செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் ஆகிய இருவருக்கும் நெருக்கமான வீடுகளில் வருமான வரித்துறையினர் கடந்த 6 நாட்களாக இறங்கி சல்லடை போட்டு ஆவணங்கள், கம்ப்யூட்டரில் உள்ள தகவல்கள், பண பரிமாற்றம் செய்யப்பட்ட தாக்கீதுகள் மற்றும் வவுச்சர்கள் போன்றவற்றை தீவிரமாக அலசி ஆராய்ந்து வருவது பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் கடந்த ஆட்சிக்காலத்தில் செய்த முறைகேடு மற்றும் இந்த ஆட்சிக் காலத்தில் டாஸ்மாக் அமைச்சராக இருந்து கொண்டு செந்தில் பாலாஜி முறைகேடாக பார்களை ஏலம் விட்டு நடத்தியது. அது மட்டுமல்லாமல் டாஸ்மாக் களில் பத்து ரூபாய் பாட்டிலுக்கு அதிகம் வைத்து விற்றது போன்ற குற்றங்கள் தான் இதற்கு காரணம் எனக் கூறப்படுகிறது.
மேலும் கரூர் கம்பெனி என்ற பெயரில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் தம்பி அசோக் குமார் ஒரு அடாவடி கும்பலை வைத்துக்கொண்டு டாஸ்மார்க் பணியாளர்களின் மிரட்டி பணம் பறித்து வந்ததும், செந்தில் பாலாஜியின் உறவினர் பெயரில் 300 கோடி ரூபாய்க்கு கரூரில் பிரம்மாண்ட சொகுசு அரண்மனை கட்டி வருவதும் வருமானவரித்துறையினர் கண்களை உறுத்தியுள்ளது. இதன் காரணமாகத்தான் கடந்த வாரத்தில் வருமான வரி துறையினர் அனைத்து இடங்களிலும் சோதனையில் ஈடுபட்டனர். குறிப்பாக 40 இடங்கள் என ஆரம்பித்த சோதனை நிறைய ஆவணங்கள் சிக்க சிக்க 200 இடங்களாக அதிகமானது, அது மட்டுமல்லாமல் தமிழகத்தில் மட்டுமல்லாமல் கேரளா, ஆந்திரா போன்ற இடங்களிலும் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமான இடங்களில் வருமானவரித்துறையினர் கொத்துக்கொத்தாக இறங்கினர்.
மேலும் வருமான வரித்துறையினரை ஆய்வு செய்ய விடாமல் செந்தில் பாலாஜி ஆதரவாளர்கள் தடுக்கவே அப்போ கண்டிப்பாக ஏதேனும் சிக்கும் என வருமான வரி துறையினர் மத்திய பாதுகாப்பு படையினரை ஆதரவுடன் அதிரடி ரெய்டில் இறங்கினர். இந்த அதிரடி ரெய்டில் ஆடியோ டேப், டைரி போன்ற முக்கியமான ஆதாரங்கள் சிக்கவே இந்த அதிரடி ரெய்டு இனி அதிகம் நாட்கள் நடத்தினால் தான் நமக்கு இன்னும் அதிகமான தகவல்கள் சிக்குமென ஆறாவது நாளாக ரெய்டு தொடர்ந்து வருகிறது. ஐந்தாவது நாளான நேற்று செந்தில் பாலாஜிக்கு சொந்தமான நிறுவனத்தில் அதிகாரிகள் இறங்கியுள்ளனர், இந்த நிலையில் முக்கிய புள்ளியாக கருதப்படும் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் குமாரின் தொடர்பான இடங்களில் ரெய்டு செய்வதில் கைப்பற்றப்பட்ட ஆவணங்களை வைத்து அசோக்குமாரை நேரில் வர சொல்லி சம்மன் அனுப்பி உள்ளனர் வருமானவரித்துறையினர்.
தமிழக மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியின் தம்பி அசோக்குமார் வீடு, கரூர் ராமகிருஷ்ணாபுரத்தில் உள்ளது. நேற்று முன்தினம் இரவு அசோக்குமார் வீட்டின் கதவில், 'நேற்று காலை, 10:30 மணிக்கு கரூர் சின்ன ஆண்டாங்கோவில் சாலையில் உள்ள, வருமான வரித்துறை அலுவலகத்தில், அசோக்குமார் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும்' என, வருமான வரித்துறை அதிகாரி நாகராஜ் பெயரில் சம்மன் ஒட்டினர்.
ஆனால், நேற்று அசோக்குமார் ஆஜராகவில்லை. மாறாக ஆடிட்டர் ஒருவர் மூலம், கரூர் வருமான வரித்துறை அலுவலகத்தில், அசோக்குமார் ஆஜராக கால அவகாசம் கேட்டு, பதில் மனு தாக்கல் செய்யப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. இப்படி அசோக்குமாருக்கு சம்மன் அனுப்பப்பட்ட தகவல் கிடைத்தவுடன் அசோக் குமார் தலைமுறை ஆகிவிட்டார் என தகவல்கள் பரவின, ஆனால் அசோக்குமார் தரப்பில் இருந்து நான் தலைமறைவு ஆகவில்லை சென்னையில் தான் இருக்கிறேன் எப்பொழுது வேண்டுமானாலும் ஆஜராக தயாராக இருக்கிறேன் என கூறியுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளது.
இதற்கிடையே, அசோக்குமாருக்கு மிகவும் நெருக்கமானவரான கரூர் மாவட்டம், மாயனுாரைச் சேர்ந்த அரசு ஒப்பந்ததாரர் சங்கர் ஆனந்த் என்பவரின் கரூர் செங்குந்தபுரம், மூன்றாவது கிராசில் உள்ள அலுவலகத்தில் சோதனை நடத்தி, பல்வேறு ஆவணங்களை கைப்பற்றிய வருமான வரித்துறையினர், அவர் சோதனைக்கு ஒத்துழைப்பு தராததால், அலுவலகத்தை பூட்டி, சீல் வைத்தனர்.
மேலும் இன்னும் ரைடு முடிவடையாத நிலையில் எவ்வளவு கோடி ரூபாய் பணம் கைப்பற்றப்பட்டது எந்தெந்த ஆவணங்கள் கைப்பற்றப்பட்டது என்பது போன்ற அதிகாரப்பூர் அறிவிப்புகள் விரைவில் வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது