24 special

கைதிலிருந்து தப்பிக்க அலுவலகத்திலே ஷர்மிளா செஞ்ச காரியம்... ஆனா கிளைமாக்ஸ் தான் ட்விஸ்டு...

jaganmohan reddy, sharmila
jaganmohan reddy, sharmila

ஆந்திராவில் தற்போது ஒய் எஸ் ஆர் கட்சி ஆட்சி புரிந்து வருகிறது. அதன் முதல்வராக ஒய் எஸ் ஜெகன்மோகன் ரெட்டி உள்ளார். கடந்த நவம்பர் 30ஆம் தேதி 119 உறுப்பினர்களைக் கொண்ட தெலுங்கானா சட்டப்பேரவைக்கு தேர்தல் நடத்தப்பட்டு டிசம்பர் மூன்றாம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. அப்படி தேர்தலுக்கான பரபரப்பான சூழ்நிலைகள் நிலவிய பொழுது ஒய் எஸ் ஆர் தெலுங்கானா கட்சியின் தலைவரும் ஒய் எஸ் ஜெகன்மோகன் ரெட்டியின் சகோதரியுமான ஒய் எஸ் ஷர்மிளா செய்தியாளர்களை சந்தித்து தெலுங்கானாவில் நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்றும் தேர்தலில் வாக்குகள் பிளவு படுவதை தடுக்க தனது ஆதரவை காங்கிரசிற்கு வழங்க முடிவு செய்துள்ளேன் என்று கூறினார். மேலும் தெலுங்கானா மாநிலம் ஒரு முக்கியமான இடத்தில் உள்ளது. கே சி ஆரின் தவறான ஆட்சியாளர் தெலுங்கானா மக்கள் சிரமத்திற்கு உள்ளாகிறார்கள்.


அவரின் கொடூரமான ஆட்சியை கவிழ்க்கவே மக்கள் தயாராக உள்ளனர், தெலுங்கானாவின் செல்வம் எப்படி பறிக்கப்பட்டது என்பதை மக்கள் கண்கூடாக பார்த்திருக்கிறார்கள் ஏனென்றால் கேசிஆர் மற்றும் அவரது கூட்டாளிகளின் பெரும் ஊழலால் ஒரு பணக்கார மாநிலம் தற்போது பெரும் கடலில் சிக்கி உள்ளது என்று கூறினார். இப்படி ஒய் எஸ் ஷர்மிளா காங்கிரஸில் இணைந்த சில காலத்திலேயே ஆந்திர மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவராக நியமிக்கப்பட்டார். அண்ணனின் ஆட்சி ஆந்திராவில் இருக்கும் பொழுது அவரின் தங்கையைக் கொண்டு எதிர்க்க வைக்கும் ஒரு திட்டத்தில் காங்கிரஸ் இதனை மேற்கொண்டது. காங்கிரஸின் திட்டத்திற்கு ஏற்றார் போல் ஒய் எஸ் ஷர்மிளாவும் ஆந்திர காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக பொறுப்பேற்க பட்டதிலிருந்து பம்பரமாக சுற்றி வேலை செய்ய ஆரம்பித்தார் எதற்கெடுத்தாலும் கண்டனம் போராட்டம் என இவரால் ஆந்திர மாநிலமே பரபரப்பாக இருந்தது.

இதனை அடுத்து முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி அரசு வாக்குறுதிகளை நிறைவேற்ற வில்லை இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பையும் வழங்கவில்லை என அடுக்கடுக்கான பல குற்றச்சாட்டுகளை முன்வைத்து தலைமைச் செயலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தை மேற்கொள்ள உள்ளதாக ஷர்மிளா அறிவித்தார். ஆனால் ஜெகன்மோகன் ரெட்டி அரசு தலைமைச் செயலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவதற்கு முன்பாக ஷர்மிளாவை வீட்டு காவலில் வைக்க முயற்சி செய்தது. இதனை தெரிந்து கொண்ட ஷர்மிளா வீட்டிற்கு செல்லாமல் காங்கிரஸ் கட்சி அலுவலகத்திலேயே தங்கினார். அப்படி கைதிற்கு பயந்து காங்கிரஸ் கட்சி அலுவலகத்திலேயே ஷர்மிலா தங்கிய புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் அனைத்தும் இணையத்தில் வைரலானது அதாவது அண்ணனின் ஆட்சியை கவிழ்க்க பார்க்கும் தங்கை அதற்காக தங்கையை கைது செய்த அண்ணன் அண்ணனின் கைதிருக்கு பயந்து அலுவலகத்திலேயே உறங்கிய தங்கை என பல கமெண்ட்கள் முன்வைக்கப்பட்டது.

இருப்பினும் தனது நிலைகளில் இருந்த பின் வாங்காமல் ஒய் எஸ் ஷர்மிளா இன்று காங்கிரஸ் கட்சியின் 40 பேரை இணைத்துக்கொண்டு ஆந்திர தலைமைச் செயலகத்தை நோக்கி முற்றுகை போராட்டத்தில் ஈடுபட முயற்சித்தார் அப்பொழுது விஜயவாடா போலீசார் அவரை கைது செய்தனர். தற்போது இணையதளம் முழுவதுமே விஜயவாடா போலீசார் ஜெகன்மோகன் ரெட்டியின் தங்கையும் ஆந்திர காங்கிரஸ் கமிட்டியின் தலைவருமான ஷர்மிளாவை குண்டு கட்டாக தூக்கிச் செல்லும் காட்சியே வைரல் ஆகி வருகிறது. அதோடு ஜெகன்மோகன் ரெட்டியின் அரசு தனது தங்கையான ஷர்மிளாவை வீட்டிலே கைது செய்யும் நடவடிக்கையை முயற்சித்த பொழுதும் அதிலிருந்து தப்பிக்க காங்கிரஸ் அலுவலகத்திலேயே தங்கிய சர்மிளாவின் புகைப்படமும் வீடியோவும் கூட வைரல் ஆகி வருகிறது.