24 special

பாமக கூட்டணி இறுதி பேச்சுவார்த்தை முடிந்தது...? வெளியான அதிரடி தகவல்!

Ramadsoss, Gk Mani
Ramadsoss, Gk Mani

நாடாளுமன்ற தேர்தல் தொடர்பான அறிவிப்புகள் அடுத்த வாரம் வெளியாகும் என அரசியல் தலைவர்கள் எதிர்பார்க்கின்றனர். அரசியல் விமர்சகர்களோ இந்த மாத இறுதிக்குள் தமிழகத்தில் கூட்டணி அமைத்து விடும் என கூறி வருகின்றனர். ஒவ்வொரு கட்சிகளும் அதற்கான வேலைகளில் தீவிரமாக செயல்பட்டு வருகிறது. அதிமுக கட்சி தீவிரமாக கூட்டணி அமைக்க சல்லடை போட்டு வருகின்றனர் மூத்த தலைவர்கள். இந்நிலையில், பாமக யாருடன் என கௌரவத் தலைவர் ஜிகே மணி தெரிவித்துள்ளார்.


தமிழகத்தில் திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், விசிக, மதிமுக, இந்திய யூனியன் முஸ்லீம் லீக், கொமதேக உள்ளிட்ட கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இந்த கட்சிகளும் தங்களுக்கு தேவையான தொகுதி பங்கீட்டை ஆலோசனை நடத்தினர். இன்னும் எந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது என முடிவு எடுக்கவில்லை. மற்றொரு புறம் அதிமுக தங்களது கூட்டணியை பலப்படுத்தும் நோக்கில் செயல்படுத்தி வருகிறது. எஸ்டிபிஐ உள்ளிட்ட கட்சிகளுடன் கூட்டணியை உறுதி செய்துள்ள அதிமுக, பாமக, தேமுதிகவை கூட்டணியில் சேர்க்க வழிகளை தேடி மூத்த முன்னாள் அமைச்சர்கள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

அதேபோல், தேசிய கட்சியான பாஜகவும், பாமக, தேமுதிக, தமாக ஆகிய கட்சிகளுடன் கூட்டணி அமைக்க பேச்சு வார்த்தை நடத்தி வருகிறது. ஒரு பக்கம் எடப்பாடி பழனிச்சாமி இன்னும் என்ன என்ன மாற்றங்கள் தமிழகத்தில் நடக்கப்போகிறது என பொறுத்திருந்து பாருங்கள் என கூறுகிறார். மற்றொரு பக்கம் முதலமைச்சர் ஸ்டாலின் தமிழகத்தில் தேர்தலுக்கு பின் நடக்க போகும் மாற்றத்தை காணுங்கள் என ஒரு டீவீஸ்ட் கொடுத்துள்ளார். கடந்த முறை சுமார் 7 தொகுதிகளில் பாமக கட்சி அதிமுக - பாஜக கூட்டணியில் இணைந்து போட்டியிட்டது. இதில் ஒரு தொகுதி கூட வெற்றி பெறவில்லை எனபது குய்ப்பிடத்தக்கது.

இந்நிலையில், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூட்டணியில் தனா இந்த முறையும் தேர்தலில் சந்திக்க போறோம்  என அறிவித்தார். அதன் பின் அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி சண்முகம் தைலாபுரத்தில் உள்ள பாமக நிறுவனர் ராமதாஸ் வீட்டில் பேச்சுவார்த்தை தொடங்கியது. அது தொடர்பான புகைப்படமும் இணையத்தில் வைரலானது. இதனையெடுத்து அரசியல் விமர்சகர்கள் 7 தொகுதிகளை பாமக கேட்டு வருவதாகவும் குறிப்பிட்ட தொகையை அதிமுகவுடன் பாமக கேட்பதாகவும் கூறினர். இதனால் அதிமுக குறைவான தொகை கொடுப்பதாக சில தகவல் கொடுத்தனர்.  ஆனால், அதன் காரணமாக தான் பேச்சுவார்த்தை இறுதி கட்டத்துக்கு செல்லவில்லை என்று கூறப்படுகிறது.

தொடர்ந்து பாஜக பக்கமும் தொகுதி குறித்தும் ராஜசபா குறித்தும் ஆலோசனை நடந்து வருவதாக தெரிகிறது. அதிமுகவுடன் பாமக எம்எல்ஏ பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறுகின்றனர். இந்நிலையில், பாமக சட்டமன்றக் குழு தலைவர் ஜிகே மணி செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசுகையில், "பாமகவை பாஜகவும் அதிமுகவும் கூட்டணி அமைக்க அணுகியுள்ளன. தேர்தல் கூட்டணி குறித்து தற்போது வரை பாமக எந்த முடிவும் எடுக்கவில்லை. வரும் வாரத்தில் நடக்கும் மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தித்திற்குப் பிறகு கூட்டணி குறித்து முடிவு எடுக்கப்படும். மாவட்டச் செயலாளர்கள் கருத்து அறிந்த பிறகு கூட்டணி பற்றி பாமக நிறுவனர் ராமதாஸ் இறுதி முடிவை எடுப்பார்" எனத் தெரிவித்தார். இந்த மாதம் இறுதிக்குள் தமிழகத்தில் கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தை முடிவுக்கு எட்டப்படும் என கூறப்படுகிறது.