அமைச்சர் செந்தில் பாலாஜி இல்லத்தில் நேரடியாக அமலாக்க துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வரும் சம்பவம் கடும் பரபரப்பை உண்டாக்கி இருக்கும் சூழலில், இன்று செந்தில் பாலாஜி கொடுத்த பேட்டி செந்தில் பாலாஜி முழுமையாக மாறி இருப்பதை உணர்த்தி இருக்கிறது.
செய்தியாளர்களை சந்தித்த செந்தில் பாலாஜி பேட்டி கொடுத்து கொண்டு இருக்கும் வேலையில் சார் வெயிட் பன்றாங்க ஆஃபீசர்ஸ் வெயிட் பண்ண வைக்க கூடாது நான் செல்கிறேன் என கூறியதும் அமலாக்க துறை சோதனைக்கு முழு ஒத்துழைப்பு கொடுப்பேன் என கூறியதும் கடந்த வாரம் கரூரில் பேசிய செந்தில் பாலாஜியா இது என உடன் பிறப்புகள் புலம்பி வருகின்றன.
இந்நிலையில் உங்கள் வீட்டில் நாங்கள் சோதனை நடத்தி கொண்டு இருக்கிறோம் நீங்கள் விரைவாக வீட்டிற்கு வாருங்கள் உங்களிடம் வருமான வரித்துறை சோதனையில் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் குறித்து முழுமையாக கேள்வி எழுப்ப வேண்டும் என அமலாக்க துறை அதிகாரிகள் செந்தில் பாலாஜியை தொடர்பு கொள்ள.
சார் இன்னும் 10 நிமிடத்தில் வருகிறேன் என கூறி உடனடியாக வீட்டிற்கு ஓட்டம் பிடித்து இருக்கிறார் செந்தில் பாலாஜி, இவை அனைத்தையும் தாண்டி, அமலாக்க துறை அதிகாரிகள் கடந்த 5 ஆண்டுகளில் எந்தெந்த அமைச்சர்கள் வீடுகளில் சோதனை நடத்தி இருக்கிறார்களோ அவர்களில் பெரும் பாலானோர் சிறை சென்று இருப்பதுடன் அமைச்சர் பதவியையும் இழந்து இருக்கிறார்கள்.
குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் ஆம் ஆத்மீ கட்சியை சேர்ந்த டெல்லி முன்னாள் துணை முதல்வர் மணிஷ் சிசோட்டியா, மகாராஷ்டிரா மாநில முன்னாள் அமைச்சர் என இந்த பட்டியல் நீள்கிறது, அந்த வரிசையில் தற்போது செந்தில் பாலாஜியும் நிச்சயம் இடம் பெருவார் என அடித்து கூறுகின்றனர் அமலாக்க துறையின் சோதனை விவரங்களை அறிந்தவர்கள்.
கடந்த முறை வருமான வரித்துறை சோதனையின் போது எது நடந்தாலும் பார்த்து கொள்ளாலாம் என கெத்தாக பேசிய செந்தில் பாலாஜி இன்று காலை சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த போது முகம் வாடி காணப்பட்டார். இதில் இருந்தே உள்ளே நடைபெறுவது என்ன என்பதை அறிந்து கொள்ள முடிகிறது.
அமைச்சர் செந்தில் பாலாஜி சகோதரர் தொடர்புடைய பல ஆவணங்கள் சிக்கி இருக்கும் காரணத்தால் செந்தில் பாலாஜியின் சகோதரர் விரைவில் அமலாக்க துறையால் கைது செய்ய படலாம் எனவும் அவரை தொடர்ந்து செந்தில் பாலாஜியும் கைது செய்யப்படுவது உறுதி என அடித்து கூறுகின்றனர் டெல்லி வட்டாரங்கள்.
இவை அனைத்தையும் தாண்டி செந்தில் பாலாஜிக்கு சிபிஐ எனும் பெரும் சிக்கல் விரைவில் வர இருக்கிறதாம், செந்தில் பாலாஜியுடன் தொடர்பு உடைய நபர்கள் என்றாலே சோதனை மேல் சோதனை வருகிறது என அறிந்த பல திமுகவை சார்ந்த ஒப்பந்ததார்களே செந்தில் பாலாஜியை விட்டு ஓட்டம் எடுக்க தொடங்கி இருக்கிறார்களாம்.
மொத்தத்தில் பல கட்சிகள் மாறிய செந்தில் பாலாஜியின் அரசியல் எதிர்காலம் அவரது சகோதரர் மற்றும் கரூர் கம்பெனியால் முடிவிற்கு வருகிறதா என்ற கேள்வியை அழுத்தம் திருத்தமாக எழுப்பி இருக்கிறது அமலாக்க துறை சோதனை.