![payilvan ranganathan, meena](https://www.tnnews24air.com/storage/gallery/aVlLyZHSE27Tu479SIZAAsuR2zOK83AIf9KpRqPq.jpg)
தமிழ் சினிமாவின் சில குறிப்பிடத்தக்க கதாபாத்திரங்களில் நடித்தவர் பயில்வான் ரங்கநாதன். இவர் தற்போது சினிமாவில் நடிப்பதை விட்டு விட்டு சினிமா விமர்சகராகவே மாறிவிட்டார். பல முன்னணி நடிகை நடிகர்களை குறித்து தொடர் விமர்சனங்களையும் சர்ச்சைக்குரிய கருத்துகளையும் முன்வைத்து வருகிறார் பல்வான் ரங்கநாதன். மேலும் சில குறிப்பிட்ட நடிகைகளை பற்றி ஏதாவது ஒரு தகவலையும் அவர்கள் தனிப்பட்ட வாழ்க்கையில் நடந்த சில கருத்துக்களையும் பொதுவெளியில் கூறுவதை வழக்கமாகக் கொண்டுள்ளார். அப்படி பயில்வான் ரங்கநாதனின் திருச்சியில் சிக்காத ஒரு நடிகை நடிகர்கள் கூட இல்லை. இப்படி ஒரு சில நடிகர் நடிகைகளை வெளிப்படையாக விமர்சித்து வருவதும் அதற்கு சில விமர்சனங்களை பயில்வான் ரங்கநாதன் பொதுவெளியிலே பெற்று வருவதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் பயில்வான் ரங்கநாதன் தற்போது மீண்டும் ஒரு நடிகை குறித்து வெளிவராத செய்தியை கூறியுள்ளார்.
அதாவது சிவாஜி கணேசனின் நெஞ்சங்கள் என்ற படத்தின் மூலம் திரையுலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான மீனா தொடர்ந்து சிவாஜி கணேசன் நடித்த பல படங்களில் குழந்தை நட்சத்திரமாகவே நடித்து வந்தார் ஆனாலும் அன்புள்ள ரஜினிகாந்த் என்ற படத்தின் மூலமே சிறு வயதில் மீனா மிகவும் பிரபலமானார். அதற்குப் பிறகு ராஜ்கிரன் நடிப்பில் வெளியான என் ராசாவின் மனசிலே என்ற படத்தில் மூலம் ஹீரோயினாக அறிமுகமான மீனா தமிழ் தெலுங்கு கன்னடம் உள்ளிட்ட பல மொழிகளில் தொடர்ச்சியாக நடிக்க ஆரம்பித்து முன்னணி நடிகையாக வலம் வந்தார். எஜமான், முத்து, நாட்டாமை, சேதுபதி, அவ்வை சண்முகி, ஐபிஎஸ், பாரதி கண்ணம்மா, வெற்றிக்கொடி கட்டு, பொற்காலம், வானத்தைப்போல, ரிதம், ஆனந்த பூங்காற்றே, சிட்டிசன் போன்ற படங்களில் மீனாவின் நடிப்பு பல தமிழ் மற்றும் தெலுங்கு ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளது. இதனை அடுத்து கடந்த 2009 ஆம் ஆண்டு பெங்களூருவை சேர்ந்த வித்யாசாகர் என்பவரை திருமணம் செய்து கொண்ட மீனா நைனிகா என்ற குழந்தைக்கு தாயாக உள்ளார்.
நைனிகாவும் விஜயின் தெறி படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக தமிழ் சினிமாவில் அறிமுகமாகி பிரபலமானவர். இதனை அடுத்து கடந்த 2022 ஆம் ஆண்டு மீனாவின் கணவர் உடல்நல குறைவால் காலமானார். அதனால் கடந்த சில மாதங்களாக வெளியில் வராமல் தன்னை பூட்டிக் கொண்டிருந்த மீனா தற்போது மீடியாவில் வெளிவர ஆரம்பித்துள்ளார். இந்த நிலையில் தான் சினிமா விமர்சகர் ஆன பயில்வான் ரங்கநாதன் நடிகை மீனா குறித்து ஒரு கருத்தை கூறி உள்ளார். தனியார் youtube சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்த பயில்வான் ரங்கநாதன் நடிகைகள் முன்பெல்லாம் பேட்டி கேட்டால் எந்த ஸ்டூடியோவில் இருப்பார்களோ அதை கூறி அங்கு வந்து பேட்டி எடுத்துக் கொள்ளுங்கள் என்று கூறுவார்கள் ஆனால் தற்போதயெல்லாம் பேட்டி கேட்டால் எவ்வளவு நேரத்திற்கு எவ்வளவு பணம் கொடுப்பீர்கள் என்று தான் கேட்கிறார்கள்... ஒரு youtube சேனல் நிறுவனம் கூட சமீபத்தில் மீனா விடம் பேட்டி எடுத்துள்ளது அதற்காக மீனா அந்த யூட்யூப் சேனலிடம் எவ்வளவு மணி நேரத்திற்கு எவ்வளவு பணம் தருவீர்கள் என்று கேட்டு அந்த youtube சேனலும் இரண்டு மணி நேரத்திற்கு 13 லட்சம் ரூபாய் கொடுத்து மீனாவிடம் பேட்டி எடுத்துள்ளது. முன்னதாக நடிகை மீனாவுக்கு இரண்டாவது திருமணம் நடைபெற போவதாக பேச்சுகள் சினிமா வட்டாரங்களில் வைரலாக பேசப்பட்ட நிலையில் தற்பொழுது யூடியூப் சேனலில் இரண்டு மணி நேர பேட்டிக்கு 13 லட்சம் மீனா கேட்டுள்ளார் என்ற பயில்வான் ரங்கநாதன் கூறியதும் தற்போது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.