24 special

தொடரும் ரெய்டுகள்...! பரிகாரம் செய்ய போனாரா முதல்வர் மனைவி...!

mk stalin, durga stalin
mk stalin, durga stalin

தமிழக அரசியல் குறிப்பாக தற்போது ஆளும் திமுகவிற்கு அச்சுறுத்தலாக போய்க் கொண்டிருக்கிறது அமலாக்கத்துறை ரெய்டுகள் மூலம், ஏற்கனவே கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு திமுகவின் முக்கிய அமைச்சராக உலா வந்த அமைச்சர் செந்தில் பாலாஜியை  அமலாக்கத்துறை குறி வைத்து ரெய்டு நடத்தி தற்பொழுது அவர் சிறையில் இருக்கிறார். அவர் மீது குவிக்கப்பட்டுள்ள குற்றப்பத்திரிகை 3000 பக்கத்தில் இருப்பதால் தற்பொழுது அவர் வெளியில் வர ஏன் ஜாமினில் கூட வெளியில் வர முடியாது எனவும் அவர் ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்து விட்டால் தற்பொழுது உள்ள திமுக ஆட்சியில் இன்னும் சில பெரிய தலைகள் உள்ளே செல்லக்கூடும் எனவும் தகவல்கள் வெளிவந்துள்ளன. இதனை தொடர்ந்து அடுத்த படியாக அமைச்சர் பொன்முடி, கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், ஐ பெரியசாமி ஆகியோர் வேறு அமலாக்க துறையின் பட்டியலில் வரிசையாக இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.


இது மட்டுமல்லாமல் கடந்த வாரத்திலும் கூட அமலாக்கத்துறை தமிழகத்தின் 20க்கும் மேற்பட்ட இடங்களில் அதுவும் குறிப்பாக மணல் மாஃபியா சம்பந்தப்பட்ட இடங்களில் இறங்கி பல ஆவணங்களை கைப்பற்றி சென்றுள்ளது. மேலும் அந்த கைப்பற்றப்பட்ட ஆவணங்களை வைத்து வரும் நாட்களில் அடுத்தடுத்த கட்டமாக ஆட்சியில் இருக்கக்கூடிய முக்கிய அமைச்சர்கள் மற்றும் தலைமைச் செயலகம் வரை அந்த ரெய்டு நீளும் எனவும் அரசியல் வல்லுனர்கள் கூறுகின்றனர். அந்த அளவிற்கு தற்பொழுது ஆட்சி நடப்பது ஒரு பக்கம் இருந்தாலும் அமலாக்கத் துறையின் ரெய்டுகள் வேகம் மறுபுறம் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இது மட்டுமல்லாமல் இன்னும் ஐந்து மாத காலத்தில் தேர்தல் வேறு நெருங்கி இருப்பதால் முதல்வர் மகனும் அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் பேசிய சனாதன பேச்சு வேறு தேசிய அளவில் திமுக விற்கு பின்னடைவை ஏற்படுத்தியது மட்டுமல்லாமல் இந்தியா கூட்டணியில் இருந்தும் திமுகவை கழட்டி விடும் அளவிற்கு சென்றுள்ளது. இப்படி பல சர்ச்சைக்குரிய விஷயங்கள் திமுகவை சுற்றி வருவதால் வாழ்நாளில் இதுவரை இல்லாத அளவிற்கு திமுக பின்னடைவை சந்தித்துள்ளது. இவ்வளவுக்கும் திமுக தற்போது ஆளுங்கட்சியாக இருக்கும் போதே பின்னடைவை சந்தித்தது குறிப்பிடத்தக்கது. 

இந்த நிலையில் இரண்டு முக்கிய கோவில்கள் கும்பாபிஷேகம் முடிந்த குறுகிய காலத்திலேயே முதல்வர் ஸ்டாலின் மனைவி சென்று அங்கு வழிபட்டுள்ளார், மயிலாடுதுறையில் உள்ள மாயூரநாதர் கோவில் மற்றும் வதான்யேஸ்வரர் கோவில்களில் முதல்வர் ஸ்டாலினின் மனைவி துர்கா ஸ்டாலின் வழிபாடு செய்து சாமி தரிசனம் செய்தார். மேலும் சிறப்பு பூஜைகளும் நடத்தப்பட்டது. மயிலாடுதுறை மாயூரநாதர் சுவாமி கோவில் கடந்த 3ம் தேதி அன்றும் வதான்யேஸ்வரர் கோவில் கடந்த 10ம்  தேதி அன்றும் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதனை தொடர்ந்து இரு கோவில்களிலும் முதலமைச்சர் ஸ்டாலின் மனைவி சிறப்பு வழிபாடு செய்து சுவாமி தரிசனம் மேற்கொண்டது மட்டுமல்லாமல் சிறப்பு பூஜைகள் வேறு செய்ததாகவும் சில தகவல்கள் கிடைத்துள்ளன. 

இப்படி முதல்வர் ஸ்டாலின் மனைவி கோவிலுக்கு சென்றது பற்றி விசாரித்தால் முதல்வர் ஸ்டாலின் மனைவி பிறந்த ஊர் மயிலாடுதுறை மாவட்டத்தில் வருகிறது அதனால் அங்கு கோவில்களுக்கு சென்றுள்ளார் என சிலர் கூறுகின்றனர், இன்னும் சிலர் ஆதீனங்கள் முதல்வர் குடும்பத்திற்கு அழைப்பு விடுத்ததனால் அவர் அங்கு சென்று இருக்கலாம் என கூறுகின்றனர், மேலும் சிலரிடம் பேசிய போது கும்பாபிஷேகம் செய்து சில நாட்களில் அதுவும் தற்பொழுது மயிலாடுதுறை மாயூரநாதர், அபயாம்பிகை கோவில் கும்பாபிஷேகம் செய்யப்பட்டது மிகவும் பழமையான கோவில், சக்தி வாய்ந்த கோவில் கும்பாபிஷேகம் செய்யப்பட்ட சிலது நாட்களிலேயே அங்கு சென்று சிறப்பு பூஜைகள் நடத்தினால் இன்னல்கள் தீரும் என்றும் கூறுகின்றனர்.தற்பொழுது ஆட்சியில் நடக்கும் பின்னடைவுகளை சமாளிப்பதற்காக கூட முதல்வர் மனைவி சென்று அங்கு பரிகாரம் செய்திருக்கலாம் எனவும் விமர்சனங்கள் எழுந்துள்ளன..