24 special

சபரீசனிடம் பி. டி. ஆர் பேசிய ரகசியம் என்ன...?

Sabarisan , palanivel thiyagarajan
Sabarisan , palanivel thiyagarajan

திமுக அமைச்சரவை ஆட்டம் கண்டிருக்கும் நேரத்தில் சபரீசனிடம் பி டி ஆர் பேசிய ரகசியம் என்ன என்ற தகவல்கள்தான் தற்போதைய அறிவாலயத்தின் ஹாட் டாபிக்! பி டி ஆர் பழனிவேல் தியாகராஜன் நிதியமைச்சராக இருந்த பொழுது அவர் பேசிய இரண்டு ஆடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி திமுகவை பெரும் அதிர்ச்சியிலும், சோகத்திலும் தள்ளியது. முதல் ஆடியோ பதிவில் சபரீசன் மற்றும் முதல்வர் ஸ்டாலின் மகன் உதயநிதி ஸ்டாலின் ஆகிய இருவரின் சொத்து குவிப்பு பற்றியும் அதனை எப்படி மறைப்பது என்று தெரியவில்லை என்ன செய்வது என்று தெரியவில்லை என்று பி டி ஆர் பழனிவேல் தியாகராஜன் புலம்பி இருந்தது இடம் பெற்றிருந்தது.


இந்த ஆடியோ வெளியாகி இரண்டு மூன்று நாட்களுக்கு திமுக தரப்பில் எந்த ஒரு பதிலும் விளக்கமும் அளிக்கப்படவில்லை பி டி ஆர் பழனிவேல் தியாகராஜனும் அமைதி காத்தார்.  சில தினங்களுக்குப் பிறகு அந்த ஆடியோவை இடம் பெற்றிருப்பது என்னுடைய குரல் இல்லை தற்போதைய காலகட்டத்தில் வளர்ந்திருக்கும் தொழில்நுட்பத்தின் மூலமாக போலியாக சித்தரிக்கப்பட்டுள்ளது என்று பி டி ஆர் பழனிவேல் தியாகராஜன் அறிவித்தார். இந்த முதல் ஆடியோ பதிவின் காரணமாகவே திமுகவில் இவருக்கு அதுவரை இருந்த மரியாதை போனதாக கருதப்பட்டது. பிறகு ஒரு வாரங்கள் கழித்து பி டி ஆர் பழனிவேல் தியாகராஜன் பேசிய மற்ற ஆடியோவும் வெளியானது. அதில் திமுகவின் கட்சியை பற்றி தெள்ளத் தெளிவாக எடுத்துரைத்திருந்தார். பாஜகவின் செயலைப் பற்றியும் அவர் பாராட்டி பேசி இருந்தார். மொத்த கட்சியாகவே சபரீசன் மற்றும் உதயநிதியே திமுகவில் உள்ளனர் அவர்கள் கூறுவதே வேதவாக்காக உள்ளது என்பது போன்று பி டி ஆர் இரண்டாவது ஆடியோவில் பேசியிருந்தார். இந்த இரண்டு ஆடியோக்களாலும் இவரது அமைச்சர் பதவியே பறிபோகும் நிலை ஏற்பட்டது. பின்னர் சில காரணங்களுக்காக நிதியமைச்சர் பதவியில் இருந்து தகவல் தொழில்நுட்ப துறைக்கு அவரை மாற்றியது திமுக தலைமை. 

இது இரண்டு ஆடியோக்கள் வெளியான பிறகும் முதல்வரை நேரில் சந்தித்து எனக்கும் அதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று விளக்கம் அளித்து வந்த பிறகும் அவரது பதவி மாற்றப்பட்டதால் பிடிஆர் பெரும் அதிருப்தியில் இருந்து உள்ளார் இதனாலே திமுகவின் எந்த ஒரு நிகழ்ச்சியிலும் அதற்குப் பிறகு கலந்து கொள்ளாமல் ஒதுங்கி இருந்துள்ளார். மேலும் அமைச்சர் செந்தில் பாலாஜி நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த போதும் ஒட்டுமொத்த திமுக அமைச்சரவையே மருத்துவமனையில் குவிந்திருந்த பொழுதும் பி டி ஆர் பழனிவேல் தியாகராஜன் செந்தில் பாலாஜியை பார்ப்பதை புறக்கணித்தார். இப்படி பிடிஆருக்கும் திமுக தலைமைக்கும் இடையில் இருந்த உறவு விரிசல் அடைந்துள்ள நிலையில் தற்போது பி டி ஆர் பழனிவேல் தியாகராஜன், முதல்வர்  ஸ்டாலின் மற்றும் அவரது மருமகன் சபரீசன் ஆகிய மூவரும் இருக்கும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது. 

சென்னையில் நேற்று நடத்தப்பட்ட ஒரு நிகழ்வில், முன்னாள் தலைமைச் செயலாளர் சபாநாயகர் மறைவை தொடர்ந்து அவரது இல்லத்திற்கு சென்று துக்கம் விசாரிப்பதற்காக முதல்வர் ஸ்டாலின், அவரது மருமகன் சபரீசன், ஆ. ராசா மற்றும் பி டி ஆர் போன்றோர் இணைந்து சென்றுள்ளனர். இந்த நிகழ்வின் போது சபரீசன் மற்றும் பி டி ஆர் ஆக இருவரும் சகஜமாக பேசிக் கொண்டதாகவும் பிறகு அங்கு இருந்த குடும்ப நபர்களுடன் எடுத்துக் கொண்ட புகைப்படம் தான் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி சில அரசியல் கட்சிகளுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதன் பின்னணியில், பி டி ஆர் பழனிவேல் தியாகராஜன் ஆடியோ விவகாரம் குறித்து மன்னிப்பு கேட்டிருக்கலாம், அதாவது இவருக்கு திமுகவில் தற்போது  முக்கியத்துவம் குறைக்கப்பட்டுள்ளது இதனால் கட்சியிலிருந்து மறக்கப்பட்டு, ஒதுக்கப்பட்டு விடுவோமோ என்று நினைத்து பி டி ஆர் பழனிவேல் தியாகராஜன், முதல்வர் ஸ்டாலின் மற்றும் சபரீசன் ஆகிய இருவரையும் சந்தித்து உரையாடிருப்பார் என்று அறிவாலய வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.