![Mayor Priya](https://www.tnnews24air.com/storage/gallery/ETe8vU0TYUn6gA8H9zDMkcEdCCL4Uwv0leYx5jCa.jpg)
சென்னை மாநகர மேயர் பிரியா பயணித்த கார் பூந்தமல்லியை அடுத்துள்ள சென்னீர்குப்பம் பகுதியில் விபத்தில் சிக்கியது. நேற்று இரவு சிக்கிய விபத்து திட்டமிட்ட செயலில் நடந்ததா என காவல்துறை தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை மாநகர காவல் ஆணையராக பணிபுரியும் பிரியா ராஜன், தற்போது நாடாளுமடன்ர தேர்தலுக்கான பணிகளை அரசியல் கட்சிகள் தீவிரமாக செய்து வருகின்றனர். அந்த வகையில், நீடூர் திமுக எம்பி கனிமொழி தலைமையிலான தேர்தல் அறிக்கை குழுவினருடன் வேலூர் மாவட்டம் சென்று இரவு சென்னை பூந்தமல்லி அருகே வந்துகொண்டிருந்தபோது முன்னாள் சென்ற கார் மீது மேயர் பிரியா கார் மோதி விபத்தில் சிக்கியது. அப்போது, பின்னால் வந்த லாரியும் மேயர் காரின் பின்புறம் இடித்து விபத்தானது. இதில் மேயர் பிரியா கார் இருபுறம் உள்ள கண்ணாடிகள் சுக்கு நூறாக உடைந்தது. எனினும் இந்த விபத்தில் நல் வாய்ப்பாக மேயர் பிரியாவுக்கு காயமின்றி உயிர்தப்பினார்.
இந்த விபத்தினால் சாலையில் போக்குவரத்துக்கு நெரிசல் ஏற்பட்டது. மேயர் பிரியாவின் ஓட்டுனருக்கு லேசான காயம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. மேயர் பிரியா வந்த வாகனம் விபத்தில் சிக்கியதை அறிந்த காவல் துறையினர் காரிலிருந்து அவரை மீட்டனர். பின்னர் மாற்று வாகனத்தில், மேயர் பிரியாவை காவல் துறையினர் சென்னைக்கு அனுப்பி வைத்தனர். விபத்தில் சிக்கிய வாகனங்களை அப்புறப்படுத்திய போலீஸார், இச்சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த விபத்துக்கு முக்கிய காரணமாக அப்பகுதி மக்கள் நெடுஞ்சாலையில் உள்ள மின் விளக்குகள் ஏரியாததே காரணம் என கூறப்படுகிறது. தொடர்ந்து இப்பகுதியில் விபத்து ஏற்படுவதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில், மேயர் பிரியா விபத்துக்கள் சிக்கிய நிலையில், இது எதிர்பாராத விபத்தா இல்லை திட்டமிடப்பட்ட சதியா என்ற கோணத்தில் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தொடர்ந்து, விபத்தில் சிக்கிய வாகனங்களை பறிமுதல் செய்து விபத்து குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேயர் கலந்துகொள்ளும் ஒவ்வொரு நிகழ்ச்சியிலும் அவரது செயல் விமர்சனமாகவே பார்க்கபப்ட்டு வருகிறது மற்றும் திமுக அரசு ஒரு பெண்ணுக்கான மரியாதை கொடுக்கப்படவில்லை என விமர்சனம் வருவதும் குறிப்பிடத்தக்கது.