தற்போது அரசியலில் அதுவும் தமிழக அரசியலில் பேசப்பட்ட ஒரு செய்தி இந்தியா முழுவதும் பேசுபொருளாக அமைந்துள்ளது உதயநிதி சனாதன ஒழிப்பு பற்றி கூறியது தான்! மூத்த அரசியல்வாதிகள் பலர் நாட்டில் இருக்கும் அனைத்து மக்களையும் சமமாக மதிக்க வேண்டும் உதயநிதி கூறுவது அவர் தனிப்பட்ட கருத்து அதை மற்ற அனைவராலும் ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் மக்கள் மத்தியில் உதயநிதி மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் இனிமேல் சனாதன ஒழிப்பு பற்றி அவர் எந்த கருத்துக்களையும் தெரிவிக்க கூடாது என தெரிவித்தும் அவை அனைத்தையும் கண்டு கொள்ளாமல் நான் சனாதன ஒழிப்பு பற்றி இன்னும் அதிக மேடைகளில் பேசுவேன் சனாதனத்தை ஒழிப்பதற்காகவே தொடங்கப்பட்ட கட்சி திமுக இதற்காக எங்களது ஆட்சியே சென்றாலும் கவலைப்பட போவதில்லை என்று தெரிவித்ததோடு இன்னும் இருநூறு ஆண்டுகளுக்கு சனாதன ஒழிப்பு பற்றி பேசப் போகிறேன் என உதயநிதி கூறிக்கொண்டுள்ளது திமுகவிற்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியது.
அது மட்டுமல்ல அவர்களது வாக்கு வங்கிக்கு பெரும் ஆபத்தாக மாறும் எனவும் இது திமுகவின் அழிவுக்காலம் எனவும் விமர்சனங்கள் எழுந்தன..இந்த சூழலில் சனாதன ஒழிப்பு பற்றி பேசுவதன் மூலமாக சிறுபான்மையினர் வாக்கு வங்கியை நாம் கவர முடியும் என்ற நினைப்பில் இருந்து கொண்டிருந்த திமுக தலைமைக்கு தற்போது பேரதிர்ச்சி ஒன்று ஏற்பட்டுள்ளது. அதாவது சிறுபான்மையினரின் ஓட்டுக்களை சனாதன ஒழிப்பு பற்றி பேசுவதன் மூலம் வெற்றி பெறலாம் என்று நினைத்துக் கொண்டிருந்த திமுக அரசிற்கு எதிராகவே சிறுபான்மையினர் தற்போது திரும்பி இருப்பது திமுகவிற்கு இடியை இறக்கியுள்ளது. அதாவது சிறுபான்மையினரின் முக்கிய இயக்கமாக கருதப்படுகின்ற எஸ்டிபிஐ கட்சி இஸ்லாமிய ஆயுள் சிறைவாசிகளை விடுதலை செய்ய வலியுறுத்தி சட்டப்பேரவை நோக்கி பேரணி நடத்தியுள்ளனர். மேலும் பல ஆண்டுகளாக தமிழகத்தில் சில தலைவர்களின் பிறந்தநாள் அன்று ஆயுத தண்டனை கைதிகளாக இருப்பவர்களுக்கு பொது மன்னிப்பும் நன்னடத்தை காரணமாகவும் விடுதலை செய்யப்படுவது வழக்கமாக உள்ளது ஆனால் அப்படி விடுதலை செய்யப்படுபவர்களில் இஸ்லாமிய ஆயுள் சிறைவாசிகள் மட்டும் இடம் பெறாமல் இருப்பதும் மாறாமல் உள்ளது.
ஆட்சிகள் பல மாறினாலும் இது மட்டும் மாறவில்லை! கிட்டத்தட்ட 37 இஸ்லாமிய சிறை கைதிகள் 14 ஆண்டுகள் கடந்து 28 ஆண்டுகள் வரை தனது சிறைவாசத்தில் தமிழகம் முழுவதும் இருக்கின்ற பல்வேறு சிறைகளில் தண்டனை அனுபவித்து வருகின்றனர். அவர்களின் பெரும்பாலான விடுதலைக்காக ஏங்கியும் விடுதலை செய்யப்படுவதை எதிர்பார்த்தும் வருடங்கள் செல்கிறது, அரசியல் சட்டப் பிரிவு 161 படியும் உச்ச நீதிமன்றத்தின் வழிகாட்டுதலின் அடிப்படையிலும் ஆயுள் தண்டனை கைதிகளாக உள்ள இஸ்லாமிய சிறை கைதிகளை விடுதலை செய்ய சாத்தியக்கூறுகள் இருந்தும் அதனை அரசு கண்டுகொள்ளாமல் இருப்பது நியாயமற்றது, இருப்பினும் தற்போது செப்டம்பர் 15ஆம் தேதி அண்ணா பிறந்தநாள் கொண்டாட உள்ள நிலையில் அதனை முன்னிட்டு இஸ்லாமிய ஆயுள் சிறைவாசிகளை விடுதலை செய்ய வேண்டும் என்று எஸ்டிபிஐ கட்சி சார்பில் தமிழக அரசை வலியுறுத்தி நாங்கள் இந்த பேரணியை நடத்துகிறோம் என்று இக்கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்துள்ளார். அதாவது திமுகவும் ஆட்சிப் பொறுப்பை ஏற்றதிலிருந்து இந்த கோரிக்கையை நிறைவேற்றாமல் தங்கள் கோரிக்கையை நிராகரித்து வரும் நிலையில் திமுக அரசுக்கு எதிராக பேரணியை நடத்தி உள்ளது எஸ்டிபிஐ கட்சி! சனாதனத்தை எதிர்த்து இந்துக்களின் வாக்கு வங்கியை திமுக இழந்தது போல் தற்போது இந்த பேரணியால் சிறுபான்மையினரின் வாக்கு வங்கியையும் திமுக இழக்கப் போகிறது இதன் காரணமாக வருகின்ற தேர்தலில் திமுக பலத்த அடியை வாங்க போகிறது என இப்பொழுதே விமர்சனங்கள் எழுந்துள்ளன.