்லாமல் இருக்கும் நபர்கள் இந்த கோவிலுக்கு சென்று இறைவனே வழிபடுவதால் அவர்களுக்கு கல்வி அறிவு கூடும். மேலும் வெளிநாட்டிற்கு செல்ல நினைப்பவர்களுக்கு ஏதாவது தடைகள் ஏற்பட்டு வெளிநாட்டிற்கு செல்வது தடைப்பட்டு கொண்டு இருக்கும் நேரத்தில் இந்த கோவிலுக்கு சென்று வந்தால் உடனே அவர்களுக்கு உள்ள தடைகள் நீங்கி அவர்கள் வெளிநாட்டிற்கு செல்வர். மேலும் இக்கோவிலில் தினமும் இரவு ஏழரை மணிக்கு நடக்கும் பள்ளியறை பூஜையில் கலந்து கொண்டால் சண்டையில் பிரிந்த தம்பதிகள் கூட மீண்டும் ஒன்றாக இணைந்து விடுவர் என ஐதீகமும் உண்டு....