திரையுலகம் என்றாலே சமூகத்தில் நடக்கும் நிகழ்வுகளை மையப்படுத்தி மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும் மக்கள் கொண்டுள்ள நம்பிக்கையை குறித்த படங்களும் எடுக்கப்பட வேண்டியது. இதன்படி தமிழ் சினிமாவில் சில படங்கள் வெளியாகி வருகிறது என்றும் கூட சொல்லலாம் இருப்பினும் சமீப காலமாக தமிழ் திரை உலகில் எடுக்கப்படுகின்ற கதை மற்றும் உருவாகின்ற கதை களத்தை பார்த்தால் வன்முறை சமயத்தை எதிர்க்கும் கருத்துக்கள் பெண்ணியம் என்ற பெயரில் பல புதிய கருத்துக்கள் அடங்கிய படங்களும் தற்போது வெளியாகி வருகிறது அதோடு திராவிட முன்னேற்றக் கழகத்தால் தலை தூக்கி புகழ்ந்து பேசப்பட்டு வருகின்ற பெரியாரிஸ்ட் கருத்துக்கள் அடங்கிய படங்களை அதிகமாக வெளியாகிறது. அதே சமயத்தில் அதிமுக ஆட்சி காலத்தில் அரசியலில் அதிகமாக குரல் எழுப்பி வந்த அரசாங்கத்தை எதிர்த்தும் அதிக எதிர்ப்புகளை முன்னெடுத்து வந்த தமிழ் திரைப்பட நடிகர்கள் பெரும்பாலானோ தற்போது எதுவும் பேசாமல் மௌனம் விரதம் எடுத்து வருகின்றனர் அதிலும் குறிப்பாக கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் இருந்ததைவிட அதிக அளவிலான போராட்டங்களும் வன்முறைகளும் சமுதாய பிரச்சனைகளும் திமுக ஆட்சி காலத்தில் நடைபெற்றது நடைபெற்றுக் கொண்டே வருகிறது ஆனால் அவற்றை எதிர்த்து தமிழ் திரை உலகினர் எந்த ஒரு கருத்தையும் முன்வைக்கவில்லை!
விவசாயிகளுக்கு ஆதரவாக குரல் கொடுக்கவில்லை ஆசிரியர் சங்கங்களுக்கு ஆதரவாக குரல் கொடுக்கவில்லை தற்போது நீட் தேர்வால் ஏழை எளிய மாணவர்கள் கூட தன்னிச்சையான முறையில் படித்து மருத்துவ சீட்டை பெற்று வருகின்றனர் ஆனால் அந்த நீட்டை எதிர்த்த சூர்யா கூட தற்போது சமூகத்தில் நடந்த பிரச்சனைகளுக்கு குரல் கொடுக்கவில்லை! அதே சமயத்தில் பல ஆண்டுகளாக நாட்டு மக்களின் எதிர்பார்ப்பாகவும் கனவாகவும் இருந்து வந்த அயோத்தி ராமர் கோவிலும் தற்போது கம்பீரமாக எழுந்து நிற்கிறது அவற்றை குறித்தும் எதுவும் கூறவில்லை. இப்படி தமிழ் திரையுலகம் மொத்தமும் திமுகவிற்கு சாதகமாகவும் திமுகவும் சொல்லுக்கு அசையும் பொம்மையாகவும் செயல்பட்டு வருவதாக அரசியல் விமர்சகர்கள் விமர்சனம் செய்து வருகின்றனர். இந்த நிலையில் தமிழ் திரை உலகத்தைச் சேர்ந்தவர்கள் செய்ய தவறியவற்றை மலையாளம் மற்றும் தெலுங்கு திரையுலகினர் செய்து வருகின்றனர். ஏனென்றால் ஒட்டு மொத்த தமிழகமே அயோத்தி ராமர் கோவில் குறித்த அறிவிப்புகளையும் நேரடி ஒளிபரப்பையும் எதிர்த்து விமர்சித்து வந்த நிலையில் தெலுங்கில் ராமரை குறித்த திரைப்படம் அதிகமாக வெளியாகியது.
அதோடு தெலுங்கு மற்றும் மலையாள திரை உலகை சேர்ந்தவர்கள் அயோத்தி ராமர் கோவிலுக்கு சென்று அங்கு தான் அனுபவித்த தருணங்கள் குறித்தும் பகிர்ந்தனர் செல்லாதவர்கள் கூட தங்கள் மகிழ்ச்சியை தெரிவித்து இருந்தனர். இந்த நிலையில் தெலுங்கு பிரபல நடிகரான ராம்சரண் நடிப்பில் வெளியான ஆர் ஆர் ஆர் திரைப்படத்தில் கடவுள் நம்பிக்கை குறித்தும் ராமர் மீது கொண்டுள்ள பக்தியும் காட்சிகளாக்கப்பட்டிருந்தது. அதேபோன்று தற்போது படத்தில் மட்டுமல்ல நிஜத்திலும் கடவுள் பக்தி கொண்டவன் என்பதை ராம்சரண் வெளிக்காட்டி வருகிறார். அதாவது கோவில்களுக்கு சென்று பூஜைகளில் கலந்து கொண்டு மக்களோடு மக்களாக நின்று கோவிலில் அமர்ந்து ராம்சரண் தியானம் செய்யும் வீடியோக்கள் தற்போது இணையத்தில் வெளியாகி உள்ளது. இதனை பலரும் பகிர்ந்து வருகின்றனர்.