
தமிழ் திரையுலகம் மட்டுமின்றி தெலுங்கு மலையாளம் திரை உலகங்களில் முன்னணி நடிகையாகவும் லேடிஸ் சூப்பர் ஸ்டாரான நயன்தாராவிற்கும் கிசுகிசு பேச்சுகளுக்கும் என்றுமே அதிக நெருக்கங்கள் இருந்திருக்கிறது. தமிழ் திரையுலகில் ஐயா என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமான லேடி சூப்பர் ஸ்டார் தனது இரண்டாவது படத்திலேயே சூப்பர் ஸ்டார் உடன் இணைந்து மிகவும் பிரபலமானார் அதற்கு பிறகு விஜய், சூர்யா, தனுஷ் என தமிழ் திரை உலகின் முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்த நல்ல வரவேற்பை பெற்று வந்தார். அந்த நிலையில் நயன்தாராவும் சிம்புவும் இணைந்து நடித்த வல்லவன் திரைப்படத்தின் மூலம் இருவரும் காதலித்து வந்ததாக செய்திகள் வெளியானது இந்த செய்திகள் பலராலும் உண்மை என்று கூறப்பட்டு பெருமளவில் கிசுகிசுக்கப்பட்டது. அதற்கு பிறகு சில காலத்திலேயே இருவரும் பிரேக்கப் செய்து கொண்டதாகவும் கிசுகிசுக்கள் வெளியானது.அது குறித்த அதிகாரப்பூர்வ தகவலை சிம்பு மற்றும் நயன்தாரா வெளியிடவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. இதற்குப் பிறகு நயன்தாராவின் அடுத்த காதல் கிசுகிசுவாக பிரபல நடிகரும் நடன இயக்குனருமான பிரபுதேவாவுடன் வெளியானது. இதனை பல நேரங்களில் மறைமுகமாக இருவரும் பேட்டி மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மூலம் வெளிப்படுத்தியுள்ளனர்.
மேலும் இவர்களது காதல் திருமணம் வரையும் சென்றது பிரபுதேவா ஏற்கனவே திருமணம் செய்திருந்தாலும் நயன்தாரா மீது கொண்ட காதலால் விவாகரத்தும் பெற்று திருமணத்திற்கு தயாரானார். ஆனால் இறுதியில் திருமணம் நடைபெறும் சில நாட்களுக்கு முன்பு இருவருமே பிரேக் அப் செய்து விட்டதாக செய்திகள் வெளியானது. இந்த செய்திகளுக்கு பிறகு நயன்தாரா மிகவும் மனம் உடைந்து திரையுலகை விட்டு சற்று விலகி இருந்தார். சில குறிப்பிட்ட மாதங்களுக்குப் பிறகு மீண்டும் தமிழ் திரை உலகின் ரீ என்றி கொடுத்த நயன்தாரா தனது மார்க்கெட்டை மீண்டும் கட்டி எழுப்பி லேடிஸ் சூப்பர் ஸ்டார் என்ற உச்சத்தை அடைந்தார்.அதற்குப் பிறகு நானும் ரவுடிதான் என்ற திரைப்படத்தின் மூலம் நயன்தாராவிற்கு அறிமுகமான இயக்குனர் விக்னேஷ் சிவனை நயன்தாரா காதலித்து கொண்டிருப்பதாக செய்திகள் வெளியானது. இப்படி ஏழு ஆண்டுகளாக காதலித்து வந்த இருவரும் கடந்த 2022 ஆம் ஆண்டு அன்று திருமணம் செய்து கொண்டனர். தற்போது விக்னேஷ் சிவனின் முன்னாள் காதல் குறித்த தகவலும் வெளியாகி சமூக வலைதளங்களில் பேசு பொருளாக மாறி உள்ளது.
அதாவது கடந்த 2014 ஆம் ஆண்டு தனியார் தொலைக்காட்சியில் நடத்தப்பட்ட நீயா நானா என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட விக்னேஷ் சிவன் தன்னுடைய முதல் காதலின் தோல்வி குறித்து பேசி இருக்கிறார் அதாவது என்னுடைய காதலி மிகவும் மாடர்ன் ஆனவள் என்னுடைய தாயும் போலிஸ் இன்ஸ்பெக்டர் இப்படி இருக்கும் பொழுது ஒருமுறை தீபாவளியன்று முதல்முறையாக எனது காதலியை என் அம்மாவிற்கு அறிமுகம் செய்ய வீட்டிற்கு அழைத்துக் கொண்டு செல்கிறேன் தீபாவளி அன்று அனைவருமே ட்ரடிஷனலாக இருப்பார்கள் ஆனால் என் காதலி மாடனாக வந்திருந்தால் அது என் அம்மாவிற்கு பிடிக்கவில்லை அதற்கு பிறகு என் அம்மாவின் சில சாதாரண நடவடிக்கைகள் கூட அவளுக்கு பிடிக்கவில்லை இதனால் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு ஒன்பது வருடங்கள் நாங்கள் காதலித்தாலும் என் அம்மா செய்யும் சாதாரண விஷயம் கூட அவளுக்கு பிடிக்கவில்லை அதனால் இருவருக்குமான பேமிலி செட்டாகாது என்பதை புரிந்து கொண்டு பிரேக் அப் செய்து கொண்டோம் என்று கூறியுள்ளார். கிட்டத்தட்ட பத்து வருடங்களுக்கு முன்பு விக்னேஷ் சிவன் தனது முதல் காதலை பற்றி கூறிய செய்தி தற்போது வைரலாகியுள்ளதை அடுத்து நெட்டிசன்கள் பலரும் வாழ்க்கையில நீங்க ஒன்றை இழக்கிறீர்கள் என்றால் அதைவிட சிறப்பான ஒன்று தான் உங்களுக்கு கிடைக்கும் என்பது விக்னேஷ் சிவன் வாழ்க்கையில் நடந்திருச்சு என்று வாழ்த்து கூறி பதிவிட்டு வருகின்றனர்.