24 special

வைரமுத்துவிற்கு மீண்டும் சிக்கல் ஆரம்பமா...?

Vairamuthu, annamalai
Vairamuthu, annamalai

பேசி பேசியே திரும்ப கொண்டு வந்து விட்டார்கள் மல்யுத்த வீராங்கனைகள் போராட்டம் குறித்து நாடு முழுவதும் எதிர் கட்சிகள் அரசியல் விமர்சனம் வைத்து கொண்டு இருக்க தமிழகத்திலும் ஆளும் கட்சியான திமுகவும் அதே நிலைப்பாட்டை கையில் எடுத்து பாஜகவை விமர் சனம் செய்தது.


இந்த சூழலில் திடீர் என யாரும் எதிர்பாரத விதமாக பாஜக மாநில  தலைவர் அண்ணாமலை நேரடியாக திமுகவை நோக்கி கேள்வி எழுப்பினார்.ஸ்டாலின் பாஜகவை விமர்சனம் செய்யும் முன்பு உங்கள் நண்பர் உங்களை பற்றி கவிதை எழுதுவாரே வைரமுத்து அவர் மீது பாடகி கொடுத்த புகாரில் என்ன நடவடிக்கை எடுத்தீர்கள் இதுவரை ஒரு FIR உங்களால் போட முடிந்ததா? என அப்படியே திமுகவை நோக்கி அண்ணாமலை கேள்வி கேள்வி எழுப்பி இருந்தார்.

இங்குதான் இப்போது வைரமுத்துவிற்கு சோகமான செய்தி கிடைத்து இருக்கிறது, நாடு முழுவதும் மல்யுத்த விளையாட்டு வீரர்கள் புகார் மீது நடவடிக்கை எடுக்க கோரி எதிர் கட்சிகள் போரட இருக்கிறார்களாம், தமிழகத்திலும் திமுகவும் போராட்டங்களை விரிவுப்படுத்த இருக்கிறதாம்.இந்த சூழலில் திமுக மல்யுத்த வீரர்கள் விவகாரத்தை கையில் எடுத்தால் தமிழகத்தில் பாஜகவும் வைரமுத்து மற்றும் திமுக முக்கிய பிரமுகர்கள் மீது உள்ள பல்வேறு பாலியல் குற்றசாட்டுகள் குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என போராட்டத்தை தீவிரப்படுத்த முடிவு செய்து இருக்கிறதாம்.

இதனால் திமுகவிற்கு பாதிப்பு உண்டாகிறதோ இல்லையோ வைரமுத்துவிற்கு பெரும் சிக்கல் உண்டாகும் என  பலரும் வைரமுத்துவிடம் கூறி வருகிறார்களாம்.போதாத குறைக்கு அண்ணாமலை இன்றைக்கு மதுரையில் கொடுத்த பேட்டியிலும் வைரமுத்து பெயரை குறிப்பிட்டு மீண்டும் கேள்வி எழுப்பி இருப்பதால் வைரமுத்துவிற்கு மீண்டும் சின்மயி விவகாரதில் சிக்கல் உண்டாக போகிறதோ என கேள்வி எழுந்து இருக்கிறது.