தமிழக அரசியல் களத்தில் செந்தில் பாலாஜி தொடர்புடைய இடங்களில் நடைபெறும் அமலாக்க துறை சோதனை பெரும் பரபரப்பை உண்டாக்கி இருக்கும் வேலையில் யாரும் எதிர் பாரத விதமாக இரண்டு சம்பவங்கள் அரங்கேறி இருக்கின்றன.
செந்தில் பாலாஜி மற்றும் அவரது உறவினர்கள் தொடர்புடைய இடங்களில் மட்டும் நடந்து வந்த அமலாக்க துறை சோதனை இன்று நேராக தலைமை செயலகம் நோக்கி நடந்து இருக்கிறது, தலைமை செயலகத்தில் செந்தில் பாலாஜிக்கு ஒதுக்கப்பட்ட அமைச்சர் அறையில் அமலாக்கதுறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
இதில் முக்கியமாக டாஸ்மாக் ஒப்பந்த தாரர்கள் யார்? அவர்களுக்கு கொடுப்பட்ட டெண்டர் என்ன? திமுக ஆட்சி பொறுப்பு ஏற்ற பின்னர் புதிதாக மது பானம் வாங்கியது, புதிய கம்பெனிகளுடன் ஒப்பந்தம் போட்டது என பல ஆவணங்களை அமலாக்க துறை அதிகாரிகள் கைப்பற்றி இருக்கின்றனராம்.
இதில் 70% டெண்டர்கள் மற்றும் ஒப்பந்தங்கள் ஆகியவை விதிமுறைக்கு மீறியும்,பண பரிமாற்றம் அடிப்படையில் கொடுக்கப்பட்டு இருப்பதாக அமலாக்க துறைக்கு ஏற்கனவே பல்வேறு புகார்கள் சென்று இருக்கிறதாம். இந்த சூழலில் தான் தலைமை செயலகம் உள்ளே நேரடியாக சென்று அமலாக் க துறை அதிகாரிகள் சோதனை நடத்த தொடங்கி இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதற்கு முன்னர் ராம மோகனராவ் தலைமை செயலாளராக இருந்த போது அவரது அறையில் சோதனை நடைபெற்றது இவை ஒரு புறம் என்றால் அமலாக்க துறை அதிகாரிகள் தற்போது செந்தில் பாலாஜி கணக்கு வைத்துள்ள வங்கி அதிகாரிகள் தொடங்கி கடை கோடி டாஸ்மார்க் ஒப்பந்த தாரர் என பலரது பெயர்களை குறிப்பிட்டும் அவர்களை நேரடியாக களத்திற்கு அழைத்து வந்தும் சோதனை நடத்தி வருகின்றனர்.
இந்த முறை செந்தில் பாலாஜி பல்வேறு ஒப்பந்தங்கள் டாஸ்மார்க் வருமானம் என பல வழிகளில் நேரடியாக சிக்கி இருப்பதாகவும் பல பரிவர்த்தனை விவரங்களில் பிடிப்பட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது. ஆம் ஆத்மீ துணை முதல்வர் சிசோடியா பதவி இழந்து சிறையில் இருப்பதற்கு மது பான கொள்முதலில் நடைபெற்ற ஊழல் தான் காரணமாக அமைந்தது.
அதே போல் செந்தில் பாலாஜி பதவி இழக்கவும், அவர் சிறை செல்லவும் டாஸ்மார்க் ஒப்பந்தங்களே காரணமாக இருக்க போகிறது என்றும் அதற்கான ஆவணங்கள் அனைத்தும் சிக்கிய காரணத்தினால் அதனை உறுதி செய்யும் வகையில் தலைமை செயலகத்தில் செந்தில் பாலாஜி அறை மற்றும் செந்தில் பாலாஜியின் அமைச்சரவை அதிகாரிகள் இடங்களிலும் சோதனைகள் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
வழக்கமாக வருமான வரித்துறை சோதனை என்றால் பாஜக அரசின் பழி வாங்கும் நடவடிக்கை என குரல் கொடுத்தவர்கள் கூட இந்த முறை அமலாக்க துறை அதிகாரிகள் களத்தில் இறங்கியது குறித்து வாய் திறக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.