24 special

கடும் அப்சட்டில் திமுக சீனியர்கள்.....! சமாதானப்படுத்த திமுக தலைமை போட்ட மாஸ்டர் பிளான்...!

Mkstal
Mkstal

சில மாதங்களாகவே தமிழகத்தை ஆளும் கட்சியான திமுகவிற்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது காரணம் திமுகவில் உள்ள முக்கிய அமைச்சர்களான செந்தில் பாலாஜி பொன்முடி மற்றும் தங்கம் தென்னரசு கே கே எஸ் ஆர் ராமச்சந்திரன் ஆகியோர் வழக்கில் வசமாக சிக்கி இருப்பதும், சில மாவட்டங்களில் எம்பியாக இருப்பவர்கள் பணிகளை சரிவர செய்யாமல் மக்களிடமிருந்து திட்டு வாங்குவதும் இது மட்டுமல்லாமல் மாமன்ற கூட்டங்கள் நகர மன்ற கூட்டங்களில் நடுவருக்கும் கவுன்சிலருக்கும் இடையே கட்சிப் பிரச்சனைகள் வெடிப்பதால் இதை சமாளிப்பதற்கு வழி தெரியாமல் திமுக தலைமை குழப்பத்தில் இருந்து வருகிறது என தகவல்கள் கிடைத்துள்ளன.


இதுமட்டுமில்லாமல் திமுக கட்சியில் உள்ள மூத்த தலைவர்கள்  திமுக தலைமை மீது கடும் அதிருப்தியில் இருந்து வந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் திமுகவில் உள்ள மூத்த தலைவர்களை சமாதானம் செய்து கௌரவிக்கும் விதமாக திமுக தலைமை மாஸ்டர் பிளான் ஒன்றை போட்டுள்ளது. 

அதாவது வருகின்ற செப்டம்பர் 17ஆம் தேதி வேலூர் மாவட்டத்தில் முப்பெரும் விழா நடைபெறும் என திமுக தலைமை கழகம் அறிவித்துள்ளது.மேலும் எந்தெந்த தலைவர்கள் என்னென்ன விருதுகள் பெற போகிறார்கள் என்ற பட்டியலையும் வெளியிட்டுள்ளதால் திமுகவில் உள்ள மூத்த தலைவர்களை சற்று சமாதானப்படுத்த முடியும் என முற்பெரும் விழா குறித்து திமுக தலைமை அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

அந்த அறிவிப்பில் தமிழின தலைவர் கலைஞர் நூற்றாண்டு விழா மற்றும் திமுகவின் பவள விழா ஆண்டு செப்டம்பர் மாதம் 17ஆம் தேதி வேலூரில் நடைபெறும் என்று தேதியுடன் குறிப்பிடப்பட்டுள்ளது.இந்நிலையில் வழக்கம் போல பெரியார் விருது அண்ணா விருது கலைஞர் விருது பாவேந்தர் விருது பேராசிரியர் விருது என அனைத்து விருதுகளும் இந்த முப்பெரும் விழாவில் வழங்கப்படும் நிலையில் பெரியாரின் விருது மயிலாடுதுறை சத்தியசீலன் அவர்களுக்கு ம் அண்ணா விருது மீஞ்சூர் சுந்தரம் அவர்களுக்கும் கலைஞர் விருது பெரியசாமி அவர்களுக்கும் பாவேந்தர் விருது தென்காசி மல்லிகா கதிரவன் அவர்களுக்கும் பேராசிரியர் விருது பெங்களூர் ராமசாமி அவர்களுக்கும் வழங்கப்படும் என்ற பட்டியல் வெளியாகி உள்ளது. 

இப்படி வரிசையாக விருதுகளை அளித்துவிட்டு திமுக மூத்த தலைவர்களை சரி செய்து விடலாம் என்ற எண்ணத்தில் திமுக தலைமை இந்த அறிவிப்பை வெளியிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் பின்னணியை விசாரித்த போது திமுகவில் தற்போது சீனியர்களான   கேகே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன் துரைமுருகன் மற்றும் கே என் நேரு ஆகியோர் திமுக தலைமை மீது அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது. 

மேலும் முதல்வர் ஸ்டாலின் தற்பொழுது கருணாநிதி இருந்தது போல் இருக்கவில்லை என்றும் இவர் அதிகம் கட்சி விஷயங்களை கலந்துரையாடவில்லை என்றும்  இதனால் கட்சியின் பிரச்சனைகள் அதிகம் வருகிறது என்றும் இதையெல்லாம் கண்டு கொள்ளாமல் இருக்கின்ற முதல்வர் ஸ்டாலின் மீது திமுக மூத்த தலைவர்கள் கடும் அதிருப்தியில் இருந்ததாக தெரிகிறது மேலும் இந்த செய்தி திமுக தலைமைக்கு தெரிய வந்தவுடன் முப்பெரும் விழா ஒன்றை நடத்த முடிவு செய்துள்ளது.

இப்படியே சீரியர் திமுக தலைமை மீது கடும் அதிருப்தியில் இருந்தால் வரும் தேர்தலில் யாரும் வேலை செய்ய மாட்டார்கள் இதனால் மேலும் திமுகவிற்கு பின்னடைவு தான் ஏற்படும் என்று எண்ணி திமுக தலைமை இந்த முடிவு செய்திருப்பதாக இந்த விழாவை நடத்தி இருப்பதாக சில தகவல்கள் தெரிவிக்கின்றன.