24 special

முருகனின் வாகனத்தை கொண்ட மாரியம்மன்...! சிலிர்க்க வைக்கும் அம்மன்...

kovil issue
kovil issue

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் வட்டத்தில் 400 ஆண்டுகளுக்கு பழமை வாய்ந்த மாரியம்மன் கோவில் உள்ளது.  பக்தர்களுக்கு வேண்டும் வரங்களை அருளி அதிக சக்தி கொண்டவளாகவும் முருகனின் அம்சத்தை கொண்டவளாகவும் விளங்குகிறாள். ஏனென்றால் முருகனின் வாகனமான மயில்வாகனத்தில் அமர்த்தப்பட்டு அழங்கரிக்கபடுகிறாள். கோவிலின் ஸ்தல வரலாராக ஒரு கதை கூறப்படுகிறது. கிட்டத்தட்ட 400 ஆண்டுகளுக்கு முன்பு வடதேசத்திலிருந்து நாயக்க வம்சத்தை சேர்ந்த லிங்கப்ப நாயக்கர் என்பவர் ஸ்ரீரங்கம் திருச்சி போன்ற சோழ நாட்டில் இருந்து விராலிமலை மணப்பாறை ஆகிய ஊர்கள் வழியாக தென்மதுரை பாண்டி நாட்டிற்கு சென்று கொண்டிருக்கும் பொழுது மதுரைக்கு முன்பாகவே மலைகள் சூழ்ந்த பசுமை நிறைந்த காடுகளை கண்டு அப்பகுதியை விட்டு செல்ல மனமில்லாமல் அங்கேயே தனது கோட்டை கொத்தளங்களையும் பரிவாரங்களையும் அமைத்தார். பிறகு மதுரை மன்னர் திருமலை நாயக்கருடன் நட்பு ஏற்பட்டு அவர் அனுமதி உடனே தான் இருந்த பகுதிக்கு இரசை நாடு என்று பெயரிட்டு சிற்றரசரானார். இதற்குப் பிறகு அரண்மனைக்கு தினமும் ஒரு பால்காரர் பக்கத்து ஊரிலிருந்து செப்பு குளத்தில் பாலை எடுத்து வந்து ஊற்றி செல்வார்.


ஒருமுறை பாலை கறந்து அந்த குடத்தை அவன் வீட்டுக்கு அருகில் வைத்து விட்டு திரும்பிய பொழுது பால்குடம் காலியாக காணப்பட்டது அப்போது பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் இருந்தார். ஆனால் இதே செயல் தொடர்ந்து நடைபெற பால்காரர் பெரிதும் கலக்கம் அடைந்தார் யார் பாலை திருடுகிறது என்றும் கவலை அடைந்தார். இதனை எடுத்து அரண்மனைக்கும் பால் ஒழுங்காக வராததால் பால்காரரை அழைத்து வர அரசர் உத்தரவிட்டார்.  அதோடு அரண்மனையில் தொடங்கப்பட்ட விசாரணையில் பால்காரன் மீது குற்றம் சாட்டப்பட்டு பாலை திருடி விட்டு காணாமல் போவதாக பொய் கூறுகிறார் என்று பால்காரர் மீது லிங்கப்ப நாயக்கர் தண்டனைக்கு உத்தரவிட்ட பொழுது பால்காரன் நடுங்கியபடியே பாலை நான் திருடவில்லை சத்தியமாக! வேண்டுமென்றால் பால் காணாமல் போவதை நீங்களே வந்து பாருங்கள் என்று கூற அரசரும் அதனை சோதனை செய்ய பால்காரரின் வீட்டிற்கு சென்றார். வழக்கம்போல் பால்காரர் பாலை கறந்து செப்பு குளத்தில் பாலை வைத்துவிட்டு நகர்ந்த பொழுது திடீரென்று சூறாவளி காற்று அடித்து பால்குடம் காலியானது அதனை நன்கு கவனித்துக் கொண்டிருந்த அரசர் அதிர்ச்சியடைந்தார்.  

மேலும் என்ன நடந்திருக்கும் என்று அங்கும் இங்கும் நடந்து கொண்டிருந்த பொழுது பால்குடம் இருந்த இடத்தில் திகிலாங்கொடி படர்ந்து காணப்பட்டிருந்தது மேலும் பால்குடம் வைக்கப்பட்டிருந்த இடத்தில் ஒரு சிலையின் சிரசு மட்டும் தெரிந்தது அதனால் அந்த இடத்தை தொண்டும்படி மன்னர் ஆணை இட வேலை ஆட்களும் அந்த இடத்தை தோண்டும் போது மாரியம்மனின் முழு உருவ சிலையும் கிடைத்தது. மேலும் அம்மனின் சிலை கடப்பாறையால் தோண்டப்பட்டு வெளியில் எடுக்கப்படும் பொழுது தோளில் கடப்பாரை முனைப்பட்டு ரத்தம் கொட்டியது அதனால் அதிர்ச்சி அடைந்த மன்னர் தாயே எங்களை மன்னித்து விடுங்கள் என்று கண்ணீர் மனித மனம் உருகி வேண்டிய பிறகு சிறிது நேரத்தில் அந்த ரத்தம் நின்றது இதனால் அம்மனை வேறு எங்கும் நகர்த்த வேண்டாம் இங்கேயே மஞ்சள் நீராடி திருமஞ்சனம் செய்யும்படி அரசர் உத்தரவிட்டு கோவிலையும் கட்டினார். தற்போது இந்த கோவில் திண்டுக்கல் வட்டாரம் மட்டுமின்றி திண்டுக்கல்லை சுற்றியுள்ள மாவட்டங்களிலும் மிகவும் பிரசித்தி பெற்றது.

அதோட ஒவ்வொரு வருடமும் மாசி மாதத்தில் மாசி திருவிழா மாரியம்மன் கோவிலில் மிகவும் விமர்சியாக நடைபெறும் திருவிழா கிட்டத்தட்ட 15 நாட்களுக்கு மேலாக நடைபெறும். 2024 ஆம் ஆண்டிற்கான இத் திருவிழா கடந்த பிப்ரவரி 11-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கப்பட்டது. பிப்ரவரி 12ஆம் தேதியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கன்னி மாட தீர்த்தம் கொண்டு வந்துள்ளனர். அன்றிலிருந்து பக்தர்கள் அனைவரும் காப்பு கட்டி 15 நாட்களுக்கு விரதம் இருந்து இறுதியாக பூக்குழி இறங்குவார்கள். மேலும் பிப்ரவரி 26 ஆம் தேதி மஞ்சள் பாவாடை அலங்காரமும், 27 இல் காலையில் கழுகு மரம் ஊன்றும் நிகழ்ச்சி,. பூ பற்ற வைத்த நிகழ்ச்சி மாலையில் கழுகு மரம் ஏறுவதற்காக நிகழ்ச்சியும் பூக்குழி இறங்கும் நிகழ்ச்சி நடைபெறுவதாக கூறப்படுகிறது. அதோடு அதற்கு மறுநாள் பூ பல்லக்கு அலங்காரத்தில் அம்மன் நகர்வலம் வந்து திருவிழா நிறைவடைவதாக கூறுகின்றனர்.