Cinema

சூர்யாவுடன் படத்தை இயக்கியதால் கெட்ட வார்த்தையால் திட்டு வாங்கினேன்...ஓப்பனாக தெரிவித்த லிங்குசாமி!

Surya, Lingusamy
Surya, Lingusamy

நண்பர்களை மையப்படுத்தி வரும் படங்கள் அனைத்தும் மக்கள் இடத்தில் வெற்றி தான் பெரும், மலையாளத்தில் இருந்து டப்பிங் செய்யப்பட்ட ப்ரெண்ட்ஸ் படம் மிக பெரிய வெற்றி பெற்றது. ஆனால் சூர்யா, வித்யூத் ஜம்வால் நடிப்பில் வெளியான படம் அஞ்சான் இதனை இயக்குனர் லிங்குசாமி இயக்கினார். படம் 2014ம் ஆண்டு வெளியாகி பெரிய தோல்வி படமாக அமைந்தது. இதனால் அஞ்சான் படம் வெளியான போது நான் கெட்ட வார்த்தையால் திட்டு வாங்கினேன் என பேட்டி ஒன்றில் லிங்குசாமி தெரிவித்துள்ளார். 


தமிழ் சினிமா துறையில் பிரபலமான இயக்குனர் வரிசையில் ஒருவர் லிங்குசாமி அவர் இயக்குனர் விகர்மனிடம் துணை இயக்குனராக பனி புரிந்தவர் லிங்குசாமி தனியாக திருப்பதி பிரதர்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்திலும் வைத்துள்ளார். லிங்குசாமி இயக்கும் படத்திற்கு எல்லாம் அவரது தயாரிப்பு நிறுவனம் மூலமே படம் வெளியாகும். தமிழில் ஆனந்தம் படத்தின் மூலம் முதல் படத்தை இயக்கினார் அதன் பிறகு சண்டைக்கோழி, பையா என்ற பல படங்களை இயக்கினார். தமிழ் மட்டுமின்றி தெலுங்கிலும் பல படத்தை இயக்கியுள்ளார். தமிழில் 2014ம் ஆண்டு சூர்யா, பாலிவுட் நடிகர், சமந்தா என பலர் நடித்து யுவன் ஷங்கர் ராஜா இயக்கத்தில் வெளியான படம் அஞ்சான்.

அஞ்சான் படம் வெளியாகி தோல்வியை தழுவியது, இந்த படத்தை பார்ப்பதற்கு பாட்ஷா படத்தை பார்த்துவிடலாம் என்ற நிலைக்கு தள்ளப்பட்டனர். மேலும், இது போல் படத்தை யாருக்காக லிங்குசாமி இயக்கினார் என கேள்வியும் எழுந்தது. இணயத்திலும் பலர் லிங்குசாமியை கடுமையாக விமர்சித்து வந்தனர். அதன் பிறகு தெலுங்கு பக்கம் சென்று அங்கு ஒரு படத்தை இயக்க அதுவும் தோல்வி படமாக அமைந்தது. இந்தநிலையில் தனியார் சேனலுக்கு பேட்டி கொடுத்த லிங்குசாமி அதில், வெற்றியோ,தோல்வியோ இரட்டையும் நான் சமமாகத்தான் பார்ப்பேன், ஏன் என்றால், சென்னைக்கு வந்த போது பத்துக்கு பத்து ரூமில், சாப்பாட்டுக்கு கூட வழியில்லாமல் இட்லி கடையில் கடன் வாங்கி சாப்பிட்டு இருக்கிறேன். இதே போல தேவர்மெஸ், சரவணபவன் என பல இடத்தில் கடனுக்கு சாப்பிட்டு இருக்கிறேன். அதே போல, பல நண்பர்கள் எனக்கு கடன் கொடுத்து உதவி இருக்கிறார்கள்.

இப்படி அடிமட்டத்தில் இருந்து வந்தவன் நான், இதனால், வெற்றியோ, தோல்வியோ இரட்டையும் நான் சரிசமமாக தான் பார்க்கிறேன். அஞ்சான் படம் வந்த போது படு மோசமான கெட்டவார்த்தையால் திட்டினார்கள். அதை எல்லாம் நாம் கடந்து போய் கொண்டே இருக்க வேண்டும் எங்கேயும் தேங்கி நிற்கக்கூடாது. நாம் செய்ய வேண்டியது வேலை மட்டும், சரியான ஒரு படத்தை கொடுத்துவிட்டால் போது, அது அடுத்த படமாக இருக்கலாம்... அதற்கு அடுத்த படமாக இருக்கலாம், ஆனால், அதற்கான முயற்சியில் இருந்து கொண்டே இருக்க வேண்டும் என தெரிவித்தார். இந்நிலையில் இவரின் பேச்சு இணையத்தில் வைரலாக சினிமா துறையை சேர்ந்தவர்களை அஞ்சான் படம் சரியில்ல தான் அதனால் இப்படி தான் அவமான படவேண்டும் என விமர்சிக்க தொடக்கியுள்ளனர். 

ஏற்கனவே 2010ம் ஆண்டு வெளியான பையா படத்தின் இரண்டாம் பாகம் எடுக்க முடிவு செய்த லிங்குசாமி கார்த்திக் தான் அதிலும் நடிப்பார் என கூறி வந்த நிலையில், தற்போது அதில் நடிகர் அதர்வாவின் தம்பி ஆகாஷ் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகின. இந்த மாற்றத்திற்கு அஞ்சான் படத்தை சூர்யாவை வைத்து இயக்கியதே காரணம் ஏனெனில் அதன் மூலமே தொடர் தோல்வி படம் லிங்குசாமிக்கு அமைவதால் சூர்யா உடன் இணைந்து வந்த சர்ச்சை போதும், அடுத்து கார்த்திக் எல்லாம் வேணாம் என முடிவெடுத்து புதுமுக முகத்தை தேடி லிங்குசாமி பயணத்தி தொடங்கிவிடலாம் என முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது.