நாகர்கோவில் மாநகராட்சி தேர்தலில் திமுக காங்கிரஸ் கூட்டணி 32, வார்டுகளையும் பாரதிய ஜனதா 11 வார்டுகளையும் அதிமுக 7 வார்டுகளையும் கைப்பற்றியது. சுயேச்சைகள் 2 வார்டுகளில் வெற்றி பெற்றனர்.
புதிதாக தேர்வு செய்யப்பட்ட கவுன்சிலர்கள் 51 பேர் கடந்த இரண்டாம் தேதி பதவியேற்றுக் கொண்டனர். 36-வது வார்டு கவுன்சிலர் உடல்நலம் பாதிப்பு காரணமாக நடந்த பதவியேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்கவில்லை.இந்நிலையில் இன்று 4 ந் தேதி மேயர் மற்றும் துணை மேயர் தேர்தல் நடக்க ஏற்பாடு செய்யபட்டது.
மேயர் மற்றும் துணை மேயர் பதவியைக் கைப்பற்ற திமுக கூட்டணி கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை உள்ளது. அதிமுகவினர் தேர்தலில் தனித்தனியாக போட்டியிட்டாலும் மேயர் துணை தலைவர் தேர்தலில் பாரதிய ஜனதாவிற்கு ஆதரவு அளித்து இருந்தனர்.
இதையடுத்து பாரதிய ஜனதாவும் மேயர் மற்றும் துணை மேயர் தேர்தலில் போட்டியிட தயாராகியது. பாரதிய ஜனதா கட்சி சார்பில் மேயர் வேட்பாளராக மீனாதேவ் அறிவிக்கப்பட்டார். திமுக கூட்டணியில் மேயர் வேட்பாளராக மகேஷ் அறிவிக்கப்பட்டார்.
காங்கிரஸ் கட்சி துணை மேயர் பதவி கேட்க திமுக நிராகரித்தது இந்த சூழலில் காங்கிரஸ் கட்சி கவுன்சிலர்கள் பாஜகவிற்கு வாக்களிக்கலாம் என்ற தகவல் பரவ கதிகலங்கி நின்றது திமுக மேலும் சுயேட்ச்சை கவுன்சிலர்களும் பாஜகவிற்கு ஆதரவு தெரிவிக்க வெற்றி உறுதி என இருந்த திமுக அதிர்ச்சி அடைந்தது.
இந்த சூழலில் மாநகராட்சி மேயர் பதவி தேர்தல் தொடங்கியது இதில் திமுக 28 வாக்குகள் வாங்கி வெற்றி பெற்றது, எதிர்த்து போட்டியிட்ட பாஜக வேட்பாளர் மீனா தேவ் 24 வாக்குகள் வாங்கினார், 32 வாக்குகள் பெறவேண்டிய திமுக 28 வாக்குகள் பெற்றது அதே நேரத்தில் 11 கவுன்சிலர்களை பெற்ற பாஜக 24 வாக்குகளை அள்ளியது, இரண்டு வாக்குகள் பாஜகவிற்கு சாதகமாக மாறி இருந்தாலும் திமுக நிலை இழுபறிக்கு சென்று இருக்கும்.
கடந்த இரண்டு முறை நாகர்கோவிலை தங்கல்கட்டுப்பாட்டில் வைத்திருந்த பாஜக இந்த முறை இழந்தது அதே நேரத்தில் மேயர் தேர்தலில் திமுகவிற்கு நிகராக எகிறி வந்திருப்பது எப்போதும் நாகர்கோவில் பாஜகவின் கோட்டை என்பது நிரூபணம் ஆகியிருப்பதாக அரசியல் வல்லுநர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
More watch videos