கடந்த முறை முதல்வர் ஸ்டாலின் வெளிநாடு பயணங்கள் மேற்கொள்ளும் பொழுது தனது குடும்பத்துடன் மொத்தமாக உல்லாச பயணம் செல்வது போல் சென்று வந்தார் என எதிர்க்கட்சிகள் முதல்வர் ஸ்டாலினை விமர்சித்து வந்தனர்.
அதாவது கடந்த முறை துபாய் பயணங்கள் மேற்கொண்டு அங்கு பல ஒப்பந்தங்களுக்கு கையெளுத்திடப்பட்டதாகவும் அதன் மூலம் தமிழகத்திற்கு அதிக முதலீடுகள் உருவாகும் இதனால் வேலை வாய்ப்புகள் அதிகரிக்கும் என்று துபாய் பயணம் சென்று வந்த பிறகு அறிவித்தது திமுக அரசு. ஆனால் பயணத்திற்கு செல்லும் பொழுதே தனது குடும்பம் மொத்தத்தையும் அழைத்து கொண்டு சென்றது கடும் விமர்சனம் மற்றும் எதிர்ப்புகளை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் தமிழகத்தில் பன்னாட்டு முதலீடுகளை உருவாக்க தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் வெளிநாட்டு பயணங்கள் மேற்கொள்ள இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அதாவது ஜப்பான் சிங்கப்பூர் போன்ற நாடுகளில் பயணங்கள் மேற்கொள்ள இருக்கிறார் முதல்வர் ஸ்டாலின். இந்த பயணத்தின் பொழுது இரு நாட்டு தலைவர்கள் மற்றும் தொழில் அதிபர்களை தமிழ்நாட்டில் நடைபெற உள்ள உலக முதலீட்டாளர்கள் மாநாட்டிற்கு அழைக்கவும் முடிவு செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
வெளி வருகின்ற தகவலின் படி முதல்வர் ஸ்டாலின் முதலில் சிங்கப்பூர் செல்ல உள்ளதாகவும் அங்கு வர்த்தகம் மற்றும் தொழில்துறை சார்ந்த 350 க்கும் மேலான கலந்து கொள்ள உள்ள வணிக நிறுவன பிரதிநிதிகள் உடன் உரையாடி பின்பு பல்வேறு புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் முதல்வர் கையெழுத்திட உள்ளதாகவும் தமிழக அரசு தெரிவிக்கிறது.
பிறகு அந்த பயணம் முடிந்த உடன் ஜப்பான் பயணம் மேற்கொள்கிறார் முதல்வர் மு க ஸ்டாலின். அந்நாட்டின் தலைநகர் டோக்கியோ மற்றும் ஒடிசா நகரங்களுக்குச் முதல்வர் செல்ல உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
பிறகு ஜப்பானில் உள்ள முதலீட்டாளர்களிடம் கலந்துரையாடி தமிழகத்தில் நடைபெற உள்ள மாநாட்டிற்கு அழைப்பு விடுக்கவும் மேலும் பல்வேறு முதலீடுகள் தமிழகத்திற்கு ஏற்றவாறு ஈர்க்கவும் ஒப்பந்தங்களில் கையெழுத்திட உள்ளார் என அரசு தரப்பில் தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்னன. ஜப்பானின் நடைபெற உள்ள மாநாடுகள் கலந்து கொண்ட பிறகு வெளிநாட்டு வாழ் இந்தியர்களின் தரப்பில் நடத்தப்படும் நிகழ்ச்சிகள் முதல்வர் ஸ்டாலின் கலந்து கொள்கிறார்.
கடந்த முறை குடும்பங்களோடு சென்ற பயணமாக இது இருக்காது எனவும் மேலும் வெளிநாட்டு பயணங்களில் பொழுது முதல்வர் ஸ்டாலின் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகள் அனைத்தையும் காணொளி வாயிலாக தமிழக அரசு அதிகாரிகள் இணைய உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதற்கு முன்னதாக துபாய் போன்ற வெளிநாடுகளுக்கு சென்று வந்ததில் ஏற்பட்ட பரபரப்பு அடங்குவதற்குள் தற்போது மீண்டும் ஒரு வெளிநாட்டு சுற்றுப்பயணத்தை முதல்வர் ஸ்டாலின் திட்டமிட்டுள்ளார். இந்த முறை தொழில்துறையில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக செல்ல உள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் அடுத்த கட்ட அரசியல் நகர்வுகளை எதிர்க்கட்சிகள் திட்டமிட்டு வருகிறது, கடந்த முறை முதலீடுகளை ஈர்ப்பதற்காக சென்ற வெளிநாட்டு பயணங்களுக்கே இன்னும் பலன்கள் கிடைக்கவில்லை. அப்போது கையெழுத்திடப்பட்ட ஒப்பந்தங்களுக்கு இன்னும் முதலீடுகள் பெறப்படவில்லை இந்த நிலையில் இந்த முறை எதற்காக செல்கிறீர்கள்? கடந்த முறை சென்று வந்த முதலீடுகள் எங்கே என கேள்வி எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டு வருகின்றனர்.
இது மட்டுமல்லாமல் முதல்வரின் வெளிநாட்டு பயணத்தில் எந்த தொழில் துறை சம்மந்தப்பட்ட நிறுவனங்களை சந்திக்கிறார், யாரையெல்லாம் பார்க்கிறார் என எதிர்க்கட்சிகள் கழுகுபோல் கண்கணிப்பதாகவும் முதல்வரின் துபாய் பயணத்திலேயே இதுவரை எதுவும் முதலீடுகள் வரவில்லை அதற்குள் இந்த சிங்கப்பூர், ஜப்பான் போன்ற நாடுகளுக்கு முதல்வர் பயணம் ஏன் எனவும் கேள்வி எழுப்ப திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. எப்படியும் முதல்வரின் இந்த சிங்கப்பூர் பயணம் பல அரசியல் அதிர்வலைகளை ஏற்படுத்தும் என தெரிகிறது.